கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“நாம விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த சொசைட்டியோட, நடுத்தரக்குடும்பத்து வேல்யூசை மதிக்கணும்ன்னு ஒரு பத்து நாள் முன்னாடி நீ எனக்கு லெக்சர் குடுத்தே; இப்ப இந்த சொசைட்டி உன்னோட நடத்தையைப்பத்தி, என்ன பேசுதுங்கறதைப் பத்தி, நீ கொஞ்சம்கூட கவலைப் படமாட்டேங்கறியே? இது உனக்கு கொஞ்சம் வினோதமா படலியா?

“செல்வா… நான் அன்னைக்கு எந்த கான்டெக்ஸ்ட்ல இப்படி பேசினேன்? கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள உடல் உறவு வேணாங்கறதைப்பத்தி பேசும்போது சொன்னேன். இப்ப நீ எந்த கான்டெக்ஸ்ட்ல சொசைடியோட வேல்யூசைப் பத்தி பேசறேங்கறதை புரிஞ்சிகிட்டுத்தான் பேசறியா?” சுகன்யா இப்போது ஒருமைக்கு வந்திருந்தாள்.

“சுகன்யா… திரும்பவும் சொல்றேன். நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலே. சம்பத்தோட நீ பேசறது, சுனிலோட கேண்டீன்ல சிரிச்சிக்கிட்டு நிக்கறது, தேவையில்லாம அவன் கூட ஊர் சுத்தறது, இதெல்லாம் எனக்கு பிடிக்கல்லே; நம்ம கல்யாணத்தை எதிர்ல வெச்சிக்கிட்டு, இப்படியெல்லாம் அடுத்தவனுங்களோட நீ கண்டபடி கூத்தடிக்கறது, நடுத்தர குடும்பத்துல பொறந்த எனக்கு, நடுத்தர குடும்பத்து வேல்யூசை மதிக்கற எனக்கு சுத்தமா பிடிக்கலே.”

“செல்வா…? நான் யாருகிட்டப் பேசணும்? நான் எங்க, யார்கூட போகணும், யார் கிட்ட சிரிக்கணும்? யார்கிட்ட மூஞ்சை சுளிக்கணும்? எந்த இடத்துல டீ குடிக்கணும்? எப்ப டீ குடிக்கணும்? அதையும் யார் கூட குடிக்கணும்? இதெல்லாத்தையும் இனிமே நீதான் முடிவு பண்ணப் போறியா?”

“நான் சொல்றதை நீ கொஞ்சம் கேட்டா, என் விருப்பங்களை, என் உணர்வுகளை, நீ மதிச்சா, அதுல உனக்கு எதாவது நஷ்டமா?”

“நீ சொல்றதை அப்படியே நான் கேட்டு நடந்தா எனக்கு என்ன லாபம்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“உங்கிட்ட எனக்கு எந்த உரிமையும் இல்லையா… சுகன்யா?”

“எந்த உரிமையில இந்த அளவுக்கு நீ என்னை கட்டுப்படுத்தறேன்னு அதையும் சொல்லிடேன்… செல்வா?”

“என் கையால நீ தாலிகட்டிக்கறதாகவும், உன்னை நான் என் மனைவியா ஏத்துக்கறதாகவும், நாலு பேரு முன்னாடி, நாம ரெண்டுபேரும் மனசொத்து முடிவெடுத்ததை, இவ்வளவு சீக்கிரம் நீ மறந்துடுவேன்னு நான் நெனைக்கலை. கொடுத்த வாக்குறுதிக்கு நீ வெக்கற மரியாதையைப் பாக்கும்போது எனக்கு என் வாழ்க்கையே வெறுத்துப் போவுது.”

“என் வாக்குறுதியை நான் எந்தவிதத்துல பங்கப்படுத்திட்டேன்?”

“சுகன்யா நீ வீணாப்பேசி என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதே? நீ எந்த விதங்கள்லே உன் வாக்குறுதியை காத்துல பறக்கவிடறேங்கறது உனக்கே நல்லாத் தெரியும்.”

“ஒஹோ… என் கிட்ட பேசறதே; உன் நேரத்தை வேஸ்ட் பண்றதா உனக்கு தோண ஆரம்பிச்சிடுச்சா?”

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.