ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

சுமதி, “இதுக்கெல்லாம் PML தான் காரணம்-ன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வனிதா”

வனிதா, “இல்லை மேடம். இது நான் தடுத்து இருக்கக் கூடியது. PMLஐ இதுக்கு காரணமா நினைச்சு கஷ்டப் படாதீங்க”

சுமதி, “Any how … உன் கவுன்ஸிலிங்க் எப்படிப் போயிட்டு இருக்கு?”

வனிதா, “ம்ம்ம் … போயிட்டு இருக்கு”

சுமதி, “Any chance of reconcilation?”

வனிதா, “தெரியலை”

சுமதி, “எப்போ முடியும்?”

வனிதா, “தெரியலை இன்னும் ஒரு மாசம் ஆகலாம்ன்னு தோணுது”

சுமதி, “விஸ்வா பெங்களூரை விட்டுப் போறதுக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்கற மாதிரி தெரியுது”

வனிதா, “என்ன சொல்லறீங்க? PMLஇல் அவருக்கு CEO போஸ்ட் கொடுப்பதா கேள்விப் பட்டேனே?”

சுமதி, “நாம் கொலாபரேட் பண்ணும் ஜாப்பனீஸ் கம்பெனி அவனுக்கு Asia-Pacific Region Head போஸ்ட் ஆஃபர் பண்ணி இருக்காங்க. விஸ்வா அதுக்கு ஒப்புதல் கொடுத்து கொஞ்ச நாள் அவகாசம் கேட்டு இருக்கான். PMLஇல் அவனோட ரீப்ளேஸ்மெண்ட்டை செலக்ட் பண்ணறதில் இப்போ மும்முறமா இருக்கான்”

முகம் இறுகி கண் சிவந்த வனிதா, “எப்படி? டைவர்ஸுக்குப் பிறகு வசி தன்னோடு இருக்கணும்-ன்னு கேட்டு இருக்காரே?”

சுமதி, “அதனால தான் இதை உன் கிட்டே சொல்லறேன். Though he asked me to keep this to myself”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.