ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 46

ராம், “மறுபடி ஏழு மாசத்துக்கு முன்னாடி எப்போ தொடங்குச்சு?”

விஸ்வா, “டெல்லியில். நானும் வனிதாவும் போறதா இருந்த ட்ரேட் ஃபேர் அப்போ”

ராம், “நீ கடைசி நிமிஷத்தில் சிங்கப்பூர் போயிட்டு டெல்லிக்குப் போக முடியாம போச்சே அப்போவா?”

விஸ்வா, “அஞ்சு நாள் ஃபேர் அது. நான் மூணாவுது நாள் டெல்லிக்குப் போயிடலாம்-ன்னு நினைச்சேன். என்னால முடியலை. நாலாவுது நாளும் அஞ்சாவுது நாளும் பெரிய டின்னர் பார்டி இருந்து இருக்கு. அந்த ரெண்டு நாளும் டின்னர் பார்ட்டியில் சந்திரசேகர் அவளுக்கு ஒயின் ஊத்திக் கொடுத்து படுக்கைக்கு கூட்டிட்டுப் போயிருக்கான்”

ராம், “அதற்குப் பிறகு?”

விஸ்வா, “அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கிடைச்ச சுகம் மறுபடி வேணும்ன்னு தொடங்கி இருக்கா”

ராம், “நீ ரொம்ப சினிகலா யோசிக்கறே. ஆனா உன் ஆதங்கம் புரியுது. நீ சொல்ற மாதிரியே வெச்சுப்போம். ஏன் நாலு வருஷமா இல்லாம திடீர்-ன்னு மறுபடி அந்த சுகம் வேணும்-ன்னு முடிவு எடுத்தா?”

விஸ்வா, “அவ செஞ்சது தப்பு. என்னை முதுகில் குத்தற மாதிரி. எதுக்கு செஞ்சான்னு தெரிஞ்சு என்னா ஆகப் போகுது?”

ராம், “விஸ்வா, அரைச்ச மாவை திரும்பத் திரும்ப அரைக்காதெ, எத்தனை தடவைடா சொல்லறது. அவ செஞ்சது தப்புதான். ஒத்துக்கறேன். அவ அப்படி செஞ்சதுக்கான காரணம் தெரிஞ்சா உனக்கு அவளை மன்னிப்பது சுலபமா இருக்கும். அந்தக் காரணங்களில் எதாவுது உன்னால நேர்ந்து இருந்தா நீ நிச்சயம் அதுக்குப் பொறுப்பு ஏத்துக்கணும். Instead of simply victimising her”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.