கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

சே… நினைவுகள்தான் மனுஷனுக்கு எதிரி. மனசார ஒருத்தனைக் காதலிச்சிட்டு காதலிச்சவனை விட்டு பிரிஞ்சி மனசுக்குள்ள வர்ற அவன் நினைப்பை வராதேன்னு சொல்றது எவ்வளவு பெரிய கொடுமை? மனதுக்குள் நொந்து போவாள். தனக்கு வந்த இந்த நிலைமை வேற எந்த பொண்ணுக்கும் வரக்கூடாதென சுகன்யா நினைக்கும்போதே, அவள் கண்கள் ஈரமாகி, மவுனமாக ஓசையில்லமால் அவள் அழத்தொடங்குவாள்.

சரியான தூக்கமில்லாமல், காலையில் தினமும் தலைவலியோடு படுக்கையைவிட்டு எழுவதும் அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது. எத்தனை நாளைக்கு அவனை மறக்கமுடியாம நான் அழணும்? இந்த கேள்விக்கு மட்டும் அவள் மனம், அவளுக்கு சரியான விடையைத் தரவில்லை.

சுகன்யா அன்று இரவும் செல்வாவின் நினைவால் அழ ஆரம்பித்தாள். மனம் வெகு வேகமாக டில்லியிலிருந்து சென்னையை நோக்கி ஓடியது. டில்லிக்கு வருவதற்கு முன் சென்னையில் நடந்ததை மனம் அசைபோட ஆரம்பித்தது.
“மிஸ் சுகன்யா… நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலே.” செல்வா அவள் முகத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.

“சாரி… இப்ப எனக்கு தலைக்கு மேல வேலையிருக்கு. நீங்க நினைச்ச நேரத்துக்கெல்லாம் என்னால எங்கேயும் வரமுடியாது.”

“உண்மைதான். பத்து நிமிஷத்துல லஞ்ச் டயம் ஆரம்பமாயிடும். இப்ப நீங்க என்கூட வந்துட்டா, உங்க புது ஃப்ரெண்ட் சுனிலுக்கு சோறு ஊட்டற முக்கியமான வேலையை யார் செய்வாங்க?” செல்வா தன் நாக்கை வாய்க்குள் சுழற்றிக்கொண்டான். கண்களில் அளவில்லாத எகத்தாளமிருந்தது.

செல்வா, சுகன்யாவை தன் வார்த்தைகளால் குதறியதும், சுகன்யாவுக்கு காலிலிருந்து தலைவரை பற்றி எரிந்தது. அவனுக்கு சூடாக பதில் கொடுக்க எத்தனித்தவள், சட்டெனத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“செல்வா… உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா? உங்க மனசு என்ன கல்லாயிடுச்சா?”

“மேடம்… என் மனசு கல்லா, இரும்பா, இந்த ஆராய்ச்சியை நீங்க ஓய்வா இருக்கும் போது வெச்சுக்குங்க; உங்க ஆசை அத்தானோட போன் வேற இப்ப லஞ்ச் அவர்ஸ்ல வரும். அதை நீங்க முக்கியமா அட்டண்ட் பண்ணணும் இல்லையா? அப்படியிருக்கும்போது, நான் கூப்பிட்டா நீங்க என் கூட வருவீங்களா? சே.. சே… நீங்க உங்க டயத்தை வேஸ்ட் பண்ணிகிட்டு இங்கே நிக்காதீங்க. கிளம்புங்க; கிளம்புங்க.” செல்வா அவளை கிண்டலும், நக்கலுமாக பார்த்து சிரித்தான்.

“ஓ.கே.. ஓ.கே.. செல்வா நான் ரெடி… யெஸ் அயாம் ரெடி.. எங்க போகணும் சொல்லுங்க?” வெடித்துவிடும் போலிருந்த தன் நெற்றியை ஒருமுறை இறுக நீவிக்கொண்டாள் சுகன்யா.

*****

சுகன்யாவும், செல்வாவும், கடற்கரையில் தாங்கள் வழக்கமாக சந்தித்துக்கொள்ளும் இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.