ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 46

வாசன், “Yes of course. Quite easily and with definite positive results, முதல் பிரச்சனையை ரொம்ப சுலபமா சரி செஞ்சுடலாம். ஒரு சின்ன ஹார்மோன் ட்ரீட்மென்ட். ஒரு மாத கோர்ஸ் போதும். அதுக்கு முன்னாடி அவசியம்ன்னா வையக்ரா ப்ரிஸ்க்ரைப் பண்ணி இருக்கேன். ரெண்டாவுது பிரச்சனைக்கு எங்க செக்ஸ் தெரபிஸ்ட்கிட்டே அவரை அனுப்பினேன். ஆனா, அவர் இவரை ட்ரீட் பண்ண முடியாதுன்னு சொல்றார்”

ராம், “ஏன்?”

வாசன், “அந்தத் தெரபிக்கு அவருடைய செக்ஸ் பார்ட்னர், அதாவுது அவரது மனைவியும் அந்த தெரபியில் கலந்துக்கணும்ன்னு சொன்னார்”

ராம், “என்ன மாதிரி தெரபி?”

வாசன், “அந்த தெரபி ஆறு வாரம். ஒவ்வொரு வாரமும் சில செக்ஸுவல் எக்ஸர்ஸைஸ் சொல்லுவார். அதை வீட்டில் அவருடைய செக்ஸ் பார்ட்னருடன் அவர் செஞ்சு பயிற்சி செய்யணும். ஆறு வாரம் முடியும் போது குறைந்தது பதினைந்து நிமிடங்கள் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்று இருப்பார். இதைப் பத்தி சொன்ன போது தன் மனைவியை அழைச்சுட்டு வர முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாராம்”

ராம், “அந்த ஹார்மோன் ட்ரீட்மெண்டுக்கு என்ன சொன்னான்?”

வாசன், “அதுக்கு அவர் எதுவும் சொல்லலை. நான் சொன்ன தினங்களில் தவறாம வந்து இன்ஜெக்ஷன் போட்டுட்டுப் போறதா சொன்னார்”

டாக்டர் வாசனிடம் இருந்து விடைபெற்ற பிறகு ராம் விஸ்வாவை பல முறை கைபேசியில் அழைத்தும் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

வீட்டுக்குச் சென்றபோது வசியும் விக்கியும் அங்கு இருப்பதைக் கண்டவன் தன் அத்தையிடம் வனிதாவைப் பற்றி விசாரிக்க, வனிதா தன் வீட்டில் இருக்கப் போவதாகவும் விஸ்வா மட்டும் அன்று இரவைக் கழிக்க அங்கு வருவதாகவும் சொன்னார். ஆனால் இரவு முழுவதும் விஸ்வா வீடு திரும்பவில்லை.

வனிதாவை அந்த நேரத்தில் அழைத்து கேட்க விரும்பவில்லை.

அடுத்த நாள் காலை விஸ்வாவின் வீட்டுத் தொலைபேசியில் அழைத்த போது வனிதா பதிலளித்தாள்.

ராம், “ஹாய் வனிதா, விஸ்வா இருக்கானா?”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.