ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

வனிதா, “இல்லை விஸ்வா. நான் என்னை குறை சொல்லிக்கறேன். எனக்கு உணர்ச்சிகள் ரொம்ப இருந்தது. அதை கட்டுப் படுத்த முடியலைன்னா நான் என்ன செஞ்சு இருக்கணும்? சுயமா அந்த உணர்ச்சிகளை அடக்க என்ன வடிகால்-ன்னு யோசிச்சு இருக்கணும்”

விஸ்வா, “அதான் ஏற்கனவே அனுபவிச்ச வடிகால் இருந்ததே”

வனிதா, “அந்த வடிகாலை டெல்லி ஃபேருக்குப் போறவரைக்கும் நான் தேடிப் போகலை. டெல்லிக்கு நீ வரேன்னு சொல்லிட்டு கடைசி நிமிஷத்தில் வராம போனப்போ உன் மேல் ரொம்ப கோவப் பட்டேன். அந்த சமயத்தில் என் கோவத்தையும் விரக தாபத்தையும் சந்திரசேகர் பயன் படுத்திட்டார். அதுவும் என் தப்புதான். அந்த சமயத்தில் ஒரு மூணாவுது மனுஷன் தொடற மாதிரி எனக்கு தோணலை. ஏற்கனவே அவர்கூட இருந்த அனுபவம். என் உணர்ச்சிக்கு அடிமையாயிட்டேன்”

விஸ்வா, “அதான் திரும்ப வந்ததுக்குப் பிறகு வாரம் தவறாம அவர்கிட்டே போனியாக்கும்”

வனிதா, “திரும்பி வந்து ஒரு மாசம் அவர் என்னைக் கேட்டுட்டே இருந்தார். நான் போகலை. உன் கூட இருக்கணும்-ன்னு ரொம்ப முயற்சி செஞ்சேன். ஒவ்வொரு நாளும் நீ எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தாலும் அது வரை முழிச்சுட்டு இருந்து உனக்காக நல்ல ட்ரெஸ் பண்ணிட்டு ஃப்ரெஷன் அப் பண்ணிட்டு உனக்குப் பிடிச்ச பெர்ஃப்யூம் போட்டுட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீகூட ரொம்ப கிண்டல் அடிச்சே விஸ்வா. God! I acted like a slut in front of you. And still you were not interested in making love to me. நமக்கு இடையே இருந்த அன்னியோன்னியம் கூட காணாமப் போயிருந்தது. அதுக்குப் பிறகு அவர் என்னை கேட்டப்ப தப்பு செய்யறோம்ன்னு தெரிஞ்சும் என் உடல் பசிக்காக அவர்கிட்டே போக ஒத்துகிட்டேன். முழுக்க முழுக்க என் தப்புதான். நான் என் உணர்ச்சிகளை கட்டுப் பாட்டில் வெச்சுக்கலை”

விஸ்வா, “சரி. இப்ப என்ன சொல்ல வரே?”

வனிதா, “மேடம் அடுத்த கட்டத்தில் காரணங்களை ஒருத்தரோடு ஒருத்தர் பேசி புரிஞ்சுக்கணும்-ன்னு சொன்னாங்க. அதனால தான் நான் அதை எல்லாம் சொன்னேன். நடந்தது எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம். இனி நடக்க வேண்டியதை பத்தி மட்டும் பேசலாம்” என முற்றுப் புள்ளி வைத்தாள்.

அமுதா, “வனிதா நீ உன் சார்பில் சொன்னதை முழுக்க முழுக்க நான் ஆமோதிக்க மாட்டேன். இருந்தாலும் இது உங்க ரெண்டு பேர் வாழ்க்கை பிரச்சனை. ஆனா, விஸ்வாவின் மேல் எந்தத் தப்பும் இல்லைன்னு நீ சொல்வதை நான் ஒத்துக்கப் போறது இல்லை”

வனிதா, “அவர் மேல தப்பு கண்டு பிடிச்சு என்ன சாதிக்கப் போறீங்க?”

அமுதா, “நான் என்ன சொன்னேன்? இந்த கேஸ் விவாகரத்தில் முடிஞ்சாலும் நீங்க ரெண்டு பேரும் நண்பர்களாகத்தான் பிரியணும்-ன்னு சொன்னேன். மறந்துடுச்சா?”

வனிதா, “அவர் குழந்தைகளின் அம்மா நான். என்னை அவர் எதிரியாப் பார்த்தா நான் அதைத் தடுக்க முடியாது. நான் அவரை வெறும் நண்பனா பார்க்கலை. எப்பவும் பார்த்தது இல்லை. என் கணவரா, லவ்வரா மட்டும் தான் பார்த்தேன். பார்த்துட்டு இருக்கேன். சாகற வரைக்கும் பார்த்துட்டு இருப்பேன். அதை அவரால் தடுக்க முடியாது”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.