வனிதா, “நான் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை விஸ்வா. குழந்தைகள் என்னுடன் இருக்க சம்மதிச்சு இந்த விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டா நீ மறுபடி கோர்ட் வாசலை மிதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இல்லைன்னா கோர்ட்டில் என் லாயர் எனக்காக வாதாடுவாங்க”
கோபம் கண்களில் கொப்பளிக்க அவள் கொடுத்த விண்ணப்பத்தில் கையொப்பம் இட்ட பிறகு விஸ்வா அவ்விடத்தை விட்டு அகன்றான்.
அடுத்த நாள் சுமதியின் அலுவலகத்தில் …
சுமதி, “விஸ்வா, உன் வேலைகளுக்கு மத்தில எதுக்கு இவ்வளவு தூரம் வந்து இருக்கே? நானே இன்னைக்கு சாயங்காலம் PMLக்கு வரலாம்ன்னு இருந்தேன். அப்படி ரொம்ப அவசரம்ன்னா ஒரு ஃபோன் பண்ணி இருந்தா நானே வந்து இருப்பேனே?”
விஸ்வா, “என் மேல உங்களுக்கு அக்கறை இருக்குன்னு நினைச்சேன். ஆனா நீங்களே என்னை இப்படி ஏமாத்துவீங்கன்னு நினைக்கலை”
Suber
Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .