கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“அவன் உன் புருஷனாகப் போறவண்டீ?” சுந்தரி குதித்தாள்.

“அம்மா… அவனைப்பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாதும்மா? பாட்டி… என் ஆஃபீசுல எவனோ ரெண்டு பேரு என் பின்னாடி சுத்தினான். நான் அவனுங்களை திரும்பிகூடப் பாத்ததில்லே. அந்த வெறுப்புலே அவனுங்க எதையோ என்னையும், என் கலீக்கையும் சம்பந்தப்படுத்தி பேசினாங்கன்னு சொல்லி இவன் என் நடத்தையை சந்தேகப்படறான். இவன் கூட எப்படி நான் வாழமுடியும்… நீயே சொல்லு?” சுகன்யாவுக்கு மூச்சு இறைத்தது.

“அப்புறம்..?” சுந்தரி பொரிந்தாள்.

“நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம், பால்காரன், கேஸ்காரன், இஸ்திரி போடறவன், ஆட்டோ ஓட்டறவன், இவங்க கூடல்லாம் நான் பேசலாமா கூடாதான்னு அவனைக் கேட்டேன்.”

“நான்தான் இவளுக்கு வாய்கொழுப்பு அதிகம்ன்னு தலை தலையா உங்கக்கிட்ட அடிச்சுக்கறேனே? அது கரெக்ட்டுதான்னு உங்க பொண்ணு உங்களுக்கு காமிச்சிட்டாளா? உங்க அழகு பொண்ணை உங்க கூடவே ஆயுசு முழுக்க வெச்சுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருங்க. இவளுக்கு தேவையில்லாத அளவுக்கு செல்லம் குடுக்கறீங்க…” சுந்தரி பாட்டுக்கு தன் மகளின் மீது இருக்கும் எரிச்சலை தன் கணவரின் மீது காண்பித்தாள்.

“அப்பா… நான் சொல்றதை நீங்க கேளுங்கப்பா… ரகு மாமா என் வீட்டுக்கு வந்தா, அவர் கிட்டவாவது நான் பேசலாமா கூடாதான்னு கேட்டேன். இதுவும் வாய்க்கொழுப்பா? நான் கேட்டதுல என்னத்தப்பு இருக்கு?”

“ம்ம்ம்… என்னம்மா இது? அவன்தான் எதையோ சொன்னான்னா நீயும் கண்டபடி பேசிட்டு வந்திருக்கியே? இதெல்லாம் நல்லாவா இருக்கு?” குமாரசுவாமி தன் தலையில் கையை வைத்துக்கொண்டார்.

“நான் அவனோட மனஉணர்வுகளை புரிஞ்சிக்கலையாம்? சுகன்யா நான் உன் புருஷனாகப் போறேன்… அதனலா நான் சொல்றபடிதன் நீ நடக்கணும். என் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கும். உனக்கு இது பிடிக்கலேன்னா, நம்ம உறவை முறிச்சிக்கலாம்ன்னு சொல்லி மோதிரத்தை கழட்டி வீசி எறிஞ்சிட்டான்.”

“ஆம்பிளைத் துணையில்லாம, ஒரு பொம்பளை வாழமுடியாதா? ஏம்மா பதினைஞ்சு வருஷம் அப்பா இல்லாமே நீ தனியா வாழலையா? மாமா மேரேஜ் பண்ணிக்காமலேயே தனியா தன் வாழ்க்கையை நிம்மதியா வாழலையா? என்னாலேயும் தனியும் வாழமுடியும். எனக்கு எந்த ஆம்பிளையோட துணையும் தேவையில்லை.” சுகன்யா கொதித்துக்கொண்டிருந்தாள்.

“சிவ… சிவா… கண்ணு சுகன்யா, நான் சொல்றதை கேளும்மா… கோவத்துல குழந்தைத்தனமா பேசாதேம்மா. பொறுமையா இரு… குமாரு நீ போய் அந்த நடராஜனை என்ன ஏதுன்னு கேட்டுட்டு வாடா.” சிவதாணு தன் பேத்தியின் தலையை வருட ஆரம்பித்தார்.

“அப்பா… என் மனசுல இருக்கறதை நான் முடிவா சொல்லிட்டேன். நாளைக்கு நான் டில்லிக்கு கிளம்பியாகணும். என் கேரீரையாவது என்னை நிம்மதியா பர்சூயு பண்ண விடுங்க. இப்போதைக்கு எந்தப்பிரச்சனையையும் உண்டு பண்ணாதீங்க. நீங்க எப்ப வேணா அவங்க வீட்டு சீர் வரிசையை திருப்பிக்கொடுத்துடுங்க. இனிமே அதை நான் என் கையாலத் தொடமாட்டேன்.

நீங்க அந்தப்பார்சலை கூரியர் மூலம் அனுப்புவீங்களோ? நேராப்பாத்து குடுத்துட்டு வருவீங்களோ… ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். நீங்க நேராப்போனா உங்களையும் அவன் மரியாதையில்லாம பேசினாலும் பேசலாம். அவன் பழைய செல்வா இல்லே; இதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்.” சுகன்யா விருட்டென எழுந்து தன் அறையை நோக்கி நடந்தாள்.
சுகன்யா தில்லிக்கு கிளம்பிய தினத்தன்று, மருத்துவமனையில், கவலைக்கிடமான நிலையில், அனுமதிக்கப்பட்டிருந்த நெருங்கிய உறவினர் ஒருவரின் நலம் விசாரிப்பதற்காக நடராஜனுக்கு செங்கல்பட்டு வரை போகவேண்டியிருந்தது. தன்னுடன் மல்லிகாவும் வருவதால், தங்களால் சுகன்யாவை வழியணுப்ப ஸ்டேஷனுக்கு வரஇயலாது என்பதனை அவர் வருத்தத்துடன் முதல் நாளே சுகன்யாவிடம் போன் மூலமாக தெரிவித்திருந்தார்.

செல்வாவுக்கு என்னாச்சு? காலையிலேருந்து குளிக்காம கூட, வெரண்டா பெஞ்சிலேயே சோம்பேறித்தனமா படுத்துக்கிடக்கறானே? லஞ்சுல சாப்பிடக்கூப்பிட்டதுக்கும், சரியா பதில் எதுவும் சொல்லலே; சாப்பிடவும் இல்லே; மொகத்தை கடுவன் பூனை மாதிரி உர்ன்னு ஏன் வெச்சிருக்கான்? எனக்குத்தெரிஞ்சு, இரண்டு மூணு நாளா சுகன்யாவோட போனும் வரலே. திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடிச்சா? செல்வாவுக்கும், சுகன்யாவுக்கும் நடுவுல லடாயோ என்னவோ தெரியலியே? மனதிற்குள் அவனிடமோ, சுகன்யாவிடமோ இதைப்பற்றி பேசுவதற்கு தயங்கிக்கொண்டிருந்தாள் மீனா.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.