ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

அமுதா, “வனிதா, இது உன் உரிமை. அதை நான் தடுக்க முடியாது. ஆனா இந்த சமயத்தில் நீ அப்படி செஞ்சா விஸ்வா அதை எப்படி எடுத்துப்பா-ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு”

வனிதா, “லாயரை மீட் பண்ணப் போறேன். ஆனா கோர்ட்டில் தாக்கல் செய்வதுக்கு முன்னாடி விஸ்வாகூட பேசப் போறேன். அவர் ஒத்துக்கலைன்னா மட்டும் தான் கோர்ட்டில் தாக்கல் செய்வேன்”

பெருமூச்செறிந்த அமுதா, “There is nothing that I can say … நீ சொல்வது முழுக்க முழுக்க நியாயமானது. … சரி, எப்போ மீட் பண்ணலாம்? அடுத்த கட்டத்துக்குப் போறதுக்கு முன்னாடி இன்னும் நாம் பேச வேண்டியது நிறைய இருக்கு”

வனிதா, “நான் நாளைக்கு ஃபோன் பண்ணறேனே?”

அமுதா, “சரி”

வீட்டில் தனியே அமர்ந்து இருந்தவளின் மனம் குமுறியது. அவளுகுள்ளே ஒரு பெரிய பட்டி மன்றம் நடந்தது ….

‘சோ! என்ன செய்யப் போறே?’

‘No way he can take my kids away’

‘அதை விடு உன் எதிர்ப்பை மீறி விஸ்வா வசியை கூட்டிட்டு போக முடியாது. உன் வாழ்க்கையைப் பத்தி யோசி’

‘என் வாழ்க்கை இனி என் குழந்தைகளைச் சுற்றி மட்டும் தான்’

‘இந்த டைவர்ஸ்ஸை எதிர்த்து போராட மாட்டியா?’

‘போராடி என்ன பிரயோஜனம்? அப்படியே கோர்ட் டைவர்ஸை ரிஜெக்ட் பண்ணினாலும் விஸ்வாவால என்னோடு சேர்ந்து வாழ முடியுமா-ன்னு தெரியலை’

‘இவ்வளவும் நடந்ததுக்கு அவனும் காரணம்-ன்னு புரிஞ்சுகிட்டா அவன் மனம் மாற வாய்ப்பு இருக்கு இல்லையா?’

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.