ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

விஸ்வா, “அப்ளிகேஷனை நேரா கொண்டு போய் கொடுத்தேன். பாத்ததும் அது என்னோடதுன்னு தெரிஞ்சு வனிதாகிட்ட சந்திரசேகர் கேட்டு இருக்கார். அவ என்னைப் பத்தி சொல்லி இருக்கார். அவரோடவும் பிறகு அவரோட மாமனார் சண்முகம் சாரோட, சுமதி மேம் கூட இன்டர்வியூ நடந்தது. சுமதி மேடத்துக்கு என்னை வேலைக்கு எடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அப்போ, சண்முகம் சார் என் ரிலீவலைப் பத்தியும் அதில் இருந்த சிக்கலைப் பத்தியும் விசாரிச்சார். அவர் பேசின வரை நல்ல ரெகமெண்டேஷன் இல்லாம என்னை எடுப்பதில் அவருக்கு விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சுட்டேன். ஆனா, முடிவை சந்திரசேகர்கிட்டே விட்டுட்டார்”

அமுதா, “அந்த சமயத்தில் அந்தக் கம்பெனியில் வேலையைப் பத்தி நீ என்ன நினைச்சே? Did you like it?”

விஸ்வா, “PMLக்கு சில நிரந்தர வாடிக்கையாளர்கள் இருந்தாங்க. ஆனா வளர்ச்சின்னு பார்த்தா ரொம்ப கம்மி. மார்கெட்டிங்க், சேல்ஸ் இதெல்லாம் சந்திரசேகரின் மேற்பார்வையில் இருந்தது. அவர் பேசிக்கா ஒரு எஞ்சினியர். அதுக்கு மேல் அவர் படிக்கலை. ஆனா இன்டஸ்ட்ரியில் சண்முகம் சாருக்கு நிறைய தொடர்புகள். அதன் மூலம் சந்திரசேகருக்கும் நிறையப் பேரை தெரிய வந்தது. நல்லா மேற்பார்வை செய்யக் கூடியவர். A good administrator. ஆனா அவரால புதுசா எதையும் யோசிக்க முடியாது. அப்படி யோசிச்சாலும் மாமனாருக்கு ரொம்ப பயந்தவர். வெளியில் யாருக்கும் தெரியாது. தான் புதுசா எதாவுது செஞ்சு அது நஷ்டத்தில் முடிஞ்சுடுமோன்னு அவருக்கு ரொம்பவே பயம். இதெல்லாம் வனிதா எனக்கு கொடுத்த டீடெயில்ஸ். இதை எல்லாம் வெச்சுப் பார்த்தப்ப எனக்கு என் திறமையைக் காட்ட அது ஒரு ரொம்ப நல்ல வாய்ப்புன்னு தோணுச்சு. சந்திரசேகர்கூட ஒண்ணு ரெண்டு தடவை மீட் பண்ணினதும் ஒரு நல்ல ராப்போ (rapport) வந்தடுச்சு. I thought I can do a very good job … I really wanted that job .. ஆனா சண்முகம் சாருக்கு என்னை எடுப்பதில் இஷ்டம் இல்லைன்னு புரிஞ்சுட்டேன். அதனால சந்திரசேகர் தயங்கறார்ன்னு நினைச்சேன்”

அமுதா, “உன் ட்ராக் ரெக்கார்டுக்கு ஏன் அவர் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்”

விஸ்வா, “அவருக்கு PMLஐ பெரிசாக்கணும்ன்னு ஆசை. அப்படி விரிவாக்கம் செய்யும் போது இன்டஸ்ட்ரியில் பல கம்பனீஸ்கூட தொடர்பு கொள்ள வேண்டி இருக்கும் .. including my earlier company .. என் பழைய மேனேஜர் தயவும் வேண்டி இருக்கலாம்ன்னு நினைச்சார்”

அமுதா, “அவர் அப்படி நினைச்சது சரியா?”

விஸ்வா, “இல்லை. வேலையில் சேர்ந்ததுக்குப் பிறகு அதை அவருக்கு நிரூபிச்சும் காட்டினேன். .. அதுக்குப் பிறகு அவர் எனக்கு ஒரு விசிறி ஆயிட்டார். ஆனா அந்த சமயத்தில் அவருக்கு என்னை சேர்த்துகறதில் விருப்பம் இல்லை”

அமுதா, “இருந்தாலும் முடிவு எடுக்கும் பொறுப்பை சந்திரசேகர்கிட்டே விட்டுட்டார் இல்லையா?”

விஸ்வா, “அவரும் மாமனாருக்கு பயந்து ஹெஸிடேட் பண்ணினார். At least that is how he made it look (அப்படித்தான் அவர் நடந்து கொண்டார்)”

அமுதா, “அப்பறம் என்ன ஆச்சு”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.