கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“ஆமாம். என்னை உன் புருஷனா ஏத்துக்கறேன்னு உன் ஊர்ல சொல்லிட்டு, இங்கே வந்ததுலேருந்து, கண்டவனுங்களோட உன் நேரத்தை செலவு பண்றது சந்தேகமில்லாம வேஸ்டுதான்னு எனக்குத் தோணுது.”

“சரி இன்னைக்கே, இப்பவே நான் அவங்க கிட்ட பேசறதை, பழகறதை நிறுத்திடறேன்.”

“ரொம்ப சந்தோஷம். ஆனா இது ஒரு காலம் கடந்த முடிவு…”

“அப்படியா? எனி வே, நாம பேச ஆரம்பிச்சதை முழுசா பேசிடாலாமா?

“யெஸ்… பேசு…”
“நாளைக்கு, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் காய்கறி வாங்க மார்கெட் போகணும். காய் விக்கறவன் எங்கிட்ட சிரிச்சுப் பேசுவான். பால் விக்கறவன் சிரிச்சுப் பேசலாம். என் புடவைக்கு இஸ்திரி போடறவன்; காஸ் சப்ளை பண்றவன்; ஆட்டோ ஓட்டறவன், இப்படி இவங்க எல்லாருமே இந்த ஊருல ஆம்பிளைங்கத்தான்.”

“சுகன்யா… என் மனசை உன்னால புரிஞ்சுக்க முடியலேன்னாலும் பராவயில்லே. ஆனா… ப்ளீஸ் நீ ரொம்ப புத்திசாலித்தனமா பேசறேன்னு நினைச்சுக்கிட்டு என்னை தயவு செய்து வெறுப்பேத்தாதே.”

“செல்வா… இன்னும் ஒரே ஒரு நிமிஷம் என்னை பேசவிடு…”

“ப்ச்ச்ச்.. பேசிடும்மா… உன் மனசுல இருக்கறதை எல்லாம் உன் ஆசை தீர இன்னைக்கு நீ பேசிடு…” செல்வா மூர்க்கமாக பேசினான். குதர்க்கமாக சிரித்தான்.

“நம்ம மேரேஜ்க்கு அப்புறம், என் தாய் மாமா ரகு நம்ம வீட்டுக்கு வந்து என் கிட்ட சிரிச்சி பேசலாம். உரிமையா என்னைத் தொட்டு பேசலாம். நம்ம வீட்டுக்கு வர்ற என் மாமாகிட்ட நான் பேசலாமா? கூடாதா?”

“சுகன்யா… திஸ் இச் நாட் கோயிங் டு ஹெல்ப் யூ இன் எனி வே…” செல்வா தன் தலையைப் பிடித்துக்கொண்டான்.

“சீனு இன்னைக்கு உன் ஃப்ரெண்ட். நாளைக்கு உன்னோட தங்கையை கல்யாணம் பண்ணிக்கப் போறவன். உனக்கு மச்சான். எனக்கு நெருங்கின என் குடும்பத்து உறவினனாக மாறப்போகிறவன். இன்னைக்கு சம்பத்துக்கு, அதான் என் அத்தான், அவருக்கு எங்கிட்ட என்ன உரிமையோ, என்ன உறவோ, அதே உரிமையோட, உறவு தரும் பலத்தோட, சீனு எங்கிட்ட சாதாரணமா பேசலாம். ஏன் சமயத்துல சிரிச்சும் பேசலாம்.”

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.