கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

சுகன்யாவின் மனம் தன் நிலையில் நிற்காமல் அலைந்து கொண்டிருந்தது. தன் விழிகளிலிருந்து வடியும் கண்ணீரைத் துடைக்கவும் முயற்சிக்காமல் அலைகளில் நின்றுகொண்டு, தன்னை மூழ்கடித்து விடுவது போல் தன்னை நோக்கி வரும் அலைகளை வெறித்துக்கொண்டிருந்தாள் அவள்.

தீடீரென சுகன்யாவின் மனதில் செல்வாவின் முகத்தை உடனடியாக மறக்க வேண்டும் என்ற தீவிரமான ஒரு வெறி அவளுக்குள் எழுந்தது. இன்று செல்வா, தான் ஒரு ஆண் என்ற அகந்ததையில், தன்அகம்பாவத்தை என்னிடம் காட்டிவிட்டு போயிருக்கிறான். நாளை வேறு பெயருடன், வேறு ஒரு ஆண் என் வாழ்க்கையில் மீண்டும் வர முயற்சிக்கலாம். நானும் என் மதிமயங்கி அவனை நோக்கி நகரலாம். வருபவன் செல்வாவைப் போல் தன் அகம்பாவத்தை காட்ட முயலலாம்.

எந்த ஆண்மகனையும் நம்பி சுகன்யா இல்லை. என்னால் தனித்து வாழ முடியும். வாழ்ந்து காட்டுவேன். இதற்கு என்ன வழி? சுகன்யா மனமிருந்தால் மார்க்கம் உண்டடி… அவள் உதடுகளில் மெல்லிய புன்னகையொன்று எழுந்தது.

சுகன்யா மீண்டும், ஒரு நத்தை தன்னை தன் கூட்டுக்குள் சுருக்கிக்கொள்வது போல், ஒரு ஆமை தன் உடலை தன் ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வது போல், தன்னை, தன் மனதை தனக்குள் ஒடுக்கிக் கொள்ள விரும்பினாள். அவள் கண்களில் ஒரு தீவிரம் எழுந்தது. எழுந்த தீவிரம் மெல்ல மெல்ல பற்றி, கொழுந்து விட்டு உடலங்கும் எரிய ஆரம்பித்தது .

மனதுக்குள் ஒரு முடிவெடுத்ததும், தன் மூச்சு சீராவதை, சீரான மூச்சால், தன் உடல் தளருவதையும், தன் தேகத்தின் சூடு குறைவதையும், உணர்ந்தாள் சுகன்யா. தன் விழிகளை துடைத்துக்கொண்டாள். ஆர்ப்பாட்டமான அலைகளை விட்டு மெல்ல நகர்ந்தாள். தன் அலுவலகத்தை நோக்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள் சுகன்யா.

நான்கைந்து வாரங்களுக்குப் பிறகு, அன்று இரவு சுகன்யா நேரத்துக்கு தூங்கினாள். நிம்மதியாக தூங்கினாள். காலை ஐந்தரைமணி வாக்கில் படுக்கையைவிட்டு எழுந்தபோது உண்டான பரவசமான புத்துணர்ச்சியை விழிமூடி மனதிற்குள்ளாகவே, சிறிதுநேரம் அனுபவித்தாள். உற்சாகத்துடன் கட்டிலை விட்டு குதித்து, ஹவாய் சப்பலை காலில் மாட்டிக் கொண்டு மெல்ல நடந்து பால்கனிக்கு வந்தாள்.

விடுதி பால்கனியிலிருந்து வெளியில் பார்த்தபோது, வெகு அழகான புல்தரை அவள் கண்களுக்குத் தெரிய மனம் சட்டென லேசாகியது. ஒரே அளவில், ஒரே உயரத்தில், புற்கள் சீராக வெட்டப்பட்டு, அழகான பச்சைப்பாயாக, பச்சைக்கம்பளமாக விரிந்திருந்த பார்க்கில், வயது வித்தியாசமில்லாமல் ஆண்களும் பெண்களும் வேர்க்க விறுவிறுக்க நடந்து கொண்டிருந்தார்கள். இளைஞர்களும், இளைஞிகளும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

நடுத்தர வயது குமரர்களும், குமரிகளும், தங்கள் உடல்களை வளைத்தும், நீட்டியும், மடக்கியும், யோகாப்பியாசம் செய்து கொண்டிருந்தார்கள். வயதானவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே தங்கள் கை கால்களை ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தார்கள்.

