ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

அமுதா, “ஓ, ரெட்டைக் குழந்தைகள்ன்னா நாலு மாசத்திலேயே ட்ரான்ஸ்ஃப்யூஷன் (Transfusion) பிரச்சனை எதுவும் இருக்குதான்னு தெரிஞ்சுக்க டாக்டர் அல்ட்ரா ஸ்கேன் எடுத்துக்கச் சொல்லி இருப்பாங்களே”

Twin-to-twin transfusion – இரட்டை சிசுக்களுக்கு இடையே இரத்தப் பரிமாற்றம். இப்படிப் பட்ட நிலைமை வர வாய்ப்புக்கள் அரிது. இரட்டையர் உடலோடு உடல் ஒட்டிப் பிறப்பதும் இந்தக் காரணத்தினாலே. அப்படிப் பட்ட நிலை வந்தால் அது இரு சிசுக்களையும் பாதிக்கும். லேசர் கதிர்கள் மூலம் சில இரத்தக் குழாய்களை அடைத்து இரு சிசுக்களுக்கும் தாயிடம் இருந்து தனித்தனியே இரத்தம் வரும் படி செய்து இத்தகைய நிலையை சரி செய்யும் மருத்துவம் சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.

விஸ்வா, “ஆமா, நாலு மாசம் கழிச்சு அல்ட்ரா ஸ்கேனில் பிறக்கப் போறது இரட்டைக் குழந்தைகள்ன்னு அதுவும் பெண் குழந்தை ஆண் குழந்தை ரெண்டும் அப்படின்னு தெரிஞ்சதுக்குப் பிறகு ரொம்ப சந்தோஷப் பட்டா. அவளோட அண்ணனுக்கும் அவளுக்கும் ரொம்ப வயசு வித்தியாசம். ரொம்ப நெருக்கம் கிடையாது. எங்க அப்பாவும் அவளோட அம்மாவும் அவளுக்கு ரோல் மாடல்ஸ். அந்த மாதிரி எங்க குழந்தைகளும் இருக்கணும்ன்னு சொல்லிட்டே இருந்தா”

அமுதா, “அவ முழுகாம இருந்தபோது நீ வேலையில் ரொம்ப பிஸியா இருந்தியா?”

விஸ்வா, “ஆமா. ஆனா நான் முடிஞ்ச வரை அவகூட ரொம்ப நேரம் இருப்பேன். அடுத்த அஞ்சு மாசமும … In fact, நான் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து ரொம்ப அன்னியோன்னியமா இருந்தோம் … ”

அமுதா, “You mean … ” என்று உள் அர்த்தத்துடன் கேட்க

விஸ்வா, “ஆமா, அப்போ எங்களுக்கு நடுவே ஒரு புது க்ளோஸ்னஸ் வந்தது. எந்த விதத்திலும் அவ சங்கோஜப் படலை … ” என்றவாறு நெளிந்தான்

விஸ்வா மேலும் அவர்களது உறவைப் பற்றி விவரிக்க சங்கோஜப் படுவதை உணர்ந்த அமுதா பேச்சை மாற்ற, “முழுகாம இருந்தப்போ கஷ்டப் பட்டாளா?”

விஸ்வா, “ம்ம்ம் … ரொம்ப இல்லை. நாலாவுது மாசத்தில் கொஞ்ச நாள் ரொம்ப வாந்தி எடுத்தா. மத்தபடி கடைசி வரை எந்தப் பிரச்சனையும் இல்லை”

அமுதா, “தன்னை ஒழுங்கா கவனிச்சுட்டாளா?”

விஸ்வா, “ரொம்ப பொறுப்போட இருந்தா. முன்னே எல்லாம் ரொம்ப இம்பல்ஸிவ்வா இருப்பா. அவ மனசுக்குத் தோணின காரியம் எதுவானாலும் உடனே அதில் இறங்கிடுவா. ஆனா முழுகாமல் இருக்கும் போது என்ன சாப்பிடணும், என்னென்ன உடற் பயிற்சி செய்யணும் அப்படின்னு கேட்டுத் தெரிஞ்சுட்டு அதன் படி நடந்துட்டா. Till her ninth month we made it a point that she has regular exercises”

அமுதா, “என்ன எக்ஸர்ஸைஸ் பண்ணுவீங்க?”

விஸ்வா, “நிச்சயம் தினம் முக்கால் மணி நேரமாவுது நடப்போம். தவிற வாரத்தில் மூணு நாளாவுது ஸ்விம்மிங்க் போவோம்”

அமுதா, “எதாவுது காம்ப்ளிகேஷன்ஸ் இருந்ததா?”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.