கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“எதுக்கு இப்ப என்னை நிக்க சொன்னே நீ?” செல்வா அவள் முகத்தைப்பார்க்க முடியாமல் திணறினான். திணறியவன் தன் முகத்தை திருப்பிக்கொண்டான். சுகன்யா அவன் வலது கரத்தை இறுக்கிப்பிடித்தாள்.

“செல்வா… நான் சொல்றதை கோவப்படமா கேளு. உனக்கு பிடிக்காதவங்க கிட்ட நான் இனிமே பேசமாட்டேன். பழகமாட்டேன். ஆனா இந்த சின்ன விஷயத்துக்காக, சாதாரண விஷயத்துக்காக, நீ என்னை லவ் பண்ணலேன்னு ஏன் பொய் சொல்றே? உண்மையிலேயே என்னை நீ காதலிக்கலையா? உன் மனசைத் தொட்டு சொல்லு?”

“நான் உன்னைக் காதலிச்சேன். அது உண்மைதான்.”

“அப்படீன்ன இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னே நீ என்னை வெறுக்கறேன்னு சொன்னது பொய்தானே?”

“இல்லே. உன்னை காதலிச்சதும் உண்மைதான். இப்ப உன்னை வெறுக்க ஆரம்பிச்சிருக்கறதும் உண்மைதான்.”

“செல்வா… ப்ளீஸ்… என்னை நீ காதலிக்க வேண்டாம். ஆனா, என்னை வெறுக்கறேன்னு மட்டும் சொல்லாதே; இதை என்னால தாங்கிக்க முடியலே. அப்படி என்னத்தப்பு நான் பண்ணிட்டேன்?”

“அயாம் சாரி.. மிஸ் சுகன்யா… உங்க மனசை நான் புண்படுத்திட்டேன்; ஆனா என் மனசு மேலும் மேலும் புண்படறதை தவிர்க்கறதுக்கு இதைத்தவிர வேற எனக்கு எந்த வழியும் இல்லே. ப்ளீஸ்…”

“செல்வா… வாழ்க்கைங்கறது, நாம படிக்கும் போது பள்ளிக்கூடத்துல போட்ட கழித்தல் கணக்கு இல்லே. இரண்டுல ஒண்ணு போனா மிச்சம் ஒண்ணுன்னு நெனைக்காதே. நம்ம ரெண்டுபேரோட காதல் வாழ்க்கையிலேருந்து ஒருத்தரை விட்டு ஒருத்தர், யாரைவிட்டு யாரு பிரிஞ்சு போனாலும், மிச்சம் ஒண்ணுமேயில்லை. ரெண்டு பேரு வாழ்க்கையும் ஜீரோ ஆயிடும். இதை நீ நல்லாப் புரிஞ்சுக்க.” சுகன்யா அவன் கையை இறுக்கிப்பிடித்துக்கொண்டு அவனை நகரவிடாமல் தடுத்தாள்.

செல்வாவின் மனதில் இருந்த மூர்க்கத்தால், சுகன்யாவின் பேச்சிலிருந்த ஞாயத்தினை அவனால் பார்க்க முடியாமல், அவளுக்கு பதில் சொல்லமுடியாமல், அவன் ஊமையாக நின்றான். மூர்க்கம் அவன் கண்களில் பனிதிரையாகி அவன் பார்வையினை மறைத்திருந்தது.

சுகன்யா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. சுகன்யாவுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு பத்து நொடிகள் செல்வாவும் மவுனமாக நின்றான். அவர்களுக்கிடையில் கனமான, இறுக்கமான அமைதி நிலவியது. கடைசியில் அந்த மவுனத்தை செல்வாவே உடைத்தான்.

“சுகன்யா… யூ ஆர் எ வெரி வெரி நைஸ் லேடி. நான்தான் உனக்கு ஏத்தவன் இல்லே. ப்ளீஸ் என்னை நீ மன்னிச்சுடு. மெல்ல முணுமுணுத்த செல்வா அவள் கையிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு மெல்ல அவளுக்கு எதிர்த்திசையில் தன் பைக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனால் வேகமாக மணலில் நடக்க முடியாமல் ஒரு வினாடி நின்றான். நின்ற இடத்திலிருந்தே சுகன்யாவைத் திரும்ப ஒருமுறை நோக்கினான்.

திரும்பி சுகன்யாவைப் பார்த்தவன் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான். சுகன்யா தன்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போய்க்கொண்டிருக்கும் செல்வாவின் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தாள். மனதில் எழுந்த உணர்ச்சிப்பெருக்கால், கால்கள் வலுவிழக்க, நிற்க முடியாமல் பக்கத்திலிருந்த ஒரு படகின் நிழலில் தொப்பென உட்கார்ந்தாள்.

சுகன்யா தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே தன் பார்வையை தனது வலப்புறம் திருப்பினாள். மணல் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்த அந்த அழகான குழந்தைகளை இப்போது அங்கு காணவில்லை. அந்தக்குழந்தைகள் வெகு அழகாக, வெகு முனைப்பாக கட்டிய, அந்த வீடு உருத்தெரியாமல் சிதறிப்போயிருந்தது.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.