நீள் வட்டமாக வடிவமைக்கப்பட்டிருந்த பார்க்கின் நெடுகிலும், சரக்கொன்றை மரங்கள், தங்க நிறத்தில் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. தில்லியின் சாலைகளில், அடர்த்தியான நீலத்திலும், சிவப்பிலும், மஞ்சள் நிறத்திலும் மரங்கள் பூத்து குலுங்கிக்கொண்டிருந்தது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வீட்டு சுற்று சுவர்களுக்குள் ஆங்காங்கு மாமரங்களும் தங்கள் பங்குக்கு, காய்த்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

மே மாதத்தின் மெல்லிய காலை நேரத்துக்காற்று சுகன்யா அணிந்திருந்த நைட்டிக்குள் புகுந்து வெளியேற, காற்றின் மென்மையான ஸ்பரிசம் அவள் மார்பையும் அடிவயிற்றையும் வருடிக்கொண்டு சென்றது உடலுக்கும் உள்ளத்துக்கும் மிக மிக இதமாக இருந்தது. காற்றில் இன்னும் சூடு ஏற ஆரம்பிக்கவில்லை.

தில்லிக்கு வந்ததுக்கு அப்புறம் இந்த ஒரு வாரமாத்தான் நிம்மதியா இருக்கறமாதிரி நான் ஃபீல் பண்றேன். சுகன்யாவுக்கு தன் மனதில் எழுந்த இந்த திடீர் உணர்வு வியப்பைக் கொடுத்தது. இடம் மாறினா மனசுல இருக்கற பாரமும், அழுத்தமும் குறையுமா என்ன?

வந்ததுலேருந்து இந்த மூணு வாரமா, ஒரு ரூம்லே தனியா இருந்தேன். இப்ப என்னையும் அனுராதாவையும் இந்த அறையிலே இரண்டு பேராக தங்க வசதி பண்ணிக் கொடுத்திருக்காங்க. என் வயசையொத்த ஒரு பெண் எனக்கு அறைத்தோழியா வந்ததும், தனிமையில இருக்கற நேரம் கொறையவே, அந்த பாவி செல்வாவை மனசுக்குள்ள நெனைச்சு நெனைச்சு நான் அழறதும் கொறைஞ்சு போச்சு.

செல்வாவை என்னால முழுசா மறக்கமுடியுமா? சுகன்யாவின் மனதில் இந்தக்கேள்வி அவள் அனுமதிக்கு காத்திராமல் சட்டென எழுந்தது. எவனை மறக்க நினைக்கிறேனோ அவன் நினைப்புதான் முதலில் எனக்கு வருகிறது. மனதின் ஆட்டத்தை நினைத்தபோது அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.

சுகன்யா… இடம் மட்டும் முக்கியம் இல்லேடி. காலமும் மனுஷனோட வாழ்க்கையில மிக மிக முக்கியமான பங்கை வகிக்குது. நாள் ஆக ஆக, கொஞ்சம் கொஞ்சமா நீ உன் காதல் எபிசோட்டை மறக்க ஆரம்பிச்சுடுவே. மறந்துதானே ஆகணும்? உன் தாத்தா சொல்ற மாதிரி, மறதிங்கறது மனுஷனுக்கு இயற்கை கொடுத்திருக்கற மிகப்பெரிய வரப்பிரசாதம். மறதியையும் நீ அனுபவி. எஞ்சாய் இட். அவளுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.

சுகன்யாவின் ரூம் மேட் அனுராதா மெல்லிய குறட்டையொலியை எழுப்பியவாறு இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். நிஜமாவே உடம்பின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கணுங்கற விழிப்புணர்ச்சி, தில்லியிலே படிச்சவங்க மத்தியிலே அதிகமாகவே இருக்கு. இல்லேன்னா, காலங்காத்தால, இவ்வளவு மனிதர்களை பூங்காவுல ஒருசேர பார்க்கமுடியுமா? கொஞ்சநேரம் நடந்துட்டு வரலாமா? அவளுக்கும் கால்கள் பரபரத்தன.

கல்லூரியின் ஹாஸ்டல் நாட்கள் மனதுக்குள் வந்தன. அந்த நாட்களில் அவளுடைய அறைத் தோழிக்கு நடக்கவேண்டும் என்று சொன்னாலே எரிச்சல் வந்துவிடும். அவசியமான வேலைகளுக்கு ஹாஸ்டலைவிட்டு வெளியில் போகவேண்டுமென்றாலும், முனகிக்கொண்டே, வேண்டா வெறுப்புடன்தான் அவள் கிளம்புவாள். ஒரு கிலோமீட்டர் போவதற்கும் ஆட்டோவைத்தான் அவள் தேடுவாள்.
காலை நேரத்தில் அவளை தொந்தரவு செய்யாமல், சுகன்யா ஜாகிங் சூட்டில், அறைக்கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு, கல்லூரி மைதானத்திற்கு கிளம்பிவிடுவாள்.

