ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

விஸ்வா, “என்னாலும் அவளை எதிரியா பார்க்க முடியாது. அவ செஞ்சதை வெறுக்கறேன். ஆனா அவளை நான் வெறுக்கலை”

வனிதா, “அப்பறம் ஏன் விஸ்வா என்னை கஷ்டப் படுத்தணும்-ன்னு நினைக்கறே?”

விஸ்வா, “நான் அப்படி நினைக்கலை”

வனிதா, “வசியை என் கிட்டே இருந்து பிரிச்சு சிங்கப்பூருக்குக் கூட்டிட்டுப் போறது என்னை கஷ்டப் படுத்தறது இல்லையா?”

அமுதா, “வாட்?”

விஸ்வா, “அதைப் பத்தி நான் இன்னும் முடிவு எடுக்கலை”

வனிதா, “அப்படி முடிவு எடுத்தா என்ன செய்யறதா இருக்கே”

விஸ்வா, “ஒன்ஸ் டைவர்ஸ் ஆனதுக்குப் பிறகு, வசி என் கூட விக்கி உன் கூடன்னு முடிவானதுக்குப் பிறகு அவளை நான் எங்கே கூட்டிட்டுப் போனா உனக்கு என்ன?”

அமுதா, “விஸ்வா, This is not acceptable to me. இப்பவே நான் ஜட்ஜுக்கு இந்த விவாகரத்து கூடாதுன்னு சொல்லப் போறேன்”

வனிதா, “அதுக்குத் தேவை இல்லை மேம். அவரோட விவாகரத்துப் பத்திரத்தில் என்ன மாற்றங்கள் வேணும்ன்னு ஒரு விண்ணப்பம் கொண்டு வந்து இருக்கேன். அதில் அவர் கையெழுத்துப் போட்டா போதும்”

விஸ்வா, “என்ன மாற்றம்?”

வனிதா, “என் குழந்தைகளை விட்டு நான் பிரிய மாட்டேன். அது மட்டும் தான் மாற்றம். இதுக்கு நீங்க ஒத்துக்காம நான் நடத்தை கெட்டவன்னு சொல்லி கேஸ் போட்டாலும் சரி. கோர்ட்டில் வாதாடுவேன். குழந்தைகளை உன்னால் என் கிட்டே இருந்து பிரிக்க முடியாது”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.