கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“ஒரு செகண்ட்… பொறு செல்வா… முகத்தை சுளிக்காதே… எப்படி நான் என் கலீக் சுனிலோட தோளை நட்பா தொட்டு பேசினேனோ அப்படி அவர் முதுகையும் தட்டி நான் பேசலாம். சிரிக்கலாம். ஏன்னா என் மனசுல எந்தவிதமான திருட்டு எண்ணங்களும் இல்லை. நான் அவர்கிட்ட பேசித்தானே ஆகணும்? நம்ம வீட்டு மாப்பிள்ளை சீனுகிட்ட நான் பேசலாமா? கூடாதா? இந்த மாதிரி சூழ்நிலைகள்லே நான் எப்படி ஃபிஹேவ் பண்ணணுங்கறதை, கிளியரா நடுத்தரக் குடும்பத்துல பொறந்த நீ இப்பவே எனக்கு கிளாரிபை பண்ணிட்டா ரொம்ப உதவியா இருக்கும்.”

“சுகன்யா நீ வரம்பை மீறி தேவையே இல்லாத விஷயங்களை யெல்லாம் பேசறே?”

“அப்படீன்னா, இனிமே என் வாழ்க்கையில என் வரம்பை நிர்ணயிக்கப் போறது நீ மட்டும்தானா? என் வரம்பு எது? எனக்கு எது எல்லைக்கோடு? இதையெல்லாம் யோசிக்கறதுக்கு, நிர்ணயிச்சுக்கறதுக்கு எனக்கு எந்த உரிமையும் இல்லையா?”

“ஆமாம். ஆமாம். நான் உன் புருஷனாகப்போறவன். உன் வரம்புகளை நிர்ணயிக்க என்னை விட தகுதியானவன் வேற யாரும் இங்கே இல்லே.”

“இதை நான் மறுத்தால்?” சூடாக எழுந்தது சுகன்யாவின் குரல்.

“நம்ம உறவை முறிச்சிக்கவேண்டியதை தவிர வேறு எந்த வழியும் எனக்குத்தெரியலே.” தீடிரென செல்வாவின் குரலில் ஒரு இனம் தெரியாத அமைதி வந்துவிட்டிருந்தது.

“செல்வா நீ பேசறது என்னான்னு புரிஞ்சுதான் பேசறியா?” ஆற்றாமையுடன் கேட்டாள் சுகன்யா.

“ஆமான்டீ சனியனே… எனக்கு வர வர உன்னைப் பார்க்கவே வெறுப்பா இருக்குடீ?” சலித்துக்கொண்டான் செல்வா. எரிச்சலுடன் தன் முகத்தையும் திருப்பிக்கொண்டான்.

“நான் உனக்கு சனியனாயிட்டேனாடா? என் மொகத்தைப்பாத்து சொல்லுடா நீ” சுகன்யா தன் அடித்தொண்டையில் கூவினாள்.

“ஆமாம். உன் ஆட்டத்தையும் பாட்டத்தையும் என்னாலத்தாங்க முடியலே. தினம் தினம் உன்கூட என் மனசுக்குப் பிடிக்காத ஒரு தொல்லையை இப்படி அனுபவிக்கறதைவிட, மொத்தமா உன்னைவிட்டு பிரிஞ்சிட்டாலே, அது எனக்கும், உனக்கும் ஒருவிதத்துல நல்லதுன்னு நான் நெனைக்கிறேன்.” செல்வாவின் குரலில் ஒரு தீர்மானம் ஒலித்தது.

சுகன்யா தன் தலையை குனிந்து கொண்டிருந்தாள். அவள் விழிகள் கண்ணீரில் நனைந்து கொண்டிருக்க உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.