ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

விஸ்வா, “முதல் மூணு மாசம் ரொம்ப hecticஆ இருந்தது. I wanted to familiarize myself with the environment quickly. முதல் ஒன்றரை மாசம் வரைக்கும் ஒரு நாளைக்கு பத்து பனிரெண்டு மணி நேரம் வேலையில் மூழ்கி இருந்தேன். ஆஃபீஸைத் தவிற ஃபாக்டரி அப்பறம் வேர் ஹவுஸ் இந்த ரெண்டு இடத்துக்கும் போய் அங்கே இருப்பவர்களோட நல்லா பழகி எங்க கம்பெனியில் நடக்கறது எல்லாத்தையும் தெரிஞ்சுட்டேன்”

அமுதா, “ஏற்கனவே உனக்கு வனிதா சொல்லலையா?”

விஸ்வா, “அது வரைக்கும் எக்ஸிகியூடிவ் அஸிஸ்டண்ட் ஆக இருந்ததால் எம்.டி, போர்ட் மெம்பர்ஸ் இவங்க கண்ணோட்டத்தில் கம்பெனியில் நடப்பது எல்லாம் அவளுக்குத் தெரிஞ்சு இருந்தது. அதை எல்லாம் வனிதா எனக்கு முன்னாடியே சொல்லியும் இருந்தா. நானும் சேர்ந்த நாளில் இருந்து சந்திரசேகர், அப்பறம் எங்க ப்ரொடக்ஷன் மேனேஜர், ஃபைனான்ஸ் மேனேஜர் இவங்க எல்லோருடனும் தினமும் கம்பெனி விஷயங்களைப் பத்தி பேசிப் பழகியதால அவங்க கண்ணோட்டத்தில் கம்பெனியின் நடவடிக்கைகளைப் பத்தி தெரிஞ்சுட்டேன். ஆனா பல விவரங்கள் அடிமட்டத்தில் இருப்பவர்களோட பேசிப் பழகும் போதுதான் தெரியவரும்”

அமுதா, “ம்ம்ம் .. முதலாளிகளின் கண்ணோட்டத்தைப் பத்தி வனிதா மூலம் தெரிஞ்சுட்டு அடிமட்டத்தில் இருப்பவர்களின் கண்ணோட்டத்தை அவங்க கூட பழகி தெரிஞ்சுட்டே. I like your approach. உன்னுடைய ஆத்மார்த்த மேனேஜ்மெண்ட் குரு யார் Sun Tzuவா?”

(Sun Tzu – சுன் ட்ஸு – ஒரு சீனத் தளபதி. அவர் எழுதிய Art of War (போரின் கலை) இன்னமும் நிர்வாகவியலில் ஒரு பொக்கிஷமாகப் போற்றப் பட்டு வருகிறது. நம் நடைமுறையில் இருக்கும் பல பழமொழிகள், All is fair in love and war உட்பட அந்தப் புத்தகத்தில் இருந்த வந்தன)

அமுதாவின் படிப்பறிவிலைப் பற்றி வியப்பில் முகம் மலர்ந்த விஸ்வா, “எஸ். I really admire your vast knowledge. எவ்வளவு படிச்சு இருக்கீங்க?”

அமுதா, “தமிழில் ஒரு பழமொழி இருக்கு. “ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது” அப்படின்னு. அந்த மாதிரி நான்”

விஸ்வா புரியாமல் தலையை சொறிய …

அமுதா, “Oh don’t bother. பெங்களூரில் பிறந்து வளர்ந்த உனக்கு அது தெரிஞ்சு இருக்க வாய்ப்பில்லை. It basically emphasizes the importance of practical experience over bookish knowledge. சரி, அப்பறம் உன் லைஃப் எப்படிப் போயிட்டு இருந்தது? வனிதாவுக்கும் உன் அளவுக்கு வேலை பளு இருந்ததா?”

விஸ்வா, “நான் வேலைக்கு சேர்ந்த சமயம். வனிதா அஸிஸ்டண்ட் சேல்ஸ் அக்கவுண்ட்ஸ் மேனேஜர் (Assistant Sales Accounts Manager) வேலைக்கு மாத்தினாங்க. அவளே கேட்டு மாத்திட்டதா சொன்னா. நான் எப்படியும் ரொம்ப பிஸியா இருப்பேன். அதனால அவ ஒரு 9 to 5 ஜாப் வேணும்ன்னு அதுக்கு மாத்திட்டதா சொன்னா. நானும் அதை நம்பினேன்”

அமுதா, “ஏன் இப்போ அதை நம்பலையா?”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.