கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

சுகன்யாவுக்கு சட்டெனத் தான் கட்டிய அழகான காதல்கூட்டின் நினைவு வர, அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
செல்வா, சுகன்யா என்னும் இரு தனி மனிதர்களின் மன உணர்வுகளை பற்றிய கவலையில்லாமல், அலையும் நீலக்கடல், ஓயாமல், ஒழிவில்லாமல், அலைந்து அலைந்து, உயர்ந்து எழுந்து, கரையை வேகமாகத் தாக்கி, விருட்டென பின்னோக்கி சென்று எதிரில் வரும் அலையில் மோதி, அதன் வேகத்தை தணித்து, ஒன்றாகின. மீண்டும் அலைந்தன. உயர்ந்தன. எழுந்தன. தாழ்ந்தன. மோதின.

சுகன்யா மெல்ல எழுந்து, தண்ணீரை நோக்கி நடந்தாள். புடவையை இழுத்து தன் இடுப்பில் செருகிக்கொண்டாள். அலைகள் அவளுடைய அழகான வெண்மையான கால்களை தொட்டுத் தொட்டு வருடின. அவளுடைய பார்வை தொடுவானத்தில் நிலைத்திருந்தது.

நான் யாருகிட்டவும் என் வாழ்க்கையில அதிகமா பேசினதேயில்லை. யார்கூடவும் மனம் விட்டு பழகினதும் இல்லே. அதிகமா விளையாடிதில்லே. சிரிச்சதில்லே. நத்தையா ஒரு கூட்டுக்குள்ளே, ஆமையா ஒரு ஓட்டுக்குள்ளே, என்னை நானே சுருக்கிக்கிட்டு இருந்தேன்.

தீடிர்ன்னு, கிருஷ்ணவேணிங்கற ஒரு நல்ல சினேகிதி எனக்கு கிடைச்சா. சுகன்யா… நீ நினைக்கற மாதிரி ஆண்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமா கெட்டவங்க இல்லேன்னு எனக்கு சொல்லிக்கொடுத்தா. வாழ்க்கையின் அர்த்தத்தை உணரவெச்சா.

நானும் செல்வாவை மனசார விரும்பினேன். என்னை விட்டுட்டுப் போன என் அப்பா, அவரா வீட்டுக்குத் திரும்பி வந்தார். என் அம்மாவோட வாழ்க்கையில மீண்டும் வசந்தம் வந்தது. அப்பா வீட்டுக்கு வந்ததால, அம்மா தன் வீட்டுக்கு உரிமையோட போனாங்க.

என்னோட தொலைஞ்சு போன சொந்தங்கள், தாத்தா, பாட்டி, ஒண்ணுவிட்ட அத்தை, மாமா, அவங்களோட பிள்ளை, இப்படி எனக்கு நிறைய உறவுகள் திடீர்ன்னு கிடைச்சது. என் அம்மாவும், அப்பாவும் சந்தோஷமா இருக்கறதைப்பாத்து வயசான என் தாத்தாவும் பாட்டியும் சந்தோஷமாயிட்டாங்க. அவங்களைப்பாத்து நான் சந்தோஷப்பட்டேன்.

இப்பத்தான் ஒரு மாசமா, என் மனசோட ஒரு மூலையில, நிரந்தரமாக குடியிருந்த ஒரு அர்த்தமில்லாத பயம், அச்சம், கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு விலக ஆரம்பிச்சுது. மீனா, மல்லிகா, நடராஜன், சீனு அப்டீன்னு புதுசு புதுசா உறவுகள் எனக்கு கிடைச்சது. நான் சிரிக்க ஆரம்பிச்சேன்.

காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கப் போறோங்கற நிம்மதி, பெருமிதம் எனக்குள்ள வந்திச்சி. மனசுக்குள்ள இருந்த இறுக்கமெல்லாம் கொறைஞ்சு, வாழ்க்கையில ஒரு பிடிப்பு உண்டாகி, சிரிக்கணும்; சிரிக்கறதுல இருக்கற மகிழ்ச்சியை, சந்தோஷத்தை முழுசா அனுபவிக்கணும்ன்னு நான் முயற்சி பண்ணும் போது எனக்கு இப்படி ஒரு சோதனையா?

நான் மனசுவிட்டு சிரிச்சி, பேசி பழகறது என் காதலனுக்கே பிடிக்கலை. நான் சிரிச்சது, என் காதலுக்கே வினையா மாறிடிச்சி. எல்லாம் என் தலையெழுத்து.

செல்வா போயிட்டான். என் வாழ்க்கையில வந்த மாதிரியே சட்டுன்னு திரும்பி போயிட்டான். என் செல்வா இந்தக் கடற்கரையிலத்தான் தன் காதலை என் கிட்டச் சொன்னான். அதே எடத்துல தன் மனசை எங்கிட்டேயிருந்து வலுக்கட்டாயமா, என் விருப்பமே இல்லாம, பிடுங்கிக்கிட்டுப் போயிட்டான்.

நானும் இதே எடத்துலத்தான் என் மனசை செல்வா கிட்ட தொலைச்சேன். இப்ப நான் என் காதலையும் இதே இடத்துல தொலைச்சுட்டேன். என் செல்வா… கொஞ்சம் கூட இரக்கமேயில்லாம, இவ்வளவு சுலபமா, என் மனசை மிதிச்சி, துவைச்சி, சுக்கு நூறாக்கிட்டுப் போயிட்டான்.

என் காதலுக்கு என்ன ஆச்சு? என் காதல் நிஜமாவே தோத்துப்போச்சா? கடைசீல சாவித்ரித்தான் ஜெயிச்சிட்டாளா?

இல்லை. நிச்சயமா இல்லே. செல்வா என்னை வெறுக்கறேன்னு சொன்னான். ஆனா அவனை நான் வெறுக்கலே. நான் செல்வாவை இன்னும் காதலிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். என் செல்வாவை நான் காதலிச்சுக்கிட்டு இருக்கும் போது என் காதல் தோத்துப்போச்சுன்னு எப்படி சொல்லமுடியும்? கல்யாணம் பண்ணிக்கிட்டு சேர்ந்து வாழ்ந்தாத்தான் காதல்லே ஜெயிச்சதா அர்த்தமா?

என் அத்தான் சம்பத்தும் என்னை காதலிக்கறேன்னு சொன்னார். என் வாழ்நாள் பூராவும் என்னைக் காதலிச்சுக்கிட்டே இருப்பேன்னு சொன்னார். தன்னோட மனசு விரும்பிய பெண்ணுக்காக, அவளோட காதலுக்காக தான் சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருப்பேன்னு சொன்னார். அது மாதிரி என் காதலை நான் என்னால என் மனசுக்குள்ளவே வெச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்க முடியாதா? காதலுக்கு ஒரு உருவம், ஒரு உடல், ஒரு அடையாளம் தேவையா?

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.