கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

நீ ஒரு வழவழாகொழகொழான்னு சுகன்யா உன்னைப்பாத்து எத்தனை தரம் சிரிச்சிருக்கா. உன்னால சட்டுன்னு எந்த முடிவுக்கும் வரமுடியாதுன்னு மீனா எத்தனை தரம் சொல்லியிருக்கா? உன்னோட இருவது வருஷ ஃப்ரெண்ட்ஷிப்ல, சீனு உன்னோட இந்தக்குறையை எத்தனை தடவை முறை சொல்லி சொல்லி காட்டியிருப்பான்?

எத்தனை நாளைக்கு இன்னும் நீ அடுத்தவங்க சிரிப்புக்கு ஆளாகி நிக்கப்போறே? அந்த நொடியில், ஆண்மையின் அகங்காரம், மூர்க்கத்தனம், அர்த்தமில்லாத கோபம் அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.

சுகன்யாவுக்கு நான் வேணும்ன்னா, அவதான் என் பின்னாடி வரணும். என்னோட விருப்பபடித்தான் அவ நடக்கணும். செல்வா திரும்பவும் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
சுகன்யாவின் அடிவயிற்றிலிருந்து மெல்லிய கேவலொன்று எழுந்தது. அந்தக்கேவல் அவள் தொண்டை வரை வந்து நின்று அவளுடைய மூச்சை அடைத்தது. அடுத்த வினாடி, பெருமூச்சாக அவள் கண்டத்திலிருந்து வெளியேறியது.

நானும் ஒரு சராசரி ஆண்தான். எனக்கு உரிமையுள்ளப் பெண்ணை சந்தேக கண் கொண்டு பார்ப்பது எனது பிறப்புரிமை என சொல்லிக்கொண்டு ஒரு கோழையாக என்னை விட்டு செல்வா ஓடுகிறான். இப்படி ஒரு கோழையை நான் காதலிச்சேனே? எல்லாம் என் நேரம்தான்.

தான் அணிவித்த மோதிரத்தை கழட்டியெறிந்துவிட்டு, வேகமாக ஓடியவன் சட்டென நின்றதும் சுகன்யாவின் மனதுக்குள் ஆத்திரமும், கோபமும் ஒருங்கே எழுந்தன. அவள் உடலெங்கும் ரத்தம் வேகமாக ஓட ஆரம்பிக்க, மேனியில் அனல் பரவியது. நரம்புகள் மெல்ல மெல்ல முறுக்கேறின. தானும் செல்வாவின் பின்னால் வேகமாக எழுந்து ஓடி, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடலாமா என்ற கட்டுக்கடங்காத வெறி அவள் மனதில் எழுந்தது.

“செல்வா, ஒரு நிமிஷம் நில்லு. கடைசியா நான் சொல்றதை மட்டும் கேட்டுட்டு போ.” உரக்க கூவினாள் சுகன்யா.

செல்வா நின்ற இடத்திலிருந்தே சுகன்யாவைத் திரும்பிப்பார்த்தான். அவள் எழுந்து தன் பின்புறத்தில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டாள். நிதானமாக அவனருகில் சென்று நின்றாள். அவன் முகத்தை உற்று நோக்கினாள்.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.