கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

சுகன்யா, செல்வாவின் முகத்தைப் பார்க்காமல் சற்றுத் தொலைவில், கவலையே இல்லாமல் கடற்கரை மணலில், வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தைகளினருகில், ஜோடியாக தங்களை மறந்து, அந்த உலகத்தையே மறந்து, ஒரு நடுத்தர வயது ஜோடி, ஒருவர் முகத்தை ஒருவர், தங்கள் பார்வையாலேயே விழுங்கிக்கொண்டிருந்தனர். செல்வாவும் அவர்களையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.

“செல்வா.. அந்த குழந்தைங்க ரொம்ப அழகா இருக்காங்க இல்லே?” அந்த இக்கட்டான நேரத்திலும், தன் மனதில் இருந்த எரிச்சலிலும், கோபத்தையும், மறந்தவளாக, சுகன்யா கள்ளமற்ற அந்த குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிரிப்பை, மகிழ்ச்சியை ரசித்தாள். தன் மனதில் எழுந்த உணர்வை தன் மீது கோபமாக இருக்கும் தன் காதலன் செல்வாவுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினாள்.

“ப்ச்ச்ச்…” செல்வா சூள் கொட்டினான். தன் பார்வையை திருப்பிக்கொண்டான்.

“செல்வா… சரிப்பா… நான் சொல்றது, செய்யறது எதுவுமே உனக்கு பிடிக்கலே; ஓ.கே. முக்கியமா ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்க; நானும் வந்ததுலேருந்து பாக்கறேன்; கடலையே வெறிச்சுக்கிட்டு இருக்கீங்க; என்ன விஷயம்?”

சுகன்யா சிரிக்க முயன்றாள். தன் முயற்சியில் தோற்றாள். சுகன்யாவின் முகத்தில் வந்த அந்தப் புன்னகை, அவள் விரும்பாத நேரத்தில், அவள் விரும்பாத விருந்தாளி, அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல், அவள் வீட்டுக்குள் வந்தவுடன், வலுக்கட்டாயமாக அவள் முகத்தில் அணிந்து கொள்ளும் புன்னகையாக இருந்தது.

செல்வாவும் சங்கடத்துடன் சுகன்யாவின் எதிரில் சற்று நெளிந்தான். ஆஃபீசை விட்டு, கடற்கரைக்கு வந்தபின் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் சிறிது குறைந்திருந்தது போல் அவளுக்குத் தோன்றியது.

இந்த சங்கடமான தருணத்துக்கு காரணம் நான் இல்லை என்று செல்வா தனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டாலும், அவன் மனதுக்குள் இனம் தெரியாத ஒரு குற்ற உணர்வு எழுந்து கொண்டிருந்தது. நான் பேசப் போற விஷயத்தை இவள் எப்படி எடுத்துக்கொள்வாள்? இவள் மனம் அதிகமாக புண்படாதவாறு நான் என்ன பேசவேண்டும், என் மனதில் இருப்பதை எப்படி சுருக்கமாக பேசவேண்டும், என அவன் தன் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் சொல்ல வந்ததை உடனடியாக அவளிடம் சொல்லி விடவும் அவனுக்குத் தைரியம் வரவில்லை.

“செல்வா… ப்ளீஸ்… எனக்கு ஆஃபீசுல நிறைய வேலை இருக்குங்க. நீங்க சொல்ல நினைக்கறதை சீக்கிரமா சொல்லுங்க.”

“உங்களுக்கும், உங்க எடுபுடி சுனிலுக்கும் நடுவுல ஏதோ
“மேட்டர்’ இருக்கறதா இந்த ஆஃபீஸ் பூரா ஒரு கிசுகிசு ஓடிக்கிட்டு இருக்கு. உங்களுக்கு இதைப்பத்தி தெரியுமா?” செல்வா தன் முகத்தை சுளித்துக்கொண்டான்.
“ஊர்ல இருக்கறவன் என்ன வேணா பேசுவான்… செல்வா… இதையெல்லாம் நீங்க நிஜம்ன்னு நம்பிக்கிட்டு என்னை சந்தேகப்பட்டு என்னை தப்பா நினைக்கறீங்களே; வாய்க்கு வந்ததைப் பேசி உங்க வார்த்தையாலேயே என்னைச் சித்திரவதை பண்றீங்களே; உங்களுக்கு கொஞ்சமாவது சுயபுத்தி இருக்கா?”

“சுகன்யா… எனக்கு புத்தி இருக்கவேதான் உடனடியா இதைப்பத்தி உன் கிட்ட தெளிவாப் பேசிடணுங்கற முடிவுக்கு வந்திருக்கேன்..”

“செல்வா… என்னைப் பத்தி எவன் என்னப் பேசறான்னு நான் கவலைப்படலே; என்னைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க; இப்ப அதுதான் எனக்கு முக்கியம். நான் ஒழுக்கமானவள்னு எனக்குத் தெரியும். என் மனசாட்சிக்குத் தெரியும். என் குடும்பத்துக்கு தெரியும். உங்களுக்கும் தெரியும்ன்னு இந்த நிமிஷம் வரைக்கும் நம்பிக்கிட்டு இருக்கேன். அந்த நம்பிக்கையை நீங்க மோசம் பண்ணீடாதீங்க.”

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.