கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“அண்ணா… மணி அஞ்சரைக்கு மேல ஆவுது. எழுந்து குளியேன். ஸ்டேஷனுக்கு போகவேணாமா?” செல்வாவின் கையில் சூடான காஃபி டம்ளரைத் திணித்தாள் மீனா. மெல்லிய பழுப்பு நிற ஷிஃபான் சாரியும், வெள்ளை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் ரவிக்கையுமாக, அன்று வெகு சிரத்தையாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

“நான் வரல்லே. உனக்கு எங்கேயாவது போயே ஆகணும்ன்னா, சீனுவை துணைக்கு கூப்பிட்டுக்கிட்டு போ.” காஃபியை இரண்டே விழுங்கில் குடித்த செல்வா, மீண்டும் அதே பெஞ்சில் சுருண்டுப் படுத்துக்கொண்டான்.

* * * * *

“மச்சான்… உடம்பு கிடம்பு சரியில்லையாடா?” சீனு செல்வாவை உலுக்கினான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே மாப்ளே.” செல்வா முனகியவாறு எழுந்து உட்கார்ந்தான்.

“டேய்… இன்னைக்கு உன் ஆள் டெல்லிக்கு கிளம்பறடா? மறந்துட்டியா?” சீனு அவன் முதுகில் விளையாட்டாகக் குத்தினான்.

“யாரு எங்கப் போனா எனக்கென்னா? ஆளைக் கொஞ்சநேரம் நிம்மதியா இருக்க விடுடா.” செல்வா தன் முகவாயை சொறிந்துகொண்டான்.

“யாரு எங்கப் போனா உனக்கென்னவா? என்ன மச்சான்… எங்கிட்டவே நீ ஃபிலிம் காட்டறே? எனக்கு காது குத்தி, பூ சுத்தற ஐடியாவை மட்டும் நீ தயவு செய்து விட்டுடு. சுகன்யா உன்னை கலாய்க்கறாளா? இல்லே நீ அவளை கலாய்க்கறியா? அடிக்கடி நீங்க ரெண்டு பேரும் இந்த மாதிரி சண்டை போட்டுக்கிட்டாலும், அந்த சண்டைக்கு சுத்தமா மதிப்பில்லாம போயிடும்.” சீனு அவன் தலை முடியை கலைத்தான்.

“ப்ளீஸ்… என்னைத் தொந்தரவு பண்ணாதேன்னு ஒரு தரம் சொன்னா உனக்குப்புரியாதா?” செல்வா அவன் முகத்தைப் பார்க்கவில்லை.

“என் மூஞ்சைப்பாத்து பேசுடா. திரும்பவும் உங்களுக்குள்ள எதாவது அடிதடியா? அடிச்சது யாரு; அடி வாங்கினது யாரு?” சீனு கிண்டலாக சிரித்தான்.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.