கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“அக்கா… நீ சும்மா இருக்கியா ஒரு நிமிஷம்? சுகன்யா… உங்களுக்குள்ள என்னப் பிரச்சனைங்கறது எங்களுக்குத் தெரிஞ்சுத்தான் ஆகணும். ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சிப் போறதுக்குப் பேருதான் வாழ்க்கை. நாலு பேரு நடுவுல அவங்க கொடுத்த சீர்வரிசையை கூரியர்ல்ல அனுப்பிடலாம். போஸ்ட்ல அனுப்பிடலாம்ன்னு, எடுத்தமா, கவுத்தமான்னு இப்படில்லாம் நீ பேசறது நல்லாயில்லே.” ரகு தன் தன் மருமகளுக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தார்.

“மாமா… எங்களுக்குள்ள ஆயிரம் வேறுபாடுகள் இருக்கு. எனக்கு பிடிச்ச விஷயங்கள் அவனுக்குப் பிடிக்காம இருக்கலாம். அவனுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கற சில சமாச்சாரங்கள்ல்ல எனக்கு பிடிப்பு இல்லாமல் போகலாம். இதெல்லாம் பரவாயில்லே. என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும். ஆனா அவன் என்னைச் சந்தேகப்படறான்.”

“சந்தேகப்படறானா? என்னம்மா சொல்றே?” குமாரசுவாமி முகத்தில் அதிர்ச்சியுடன் சுகன்யாவை நோக்கினார்.

“அப்பா… நான் ஓப்பனா சொல்றேன். அவன் என் நடத்தையைச் சந்தேகப்படறான். சந்தேகப்படற ஒருத்தன் கூட வாழ்க்கை நடத்தறது ரொம்பக் கஷ்டம்பா.” சுகன்யா தன் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.

“நீங்க ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சீங்கம்மா. இவ்வளவு நாள்லே, நீங்க ஒருத்தரை ஒருத்தர் கொஞ்சமாவது புரிஞ்சுகிட்டு இருக்கணுமே? என்ன இப்படி பேசறே நீ?”

“உண்மைதான். என் கூட வேலைசெய்யறவன் கூட பேசினா, அவன்கிட்ட நீ ஏன்டீ சிரிச்சிப் பேசறேங்கறான். அவனோட ஏன்டீ நீ டீ குடிக்கப் போனேங்கறான்? இவனோட நீ ஏன் உக்காந்து சாப்பிடறேங்கறான்? என்னையும் எங்கூட வேலை செய்யற சுனில்ங்கறவனையும் இணைச்சு தப்புத்தப்பா பேசறான்.

“இது என்னடீ கொடுமை..?” கனகா தன் தலையை தோளில் நொடித்தாள்.

“சம்பத் அத்தான் எனக்கு போன் பண்ணா, அவங்கூட ஏன் பேசறேங்கறான்? நான் யாருகூட பேசணும்… பேசக்கூடாதுங்கறதை இவன் யாரு சொல்றதுக்கு?”

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.