ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 46

புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் விஸ்வா, “ஹனி, நான் அவசரமா சிங்கப்பூர் போகணும். ஒரு டிஸ்கஷன். நீ டெல்லி போ. அஞ்சு நாள் ஃபேர் அது. மூணாவுது நாள் நான் அங்கே வந்து ஜாயின் பண்ணிக்கறேன். ஃபேர் முடிஞ்சதுக்குப் பிறகு ரெண்டு நாள் நாம் அங்கே இருந்துட்டு வரலாம். ஓ.கே?”

வனிதா, “நிச்சயம் வந்துடுவே இல்லை? நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணறேன் விஸ்வா”

விஸ்வா, “தெரியும் டியர். நிச்சயம் வந்துடுவேன்” என்று உறுதி அளித்து விட்டுச் சென்றான் … ஆனால் அந்த கண்காட்சி முடியும் வரை அவன் வரவில்லை.

நான்காம் நாள் அவளது கோபத்துக்கும் ஆதங்கத்துக்கும் அளவில்லை. கடந்த மூன்று நாட்களும் சந்திரசேகர் அவளிடம் நேருங்கிப் பழக முனைந்ததை தடுத்தவாறு இருந்தாள். நான்காம் நாள் மாலை ஒரு டின்னர் இருந்தது. அதில் அவர்களது வாடிக்கையாளர் பலரும் பங்கேற்றனர் என்றதால் சந்திரசேகர், “வனிதா, நம்ம கஸ்டமர்ஸ் நிறையப் பேர் வருவாங்க. நீயும் வாயேன். எனக்கு உதவியா இருக்கும்” என்று அவளை அழைத்தார்

டின்னருக்கு வந்த வாடிக்கையாளர்களை கவனித்துக் கொள்வது போல அவளுக்கும் ஒயின் கொடுத்தவாறு இருந்தார். எப்போதாவுது ஒரு க்ளாஸ் ஒயின் குடித்துப் பழகி இருந்த வனிதா அந்த டின்னர் முடியும் போது மூன்று க்ளாஸ் அளவுக்கு குடித்து இருந்தாள்.

அவர்கள் இருவரும் அடுத்தடுத்த அறையில் தங்கி இருந்தனர். இரு அறைகளுக்கும் இடையில் ஒரு நுழை வாயில் இருந்தது. அதற்கு இரு அறைகளிலும் கதவுகள் இருந்தன. எப்போதும் தனது அறைப் புரம் இருந்த கதவை தாளிட்டு வைத்து இருந்தாள். டின்னரின் போது சந்திரசேகர் அறைக்கு வந்து அதை திறந்து விட்டு இருந்தார்.

வனிதா லேசான தள்ளாட்டத்துடன் வந்து படுக்கையில் சாய்ந்த பிறகு சந்திரசேகர் அவளது அறைக்குள் நுழைந்தார். மதுவின் போதை, பல மாதங்களாக தேக்கி வைத்து இருந்த விரக தாபம் எல்லாமும் சேர்ந்ததின் விளைவாக வனிதா சந்திரசேகருக்குக் கைப் பொம்மையானாள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் அனுபவித்தற்கும் மேலான நிறைவான சுகத்தைக் கண்டாள். அடுத்த நாளும் அவர் அணுகியதை அவள் தடுக்க வில்லை. தான் தவறு செய்கிறோம் என்று உணர்ந்தே செய்தாள். அவள் மறுப்புத் தெரிவித்த போது அவர்களது உறவு சந்திரசேகர் எக்காரணத்தைக் கொண்டும் விஸ்வாவுக்குத் தெரியப் போவது இல்லை என்று உறுதிமொழி அளித்தார்.

அவள் டெல்லியில் இருந்து திரும்பி வந்து ஒரு வாரத்துக்குப் பிறகே விஸ்வா வீடு திரும்பினான். திரும்பிய பிறகும் அவர்களது உறவில் நெருக்கம் அதிகரிக்கவில்லை.

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.