கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

செல்வாவின் குரல் தழுதழுப்பாக வந்தது. அனு சுகன்யாவின் முகத்தைப்பார்த்தாள். சுகன்யா தான் பேசமாட்டேன் என தன் தலையை இடவலமாக ஆட்டினாள். தன் கீழுதட்டைக் கடித்துக்கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கிக்கொண்டிருப்பதை போல் இருந்தது அனுவுக்கு.

“உனக்கு சுகன்யாகிட்ட பேசவேண்டாம்… ஆனா அவ எப்படி இருக்கான்னு தெரிஞ்சா மட்டும் போதும்…? ஐ ஃபீல் உன் மேட்டர்ல… சம்திங்க் ஈஸ் ராங் செல்வா.. கம் ஸ்ட்ரெய்ட். நீ அவளை லவ்வறியா? ஒன் சைட் காதலா?” அனு பட்டாசாக வெடிச்சிரிப்பு சிரித்தாள்.

“அனு… ப்ளீஸ்… அவ நல்லா இருக்காளா? அதை மட்டும் சொல்லேன்.. ப்ளீஸ்” செல்வா மீண்டும் கெஞ்சினான்.

“சுகன்யாவுக்கு என்னக்கொறைச்சல்? அவ ரொம்ப நல்லா இருக்கா… ஆனா அவகிட்ட ஒரு சின்னப்பிரச்சனை…”

“என்ன அனு?”

“எப்பவும் படிச்சுக்கிட்டே இருக்கா.. ரொம்ப ரொம்ப ஸ்ட்ரெய்ட் அண்ட் சீரியஸ் வுமன்… என்னை மாதிரி அனாவசியமா யாருகிட்டவும் வழியறதெல்லாம் இல்லே.”

“யெஸ்.. ஐ நோ…”

“சரி.. இப்ப நீ ஒழுங்கா விஷயத்துக்கு வா… வாட் ஈஸ் கோயிங் ஆன் பிட்வீன் யூ அண்ட் ஹர்? அயாம் யுர் குட் ஃப்ரெண்ட்… என்னைப்பத்தி உனக்கு நல்லாத் தெரியும்… என் கிட்ட பொய் மட்டும் சொல்லாதே? நேரா சுகன்யாகிட்ட போய் என்ன ஏதுன்னு கேட்டுடுவேன்?” அனு சீரியஸாக பேசினாள்.

“அனு… வீ வேர் டீப்லி லவ்விங் ஈச் அதர்… எங்க நிச்சயதார்த்தமும் முடிஞ்சிட்டுது.. கல்யாணத்துக்கு நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கியா இருந்திச்சி.” செல்வா முனகினான்.

“இப்ப என்ன ஆச்சு…?”

“இப்ப நாங்க பிரிஞ்சுட்டோம்..?”

“யாரு காரணம்? நீயா? இல்லே அவளா?”

அனு சுகன்யாவின் முகத்தை நோக்கினாள். சுகன்யாவின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அனுவின் முகம் சட்டென கல்லாகிப்போனது. சுகன்யாவை அவள் தன் தோளோடு அணைத்துக்கொண்டாள்.

“செல்வா… யூ ஆர் மை ஃப்ரெண்ட்… செர்டன்லி ஐ கேன் ஹெல்ப் யூ. அண்ட் சார்ட் அவுட் யுவர் ஃப்ராப்ளம்…. உண்மையைச் சொல்லுப்பா…?” அனு நிதானமாக கேட்டாள்.

“ஐ டோன்ட் நோ அனு… ஆனா நான்தான் காரணம்ன்னு என் வீட்டுல கூட யாருமே எங்கிட்ட பேசறது இல்லே. எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு. நடந்தது நடந்து போச்சு…”

“அப்டீன்னா…?”

“பிரிஞ்சது பிரிஞ்சதுதான்… ஒடைஞ்சு போன மண் பானையை எப்படி திரும்பவும் ஒட்ட வெக்கறது?”

“ஒடைஞ்சதை ஒட்டமுடியாதுன்னா… இப்ப எதுக்கு அவளைப்பத்தி எங்கிட்டே கேக்கிறே நீ?” அனுவின் குரலில் சூடு ஏறியிருந்தது.

“அனு… என் மேல சுகன்யா அவ உயிரையே வெச்சிருந்தா; ஒரு மாசமா நான் வீராப்பா இருந்துட்டேன்; இப்ப என் மனசு கேக்கலே; அதான் உன்னைத் தொந்தரவு பண்ணிட்டேன். அயாம் சாரி…
“ மறுமுனையில் செல்வாவின் குரல் கேவியது.

“செல்வா… செல்வா…” அனு கூவினாள். கால் கட்டாகிவிட்டிருந்தது.
“சுகன்யா… என்னைத் தப்பா நினைக்கதே? நேத்து நைட் நீ சொன்னதெல்லாம் உண்மையா? செல்வாவா இப்படியெல்லாம் நடந்துகிட்டான்? இதையெல்லாம் என்னால நம்பவே முடியலேடீ..” மறுநாள் காலை, பார்க்கில் அனுவும், சுகன்யாவும் பரபரப்பில்லாமல் நடந்துகொண்டிருந்தார்கள். சுகன்யா ஒரு விரக்தியான புன்னகையை அனுவின் புறம் வீசினாள்.

“ம்ம்ம்… தில்லிக்கு கிளம்பற அன்னைக்கு எப்படியும் அவன் ஸ்டேஷனுக்கு வந்துடுவாங்கற ஒரு நப்பாசை என் மனசுக்குள்ள இருந்திச்சி. ஆனா அவன் வரவேயில்லை. செல்வாவுக்கு இனிமே என் வாழ்க்கையில் இடமில்லேன்னு அன்னைக்குத்தான் நான் என் மனசை திடப்படுத்திக்கிட்டேன்.

“ப்ப்ச்ச்ச்… அயாம் சாரீடீ சுகா..”

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.