கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“செல்வாவுக்கு உன்னைப் பிடிக்கலையா? அந்த மாதிரி அவன் சொல்ற அளவுக்கு நீ என்னடீப் பண்ணே? அதையும்தான் கொஞ்சம் சொல்லேன்?”

“அவன் மனசு ஒரு சாக்கடையாப் போயிடிச்சிம்மா. அந்த சாக்கடையை நம்ம வீட்டுல திரும்பவும் குத்திக் கெளற வேணாம்ன்னு பாக்கறேன் நான்.”

“இங்கே பாருடி… காதலிச்சது நீங்க… ஊர் சுத்தினது நீங்க… ஆனா உங்களுக்கு கல்யாணத்தை நிச்சயம் பண்ணது நாங்க… நீங்களா உங்க இஷ்ட்டத்துக்கு எந்த முடிவுக்கும் சட்டுன்னு வந்துட முடியாது; இதை நீ நல்ல ஞாபகம் வெச்சுக்கோ.” சுந்தரி உறுமினாள்.

“இந்தக் கதையை, உனக்கும் எனக்கும் எந்த ஒறவும் இல்லேன்னு சொல்லி, நான் போட்ட மோதிரத்தை கழட்டி என் மூஞ்சிலே விட்டெறிஞ்சுட்டுப் போனானே, அவன் கிட்ட போய் சொல்லு. சுகன்யாவும் தன் குரலை தனக்கு உரிமையுள்ள இடத்தில், தன் வீட்டில், தன் தாயிடம் உயர்த்தினாள்.

“என்னடி உளர்றே? மோதிரத்தை கழட்டி குடுத்துட்டானா?” சுந்தரியின் மனதில் செல்வாவின் பால் சீற்றமும், அவள் குரலில் அந்த கோபமும் வெளிவந்தது.

“நான் சொன்னது தப்பும்மா… அவன் கழட்டி என் கையில குடுக்கலை. என் மூஞ்சியிலே விசிறி அடிச்சான். நீ போட்ட நாலு சவரம் செயினு இன்னும் அவன் கழுத்துலத்தான் இருக்கு. வரப்போற என் மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப நல்லவன்னு, அவனைத் தலைக்கு மேலே தூக்கி வெச்சிக்கிட்டு குதிச்சது நீயும்… அப்பாவும்தான்.”

“சுகன்யா…” சுந்தரியின் முகம் சிவந்து போயிருக்க, அவள் இடது கை விரல்கள் நடுங்கின.

“இப்ப நீ இதுக்கெல்லாம் என்னடா அர்த்தம்ன்னு அவனை கேட்டீன்னா, அந்த செயினையும் கழட்டி உன் மூஞ்சியிலே அடிச்சாலும் அடிப்பான். போய் சந்தோஷமா எடுத்துக்கிட்டு வா…” சுகன்யாவின் உடலில் ரத்தம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

“சுகா… என்னம்மா ஆச்சு? என்ன விஷயம்? ஏதாவது உங்களுக்குள்ள சண்டையா?” முகத்தில் கலக்கத்துடன் கேட்டுக்கொண்டே உள் அறையிலிருந்து வெளியில் வந்த சிவதாணுவின் மனதுக்குள் வாலில்லாத ராகு படமெடுத்து எழுந்தான்.

“உன் கிட்ட போய் நான் பேசறேனே, என் புத்தியைத்தான் செருப்பால அடிச்சுக்கணும். நீயாச்சு… உனக்கு செல்லம் குடுக்கற உங்க அப்பனாச்சு. காலத்துக்கும் உன் கிட்ட என்னாலப் படமுடியாதுடீயம்மா…?”

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.