கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“இட்ஸ் ஆல் ரைட். இப்ப நான் என் காதல் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சிட்டேன். கூடிய சீக்கிரம் மொத்தமா எல்லாத்தையும் மறந்துடுவேங்கற நம்பிக்கை எனக்கு வந்திடிச்சி.” சுகன்யா புல்தரையில் உட்கார்ந்துகொண்டு தன் கால்களை மெதுவாக அசைத்துக்கொண்டிருந்தாள்.

“ம்ம்ம்… சுகா… நீ தப்பா நினைக்கலேன்னா நான் வேணா செல்வாகிட்ட ஒரு தரம் பேசட்டுமா? நேத்து அவன் எங்கிட்ட செல்லுல பேசும்போது உடைஞ்சு போய் அழுததை நீதான் கேட்டியே?” சுகன்யாவின் இடதுகரத்தை அனு ஆதுரமாக பற்றிக்கொண்டாள்.

“இல்லேடீ… செல்வா சொன்னதும் சரிதான். ஒடைஞ்சு போன மண் பானையை எப்படி ஒட்ட வெக்கமுடியும்? தூளானாது தூளானதுதான். எந்த தண்ணியை ஊத்தி பிசைஞ்சாலும் அது திரும்பவும் ஒட்டாது.”

“சே..சே… மனசை தளரவிடாதேடீ சுகா… உடைஞ்ச போன எதையும் ஒட்டறதுக்கு மார்க்கெட்ல க்யூக் ஃபிக்ஸ் வந்திடிச்சி…” அனு சிரித்து சுகன்யாவின் மூடை மாற்ற முயற்சித்தாள்.

“ஒடைஞ்சு போன மனசை ஒட்டறதுக்கு மட்டும் இன்னும் எந்த கோந்தும் கடையில வரலேடீ…” சுகன்யாவும் வாய்விட்டு சிரித்தாள்.

“சுகா… உங்களுக்குள்ள நடந்த முடிஞ்ச கசப்பான நிகழ்ச்சிகளெல்லாம் உன்னோட பேரண்ட்சுக்கு தெரியுமாடீ?”

“செல்வா, நான் போட்ட மோதிரத்தை கழட்டி எறிஞ்சு, எங்களுக்கு நடுவுல இருந்த உறவை மொத்தமா முறிச்சிட்டாங்கறதை தில்லிக்கு நான் கிளம்பறதுக்கு மொதல் நாள் என் வீட்டுலே சொல்லிட்டேன்..” சுகன்யா மெலிதாக முறுவலித்தாள்.

“சுகா… நான் கதை கேக்கறேன்னு நினைக்காதே. உன் மனசுல இருக்கற வலி எனக்கு நல்லாப்புரியுது. எல்லாத்துக்கும் நான் சிரிக்கறேனே; அது எதனால தெரியுமா?”அனுவின் உதடுகளில் ஒரு கள்ளப்புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

“சொல்லுடீ… நானும் உங்கிட்ட சிரிக்க கத்துக்கறேன்… சொல்லுடி அனு..” சுகன்யா எழுந்தாள். எழுந்தவள் குனிந்து அனுவின் கையைப்பிடித்து எழுப்பினாள். விடுதி அறையை நோக்கி அவர்கள் பரபரப்பில்லாமல் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.

“சுகன்யா… நானும் என் வாழ்க்கையில ஒரு காதல் தோல்வியை சந்திச்சிருக்கேன். அந்த தோல்விலேயிருந்துதான், சிரிக்கறதுக்கு நான் கத்துக்கிட்டேன். வாழ்க்கையை எப்படி அர்த்தமுள்ளதா வாழறதுங்கறதையும் என் காதல் தோல்வியிலேதான் நான் கத்துக்கிட்டேன். எதையும், யாரையும் பார்த்து நான் சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். நவ் அயாம் ஹேப்பி.” அனு தன் கையை சுகன்யாவின் தோளில் போட்டுக்கொண்டாள்.
மணி இரவு ஒன்பதாகியிருந்தது. சுகன்யா நைட்டிக்கு மாறியிருந்தாள். அனு ஒரு லூசான காட்டன் டிரவுசரும், சட்டையையும் அணிந்துகொண்டிருந்தாள்.

“சுகா… உன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும், உன் காதல் முறிஞ்சு போன விஷயம் அதிர்ச்சியை கொடுத்து இருக்குமே?” சுகன்யா தன் கட்டிலில் ஒருகளித்து படுத்திருந்தாள். சுகன்யாவின் அருகில் வந்து உட்கார்ந்தாள் அனு. சுகன்யாவின் தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு, அவள் நெற்றியை வருடிக்கொடுத்தாள். சுகன்யா தன் விழிகளை மூடிக்கொண்டாள்.

“எனக்கு மேரேஜ் வேண்டாம்மா. இப்ப எனக்கு முடிவு பண்ணியிருக்கற கல்யாணத்தை அப்படியே நிறுத்திடலாம். செல்வாவுக்கு நான் செய்யறது எதுவுமே சுத்தமா பிடிக்கலேங்கறான். நான் உக்காந்தா குத்தம்ங்கறான். எழுந்து நின்னா தப்புங்கறான். என் முகத்தை பாக்கவே பிடிக்கலேன்னு சொன்னான். முடிவா என்னை அவன் வெறுக்கறதாவும் சொல்லிட்டான். என்னை வெறுக்கறவனை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கமுடியும்? அவன் என் மனசை நோகடிச்சுட்டு என்னை விட்டு பிரிஞ்சு போயிட்டான்.”

சுகன்யா, தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் உண்டான, கோபத்தை, ஆத்திரத்தை, வெறுப்பை, ஏமாற்றத்தை, ஒரு வாரமாக மிகவும் சிரமப்பட்டு மனதுக்குள் அடக்கி வைத்திருந்தாள். தில்லிக்கு கிளம்புவதற்கு முன், அவள் மனதிலிருந்து உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காமல் பீறீட்டுக்கொண்டு வெளியே வந்தன. அந்த வேகத்தில் அவள் செல்வாவை
“அவன்’
“இவன்’ என பேசினாள்.

“என்னடீ சொல்றே?” சுந்தரி திடுக்கிட்டுப்போனாள்.

நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து செல்வாவை
“அவர்’ என்று மரியாதையுடன் பேசிக்கொண்டிருந்த சுகன்யாவின் வாயில், அன்று செல்வா
“அவன்’ ஆக மாறியிருந்ததை கவனிக்கத் தவறாத சுந்தரி மனதுக்குள் வெகுவாக அதிர்ச்சியடைந்தாள்.

“எங்க காதல், நடந்து முடிஞ்சிருக்கற நிச்சயதார்த்தம், எங்களுக்குள்ள இருந்த எல்லா உறவும் மொத்தமா முறிஞ்சிப் போச்சுன்னு சொல்றேன்.”

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.