கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“அனு… குட்மார்னிங் அயாம் செல்வா ஹியர்.. ஹவ் ஆர் யூ?”

“ஹாய்… செல்வா… குட்மார்னிங்… குட்மார்னிங்… வாட் எ சர்ப்ரைஸ்? எங்கேருந்து பேசறே நீ?” அனுவின் முகம் மத்தாப்பூவாகி, கண்களும், உதடுகளும் ஒருங்கே தாமரையாக மலர்ந்தன. பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுகன்யாவை ஒருமுறை பார்த்த அனு, மீண்டும் தனக்கு வந்த
“கால்’லில் தன் கவனத்தை செலுத்தினாள்.

இது எந்த செல்வா? அனுவுக்கு என் செல்வாவைத் தெரியுமா?
“செல்வா குட்மார்னிங்’ என அனு கத்தியதும், சுகன்யாவின் முகம் சட்டென மாறியது. முகத்தில் இருந்த களை சட்டென இறங்கியது. அவள் தன் உதடுகளை கடித்துக்கொண்டாள்.

“சென்னையிலிருந்துதான் பேசறியா? மை டியர் தமிழ்செல்வன், நவ்… அயாம் இன் தில்லி… கேப்பிட்டல் ஆஃப் இண்டியா. கியா ஹால் ஹை ஆப்கா? டிக் டாக்? அயாம் அட்டெண்டிங் மேன்டேட்டரி ட்ரெய்னிங். சப் டீக் தோ ஹைன்னா? உனக்கெப்படி என் ஞாபகம் திடீர்ன்னு வந்திச்சி?” அனு ஹிந்தி, தமிழ், இங்லீஷ் என மாறி மாறி வார்த்தையாடினாள்.

“அனு… நீ தில்லியிலே இருக்கறது தெரிஞ்சுதான் உங்கிட்ட பேசறேன். எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் வேணும்.”

“சொல்லுடி செல்லம்… உனக்கு இல்லாத ஹெல்ப்பா? சொல்லு என்ன வேணும்?” அனு தன் கண்களை சுழற்றிக்கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டிருந்தாள். சுகன்யா அவள் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.

“அனு… இங்கே சென்னையிலேருந்து மிஸ் சுகன்யான்னு ஒரு தமிழ் லேடி… ஷீ ஈஸ் டேரக்ட் அஸிஸ்டெண்ட்… அவங்களும் தில்லிக்கு ட்ரெயினிங்க்காக வந்திருக்காங்க…”

“ஆமாம்… இந்த பேச்சுலே… மொத்தமே இரண்டு பேர்தான் தமிழ்நாட்டிலேருந்து ட்ரெய்னிங் அட்டண்ட் பண்றோம். சுகன்யான்னு சென்னையிலேருந்து ஒருத்தி வந்திருக்கா. அவளைப்பத்தி நீ எதுக்காக விசாரிக்கறே? நீயும் சென்னையிலே அவ ஆஃபிஸ்லேதானே வொர்க் பண்றே? அவ செல் நம்பர் உங்கிட்ட இல்லையா?” அனு சுகன்யாவை பார்த்து தன் கண்ணை சிமிட்டினாள்.

அனுவிடம் பேசிக்கொண்டிருப்பது அவளுடைய செல்வாதான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல், இப்போது சுகன்யாவுக்கு விளங்கிவிட்டது. அனுராதா பாண்டிச்சேரியிலிருந்து பயிற்சிக்காக வந்திருந்தாள். செல்வா இரண்டு மூன்று வாரங்கள் பாண்டிச்சேரிக்கு மாற்றலில் போனதும் சட்டென அவள் நினைவுக்கு வந்தது.

‘அவ செல் நம்பர் உங்கிட்ட இல்லையா?’ என அனு செல்வாவைக் கேட்டதும், அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுகன்யா விருட்டென எழுந்தாள். எழுந்தவளின் கையை இறுக்கிப்பற்றி, அவளைத் தன்னருகில் அமர்த்திக்கொண்டாள் அனு. தன் உதட்டின் மேல் ஒரு விரலை வைத்து அவளை அமைதியாக இருக்கும்படி கண்களால் சொன்னாள். தன் செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

“யெஸ்… யெஸ்… அவங்க போன் நம்பர் எங்கிட்ட இருக்கு… ஆனா அனு… ப்ளீஸ்… லிசன் டு மீ.. நான் சுகன்யாவைப் பத்தி உங்கிட்டே விசாரிச்சேன்னு அவங்களுக்கு தயவு செய்து தெரியவேண்டாம்.”

“செல்வா… என்ன மேன் இது? நீ பேசறதுல கொஞ்சமாவது ஞாயம் இருக்கா? நீ ஒரு அழகான பொண்ணைப்பத்தி எங்கிட்ட விசாரிக்கறே? நீ விசாரிக்கற விஷயம் அவளுக்கு தெரியக்கூடாதுங்கறே? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல சம்திங்க்… சம்திங்ங்கா? அனு கொக்கரித்தாள்.

“அனு… ப்ளீஸ்… அயாம் கொய்ட் சீரியஸ்… நீ உன் வழக்கம்போல என்னை நக்கலடிக்காதே? அவங்க எப்படி இருக்காங்கன்னு மட்டும் சொல்லேன்?

“எப்படி இருக்காங்கன்னா?”

“ம்ம்ம்… சாதாரணமா கலகலப்பா சிரிச்சி பேசிகிட்டு இருக்காங்களா? இல்லே மூட் அவுட் ஆன மாதிரி இருக்காங்களா?

“செல்வா… இதெல்லாம் நான் எப்படி சொல்லமுடியும்? ஒரு பொண்ணோட மூடு ஒரு நாளைக்கு பத்து தரம் மாறும்? நீ ஏன் அவகிட்ட பேச தயங்கறே?”

“ப்ளீஸ்… நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க அனு..” செல்வா கெஞ்சினான்.

“என்ன புரிஞ்சுக்கணும்? எதையோ நீ என்கிட்ட மறைக்கறே? கிளியரா சொல்லு… உனக்கு என்ன வேணும்? சுகன்யாவோட பேசணுமா உனக்கு? உன் நம்பரை கொடுத்து அவளை உங்கிட்ட பேச சொல்லவா?”

“நோ… நோ… அந்தமாதிரி எதுவும் பண்ணிடாதேடி தாயே?

“ஹேய்… எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை.. அதுக்குள்ளே என்னை அம்மாவாக்கிட்டியே?” அவள் அவுட் சிரிப்பு சிரித்தாள்.

“அனு… பீ சீரியஸ்… நான் பேச விரும்பினாலும், சுகன்யா என்கிட்ட பேசமாட்டாங்க. ஜஸ்ட் அவங்க எப்படி இருக்காங்கன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சா போதும். ஈஸ் ஷி டூயிங் பைன்..? ஸே… அவங்களோட ஹெல்த் எப்படியிருக்கு? நார்த்திண்டியன் சாப்பாடெல்லாம் அவங்களுக்கு ஒத்துக்குதா? வெயில்லே ஒண்ணும் கஷ்டப்படலியே?”

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.