ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

தன் முகத்தில் தோன்றிய பெருமிதத்தை விஸ்வா மறைக்க முடியவில்லை ..

அமுதா, “அப்பறம் உன் வேலை எப்படி போயிட்டு இருந்தது?”

விஸ்வா, “அந்த ஒன்றரை வருஷமும் நரகம். எப்போடா வீட்டுக்குப் போவோம்ன்னு இருக்கும். வேலையை பத்தி ஞாபகம் வரக் கூடாதுன்னு வனிதா ரொம்ப கவனமா இருப்பா”

அமுதா, “ஏன் விஸ்வா? அவ்வளவு பிடிக்காத வேலையா?”

விஸ்வா, “வேலை எனக்கு பிடிச்சதுதான். அனா, ஆஃபீஸ் பாலிடிக்ஸ், சீனியர்ஸுக்கு ஜால்ரா போடறது, நான் செஞ்ச வேலையை என் மேனேஜர் தான் செஞ்சதா அவரோட சீனியர்ஸுக்கு சொல்லிக்கறது இந்த மாதிரி நிறைய. எனக்கு துளிகூட பிடிக்காத, நான் வெறுக்கற விஷயங்கள்”

அமுதா, “As an ex-army man I know how you would have felt. இருந்தாலும் ரெண்டு வருஷத்தில் ப்ரொமொஷன் வந்ததா?”

விஸ்வா, “ரெண்டு வருஷம் முடியும் போது … அந்த மாரத்தான் ரேஸ் முடிஞ்ச சமயம் … நான் ப்ரொமோஷனை ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்தேன் … என் மேனேஜர் எனக்குப் ப்ரொமோஷன் கிடைக்காத மாதிரி செஞ்சுட்டான்”

அமுதா, “ஏன்?”

விஸ்வா, “என்னப் ப்ரொமோட் பண்ணிட்டா அவனுக்கு கீழே வேலை செய்ய என்னை மாதிரி ஆள் யாரும் இல்லை. அவனுக்கு அடுத்த ஒரு வருஷத்தில் ப்ரொமோஷன் வாய்ப்பு இருந்தது. அதனால் எனக்கு ப்ரொமோஷன் கிடைக்காம செஞ்சுட்டான். வேலையை ரிஸைன் பண்ணினா எனக்கு சரியான ரெகமெண்டேஷன் கொடுக்க மாட்டேன்னு பயமுறுத்தினான். நான் ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டேன். I was so so upset. எல்லாரும் ஆறுதல் சொன்னாங்க. But I could never get over it … ”

அமுதா, “ம்ம்ம் … then what happened?”

விஸ்வா, “வனிதா ஒரு நாள் PMLஇல் சேல்ஸ் மேனேஜர் போஸ்ட் ஒண்ணை புதுசா உருவாக்கறாங்கன்னு சொன்னா. நிச்சயம் அந்தப் போஸ்டுக்கு நான் ரொம்ப சூட்டபிளானவன்னு சொல்லி எனக்கு வேணும்ன்னா அதுக்கு அப்ளை பண்ணச் சொன்னா”

அமுதா, “நீ அப்போ சேல்ஸ் எஞ்சினியராத்தானே இருந்தே? உனக்கு உன் கம்பெனியில் ப்ரொமோஷன் வந்து இருந்தா என்ன வேலைக்கு உன்னை ப்ரொமொட் பண்ணி இருப்பாங்க?”

விஸ்வா, “அஸிஸ்டண்ட் சேல்ஸ் மேனேஜர்”

அமுதா, “சோ, வனிதாவின் கம்பெனியில் அதை விட உயர்ந்த போஸ்ட்டுக்கு உன்னை அப்ளை பண்ணச் சொன்னாளா?”

விஸ்வா, “அப்படி சொல்ல முடியாது. அப்போ PMLஇன் மொத்த வருமானம் நூறு கோடிக்கும் கம்மி. நான் வேலை செஞ்சுட்டு இருந்த கம்பெனியின் டர்ன் ஓவர் கிட்டத்தட்ட அறுநூறு கோடி. சோ, … in a sense I was quite elligible”

அமுதா, “சோ, அப்ளை பண்ணினியா?”

விஸ்வா, “I was hesitating due to my manager’s threat. இன்டர்வியூவில் செலக்ட் ஆன பிறகு அவங்க என்னைப் பத்தி இந்தக் கம்பெனியில் விசாரிச்சா என் மேனேஜர் எனக்கு சரியான ரெகமெண்டேஷன் கொடுக்க மாட்டான்னு பயப் பட்டேன்”

அமுதா, “பழைய கம்பெனி கொடுக்கும் ரெகமெண்டேஷன் அவ்வளவு முக்கியமா?”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.