கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“இங்கப் பாருடி… நாலு பேரு பாக்கற எடத்துல உக்காந்து இருக்கோம். இப்ப நீ அழுது சீன் போடாதே. சீன் போட்டு கூட்டத்தை கூட்டிடாதே. பொம்பளை அழுதா… என்ன ஏதுன்னு கேக்காம, யார் பக்கம் தப்பு இருக்குன்னு பாக்காம, அவ பக்கத்துல நிக்கற ஆம்பிளைக்கு தர்ம அடி குடுக்கறதுக்கு ஊர்ல நாப்பது ஞாயஸ்தன் இருக்கான். நான் ஒதை வாங்கறதை பாக்கறதுக்கு உனக்கு ஆசையிருந்தா… நீ நல்லா அழுவுடீ…”

“அய்யோ.. என்ன அழக்கூட விடமாட்டியாடா நீ?”

“நான் உன்னை கெஞ்சிக்கேட்டுக்கறேன். எங்கிட்ட கொஞ்சம் நீ மரியாதையா பேசு. இல்லே எனக்கு கெட்ட கோவம் வரும்… சொல்லிட்டேன்.”

“செல்வா நான் என் காதலை காப்பத்திக்க உங்கிட்டே அழறேன்டா. உனக்கு அடிவாங்கி வெக்கறதுக்கு நான் அழலடா. நான் அழறது உனக்கு சீன் போடற மாதிரி இருக்கா? நீ மனுஷனே இல்லேடா.” விருட்டென நகர்ந்து அவன் சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.

“சுகன்யா… தள்ளி உக்காருடீ… சொல்லிக்கிட்டே இருக்கேன்..
“ செல்வா அவள் பிடியை தன் சட்டையிலிருந்து வேகமாக உதறினான். அவன் உதறிய வேகத்தில் சுகன்யா அவனை விட்டு, ஓரடி தள்ளிப் போய் மணலில் விழுந்தாள். அவன் சட்டையின் மேல் பொத்தான் பிய்ந்து காற்றில் ஆடியது.

“செல்வா… இதுக்கு என்னடா அர்த்தம்?”

“நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். என்னை திரும்ப திரும்ப வாடா போடான்னு பேசி என் கோபத்தைக் கிளறாதேடீ. நான் சொல்றதை நல்லா காது குடுத்து கேட்டுக்கோ. நம்ம நிச்சயதார்த்தம் கேன்சல். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழமுடியாதுன்னு எனக்கு நல்லாத்தெரிஞ்சு போச்சு. எனக்கு நீயும் வேண்டாம். உன் காதலும் வேண்டாம். உனக்கும் எனக்கும் இடையில இனிமே எந்த உறவும் இல்லே. உன்னை நான் கையெடுத்து கும்பிடறேன். என்னை நீ விட்டுடு.” செல்வா தன் கைகளை குவித்து அவளை கும்பிட்டான். அவனுக்கு மூச்சிறைத்துக்கொண்டிருந்தது.

முரட்டுத்தனமாக பேசிக்கொண்டிருந்த செல்வா, தன்னையும் மீறிய கோவத்தில், என்ன செய்கிறோம் என்பதனை உணராதவனாக, அவர்களுடைய நிச்சயதார்த்தத்தன்று, சுகன்யா அவனுக்கு ஆசையுடன் அணிவித்த தங்க மோதிரத்தை தன் விரலிலிருந்து விருட்டென உருவி, சுகன்யாவின் மடியில் வீசி எறிந்தான்.

“மிஸ் சுகன்யா, இனிமே நீங்க உங்க இஷ்டப்படி எவன் கூட வேணா பேசலாம். எவன் பின்னாடி வேணா பைக்ல உக்காந்துகிட்டு உங்க விருப்பப்படி இந்த ஊரைச் சுத்தி சுத்தி வரலாம். பேசலாம். சிரிக்கலாம். ஏன் கட்டிப்பிடிச்சிக்கிட்டு கூத்தடிக்கலாம். சத்தியமா நான் உங்க குறுக்கே வரமாட்டேன். குட் பை.”

சுகன்யாவின் பதிலுக்காக செல்வா காத்திருக்கவில்லை. அவளைத் திரும்பிப் பார்க்காமல் அவன் வேகமாக நடந்தான். சுகன்யா திக்பிரமைப்பிடித்தவளாக பேச்சு மூச்சில்லாமல் தன் மடியில் வந்து விழுந்த மோதிரத்தையே வெறித்துக்கொண்டு பார்த்தவளாக உட்கார்ந்திருந்தாள்.

செல்வா கடற்கரை மணலில் வேகமாக இரண்டடிகள் நடந்திருப்பான். என்ன நினைத்தானோ சட்டென நின்றான். ஒரு முறை தான் நின்ற இடத்திலிருந்தே சுகன்யாவை திரும்பிப் பார்த்தான். நான் இவ்வளவு நேரம் பேசினதும், கடைசியா நாலு பேர் எதிர்லே, நல்லநேரத்துல அவ போட்ட மோதிரத்தை, தனிமையில இப்ப கழட்டி எறிஞ்சதும் சரிதானா? இந்த கேள்வி புயலாக அவன் மனதில் எழுந்தது. தன் மனம் எழுப்பிய வினாவிற்கு தன் மனதுக்குள்ளேயே ஒரு வினாடி விடையை தேடினான் அவன்.

செல்வா… நீ ஒரு முடிவை எடுத்துட்டேடா. அது சரியா? தப்பான்னு இப்ப எதுக்காக திரும்பவும் யோசனை பண்றே?

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.