மீண்டும் ஒரு புது இடம். மீண்டும் ஒரு புது ரூம் மேட். ரெண்டு பேரும் ஒரு ரூம்ல செட்டில் ஆகி இன்னும் முழுசா ஒரு வாரம் ஆகலே. அனுவோடுதான் நான் அடுத்த இரண்டு மாதங்கள் இந்த அறையில் இருந்தாகணும். நடக்கிற விஷயத்துல இந்த அனுராதா எப்படியோ? வாக்கிங் போகலாம்ன்னு கூப்பிட்டா வருவாளா?

இன்னைக்கும், நாளைக்கும் விடுமுறைதானே? பார்க்குல காலாற நடந்துட்டு வந்து பகல் பூராத் தூங்கட்டுமே. யாரு வேணாங்கறது? அனுவை எழுப்பிப் பாக்கலாமா? யோசித்துக்கொண்டிருந்தாள் சுகன்யா.
“சுகன்யா, மணி என்னடி ஆகுது?”

அனுராதாவின் குழந்தைத்தனம் மாறாத குரல் அறைக்குள்ளிருந்து கிசுகிசுப்பாக வந்தது. சுகன்யா சட்டெனத் திரும்பிப்பார்த்தாள். அனு கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். பால்கனி கதவை மூடிக்கொண்டு குதிநடையாக அறைக்குள் வந்தாள் சுகன்யா.

இந்த நாலு நாள்ல, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் வாடீ போடீன்னு கூப்பிடற அளவுக்கு நெருக்கமாயிட்டோம். நிறைய விஷயங்கள்லே எங்க ரெண்டுபேருக்கும் கருத்துகள் ஒத்துப்போகின்றன. அனுராதாவும் சிரிச்சி சிரிச்சி பேசறா. பேசும்போதும், சிரிக்கும் போதும், இவளுக்கு முகம் மத்தாப்பூவா மலர்ந்து போகுது. எந்த சந்தர்ப்பத்துக்கும் ஏத்த மாதிரி, இவ உதட்டுல ஒரு ரெடிமேட் சிரிப்பை வெச்சிருக்கா. இவ சிரிப்பைப் பாத்தா என் மனசு நெறைஞ்சு போவுது.

நிஜமாவே அனுராதா மனசுலேருந்து சிரிப்பு இயற்கையா பொங்கி பொங்கி வருது. இவ நிச்சயமா போலியாக பொய்யாக சிரிக்கலை. சிரிக்கறது நல்லதுதானே. இதுவரைக்கும் எவனையும் இவ காதலிச்சு இருக்கமாட்டான்னு தோணுது! அதான் இவளுக்கு மனசுலேருந்து சிரிப்பு வருது! இப்போது சுகன்யாவுக்கு சிரிப்பு வந்தது.

சீனுவின் முகம் சுகன்யாவின் மனதுக்குள் வந்தது. அவனும் இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் சிரிப்பான். அவன் சிரிக்கற சிரிப்பை பாத்துத்தான் நான் அவன்கிட்ட மயங்கிட்டேன்னு மீனா ஒரு தரம் சொன்னா. சீனுவோட மூஞ்சியில சீரியஸ்னெஸ்ஸைப் பாக்கவே முடியாது. மீனா ரொம்பவே குடுத்து வெச்சவ.

சுகன்யா அறைக்குள்ளேயே தன் உடலை ஸ்ட்ரெச் செய்து கொண்டிருந்தாள். நின்ற இடத்திலிருந்தே அனுவின் பக்கம் திரும்பினாள். மெல்லிய போர்வையை காலிலிருந்து தலை வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு, கட்டிலில் உருண்டு கொண்டிருந்தாள் அவள். இவளால எப்படி கவலையே இல்லாம இப்படி பொழுது விடிய விடிய தூங்கிக்கிட்டே இருக்க முடியுது? சுகன்யாவின் உதட்டில் மீண்டும் புன்னகை எழுந்தது.

என் மனசு ஏன் இன்னைக்கு இப்படி பேயா அலையுது? ஏ மனமே சும்மாயிரு! தன் கூந்தலை முழுவதுமாக அவிழ்த்து முதுகில் படரவிட்டுக்கொண்டவள், தன் தலையில் மெல்ல ஒரு குட்டு குட்டிக்கொண்டாள். ஒரு மாதத்துக்கு பிறகு மனம் விட்டு சிரித்தாள்.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.