கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“என் பர்சனல் விஷயத்துல, யாரும் அனாவசியமா தலையிடாம இருந்தா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்.” விருட்டெனத் தன் தலையை உயர்த்தி மீனாவை ஒரு முறை முறைத்த செல்வா, தான் உட்கார்ந்திருந்த பெஞ்சை விட்டு எழுந்து, மாடிப்படிக்கட்டை நோக்கி நடந்தான். வேப்பமரத்தின் நிழலில், மாடிப்படிக்கட்டின் கைப்பிடியில் சாய்ந்துகொண்டு, தன் வலது கை விரல்களின் நகத்தை அவசர அவசரமாக கடித்து துப்ப ஆரம்பித்தான். சீனுவின் முகத்தில் ஈயாடவில்லை. விருட்டென திரும்பி மீனாவின் முகத்தை ஒருமுறைப்பார்த்தான் அவன்.

“அண்ணா… இவரு உனக்கு க்ளோஸ் ஃப்ரெண்டா இருக்கலாம். நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது, உங்களுக்குள்ள எப்படி வேணா பேசிக்குங்க. என்ன வேணா பேசிக்குங்க. அதைப்பத்தி எனக்கு கவலையில்லே. இவரு இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆகப்போறவர். என் எதிர்ல இவர்கிட்ட நீ கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லாயிருக்கும். இனிமே பேசறதுக்கு முன்னே, யார்கிட்ட என்ன பேசறோம்ங்கறதையும் கொஞ்சம் யோசனை பண்ணி பேசு.” மீனாவுக்கு சட்டென அவள் மூக்குக்கு மேல் கோபம் வந்தது.

“பேசாம இருடீ…” கண்களால் பேசிய சீனு மீனாவின் இடது முழங்கையைப் பிடித்து அழுத்தினான்.

“வெல்… அயாம் சாரி மீனா… இனிமே இன்னொரு தரம் இப்படி நடக்காது. ஆனா இப்ப… ப்ளீஸ் லீவ் மீ அலோன்.” செல்வா தன் இடது கை விரல்களிலிருந்த நகங்களை கடிக்க ஆரம்பித்தான்.

சென்ட்ரல் ஸ்டேஷனில், சுகன்யா தன் அலுவலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். சற்று தள்ளி குமாரசுவாமியும், சுந்தரியும், ரகுவுடன் நின்றிருந்தார்கள். மீனாவும், சீனுவும் வந்ததையே கவனிக்காததுபோல், தொங்கிப்போன முகத்துடனிருந்த அவர்களை கண்டதும், செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் இடையில் நிச்சயமாக ஏதோ நடந்திருக்க வேண்டும், அதனால்தான் செல்வா ஸ்டேஷனுக்கு வராமல் இருந்துவிட்டானோ என்கிற பயம் மீனாவின் மனதில் எழுந்தது.

“குட் ஈவீனிங் அங்கிள்… அத்தே நீங்க எப்படியிருக்கீங்க?” மீனா சுந்தரியின் பக்கத்தில் சென்று வெகு நெருக்கமாக நின்றாள். சீனு, குமாரசுவாமியின் கையை குலுக்க ஆரம்பித்தான்.

“ஆண்டவன் விட்ட வழின்னு இருக்கோம்மா… நீ நல்லாயிருக்கியாம்மா? உங்க வீட்டுல யாருக்கு உடம்பு சரியில்லை? உங்கம்மாவும் செங்கல்பட்டுக்கு போயிருக்காங்களா?” சுந்தரி தன் குரலில் உயிரில்லாமல் பேசிக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் செல்வாவைத்தான் தேடுகிறாள் என்பது மீனாவுக்கு தெளிவாகப்புரிந்தது.

“ஆமாம் அத்தே, எங்க அப்பாவோட தாய் மாமாவை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக்காங்க. அவரைப்பாத்துட்டு, நேரா இங்கே வந்துடறேன்னு அப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணார்..”

“பாவம்.. அவருக்கு எதுக்கு வீண் அலைச்சல்? அதான் நீங்க ரெண்டு பேரும் வந்திருக்கீங்களே?” சுந்தரியின் கண்கள் பிளாட்ஃபாரத்தின் நெடுக அலைபாய்ந்து கொண்டிருந்தது.

“அலைச்சல் எல்லாம் ஒண்ணுமில்லே; சுகன்யா தில்லிக்கு போறாளேன்னு டல்லாயிருக்கீங்களா அத்தே? மூணு மாசம்தானே? மூணு வாரமா ஓடிடும்; கவலைப்படாதீங்க.” மீனா, சுந்தரியின் இடுப்பைக்கட்டிக்கொண்டாள்.

“அதெல்லாம் இல்லேம்மா?”

“அப்புறம் ஏன் உம்முன்னு இருக்கீங்க? அங்கிள் எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருப்பார். இன்னைக்கு என்னமோ அவரும் ரொம்பவே மூட் அவுட் ஆன மாதிரி இருக்கார்?” சுந்தரியை மீனா விடாமல் துருவ ஆரம்பித்தாள்.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.