ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

வத்சலா முகத்தில் பீதி படற, “எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லை. அப்படி ஏதாவுது?”

அமுதா, “நோ நோ, தப்பா எடுத்துக்காதீங்க. அவ விஸ்வாவை எந்த அளவுக்கு காதலிச்சான்னு எனக்கு நல்லா தெரியும்”

வத்சலா, “அப்ப எதுக்குக் கேட்டீங்க?”

அமுதா, “சில விஷயங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். I hope you appreciate the doctor-patient confidentiality”

வத்சலா, “Of course. ஆனா இந்த விஷயத்தில் .. Both me and Subbu as well as Viswa’s parents are in the dark. நாங்க எல்லாரும் ஹெல்ப்லஸ்ஸா ஃபீல் பண்ணறோம்”

அமுதா, “உங்க எல்லோருடைய ஆதங்கம் எனக்குப் புரியுது. சரி, நான் மேற்கொண்டு கேட்கலாமா?”

வத்சலா, “ப்ளீஸ் .. ”

அமுதா, “யூ.எஸ்ல படிச்சுட்டு இருந்தப்ப செக்ஸ் எஜுகேஷன் இருந்ததா?”

வத்சலாவின் முகத்தில் குழப்ப ரேகைகள் படறத் தொடங்கின …

வத்சலா, “எஸ் … எதுக்குக் கேட்கறீங்க?”

வத்சலாவின் முகபாவத்தில் இருந்து அவர் பதட்டப் படுவது நன்றாகத் தெரிந்தது …

அமுதா, “வத்சலா, நான் ஒண்ணு உங்களுக்கு சொல்ல விரும்பறேன். ஒரு தனி மனுஷியா இந்த டைவர்ஸ் நடக்கக் கூடாதுன்னு நினைக்கறேன். உங்க விருப்பமும் அதுதான்னு எனக்குத் தெரியும். சோ, தயவு செஞ்சு ஏன் எதுக்குன்னு கேட்காம நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லறீங்களா?”

வத்சலா முகம் இறுக, “அவளுக்கு நைந்த் க்ரேடில் இருக்கும் போது இருந்தது”

அமுதா, “அந்த வருஷக் கடைசியில் நீங்க இந்தியாவுக்கு வந்துட்டீங்க இல்லையா?”

வத்சலா, “ஆமா”

அமுதா, “பொதுவா அமெரிக்கக் குடம்பங்ளில் சின்ன வயசிலேயே bird and bees அப்படின்னு பெற்றோர் குழந்தைகளுக்கு செக்ஸைப் பத்தியும் குழந்தை பிறப்பதைப் பத்தியும் சொல்லிக் கொடுப்பாங்க. அந்த மாதிரி நீங்க வனிதாவுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா?”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.