கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

அதற்குமேல் சுந்தரியால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. தன் மனதில் இருக்கும் கொதிப்பை யாரிடமாவது கொட்ட நினைத்தாள். கடந்த வாரம், செல்வாவுக்கும், சுகன்யாவுக்கும் இடையில் நடந்ததை தணிந்த குரலில் மீனாவிடம் சொல்ல ஆரம்பித்தாள். திடுக்கிட்டுப்போன மீனா, சீனுவை தன்னருகில் வரும்படி சைகை செய்தாள். நடந்ததை அறிந்ததும் அவனும் அதிர்ந்து போய் என்ன பேசுவதென தெரியாமல் நின்றான். சுகன்யா நின்ற திசையில் திரும்பிப்பார்க்க, இப்போது அவளும், குமாரசுவாமியும் மட்டும் தனியாக நின்றிருந்தார்கள். சீனு அவர்களை நோக்கி நடந்தான்.

“என்ன சீனு… உன் ஃப்ரெண்டை பொறுப்புள்ள பையன்னு நினைச்சேன். இப்படி பண்ணிட்டானே?” குமாரசுவாமி வருத்தமாக பேசினார்.

“சுகன்யா… செல்வா ஒரு முட்டாள். இந்த நிமிஷம் அவனை என் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமாயிருக்கு. அயாம் சாரி. கொஞ்ச நாளைக்கு அவன் கிட்ட எந்தக் காரணத்துக்காகவும் நீங்க வாயைத்திறக்காதீங்க. லெட் ஹிம் ரியலைஸ் ஹிஸ் மிஸ்டேக். அப்பத்தான் அவனுக்கு உங்க அருமை புரிஞ்சு புத்தி வரும்.”

“அயாம் சாரி அங்கிள். என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியலே; நீங்க பெரியவங்க, உங்களுக்குத் தெரியாதது இல்லே, கொஞ்சம் பொறுமையா இருங்க.”

“சுகன்யா… லெட் த டஸ்ட் செட்டில் இன். ப்ளீஸ் கிவ் மீ எ சான்ஸ். செல்வாகிட்ட நான் பேசறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும்.
“ சீனு சுகன்யாவிடம் மெல்ல முணுமுணுத்தான்.

“வேண்டாம் சீனு… நீங்க வீணா சிரமப்படவேண்டாம். செல்வா இப்ப யார் பேச்சையும் கேக்கற மனநிலையிலே இல்லே.” சுகன்யா தன் உதடுகள் துடிக்க மேலே எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

“சுகன்யா… என் அண்ணண் உன்னை வெறுக்கறேன்னு சொல்லியிருக்கலாம். ஆனா நீ அவனை தயவு செய்து வெறுத்துடாதே. ப்ளீஸ்… சொல்லு சுகன்யா. அவனை நீ வெறுக்கமாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணு.” சுகன்யாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட மீனாவின் கண்கள் கலங்கியிருந்தன.

“இல்லே மீனா. நிச்சயமா இல்லே. என் காதலை நானே எப்படி வெறுக்க முடியும்?” சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“தேங்க்யூ சுகன்யா… தேங்க்யூ… இது போதும் எனக்கு.”

மீனாவும் கலங்கும் தன் விழிகளைத் துடைத்துக்கொண்டாள். ஒரு முறை மூக்கை உறிஞ்சினாள். பக்கத்தில் நின்றிருந்த சுந்தரியின் கையை பிடித்தாள். அத்தே… என் அண்ணன் சுகன்யாகிட்ட அறிவுகெட்டத்தனமா நடந்துகிட்டு, உங்க எல்லோரோட மனசையும் புண்படுத்திட்டான். அதுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.”

அங்கிள், செல்வா மேல நிச்சயமா உங்களுக்கு கோபம் இருக்கும். என் அண்ணன் பண்ணதை நினைச்சு, எங்கப்பா மேல நீங்க கோபப்பட்டுடாதீங்க. சுகன்யா எப்ப எங்க வீட்டுக்கு வரப்போறான்னு அவர் காத்துக்கிட்டு இருக்கார்.” மீனாவால் அதற்கு மேல் பேசமுடியாமல் உதடுகளை கடித்துக்கொண்டாள்.

“சே..சே.. என்னப்பேசறே மீனா? இது நடந்து ஒரு வாரமாச்சு. நடந்து போனதுக்கு உங்க அப்பா என்ன பண்ணுவார்? இல்லே.. உங்கம்மாதான் என்ன பண்ணுவாங்க? யார் மேலேயும் எங்களுக்கு கோவமில்லேம்மா. உங்கப்பா ஏற்கனவே ரெண்டு நாளா டென்ஷன்ல இருக்கறது எனக்கு நல்லாத்தெரியும். அவங்க யாரையோ பேஷண்ட்டைப் பாத்துட்டு வர்றாங்க… நீ தெரிஞ்சுக்கிட்டதையெல்லாம், இன்னைக்கே உங்க வீட்டுல சொல்லி, உன் பேரண்ட்சையும் மனவேதனை படவெச்சிடாதே.
“ அவள் தலையை மென்மையாக வருடினார் குமாரசுவாமி.

“சரி அங்கிள்..”

“மொதல்லே நீ அழறதை நிறுத்தும்மா. நீ அழறதைப்பாத்து உன் ஃப்ரெண்டும் அழறாப்பாரு.” குழந்தைபோல் அழும் மீனாவை சுந்தரி தன் தோளோடு சேர்த்தணைத்துக்கொண்டாள்.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.