ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

விஸ்வா, “ம்ம்ஹூம். மேலோட்டமா அவங்க ரெண்டு பேருக்கும் இடையே இருக்கும் நெருக்கம் மத்தவங்க கண்ணுக்கு, முக்கியமா என் கண்ணுக்குத் தெரியக் கூடாதுன்னு மாத்திட்டா”

அமுதா, “விஸ்வா, அவ உனக்கு ஏற்படுத்திய மன வேதனையினால் நீ அவ மேல வெச்சு இருந்த நம்பிக்கை (Trust) மிகவும் பாதிக்கப் பட்டு இருக்கு. அதுக்காக, நடந்த ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு புது அர்த்தம் கற்பிக்கப் பார்க்காதே. அவளோட அப்போதைய நடத்தைகள் ஒவ்வொண்ணையும் ஒரு புது அர்த்தத்தோட பார்க்காதே. நிச்சயம் அடுத்த கட்டத்தில் நடந்ததை எல்லாம் அலசிப் பார்க்கப் போறோம். அப்போ உன் மனசில் இருக்கும் சின்னச் சின்ன சந்தேகங்களுக்கு நிச்சயம் விடை கிடைக்கும். ப்ளீஸ்.”

விஸ்வா மௌனம் காத்தான் …

அமுதா, “சரி விடு. எப்போ உங்க குழந்தை பெத்துக்க முடிவு எடுத்தீங்க. I suppose … அது வரைக்கும் தள்ளிப் போட்டுட்டு இருந்தீங்க இல்லையா?”

விஸ்வா, “ஒரு நல்ல நிலைமைக்கு வரும் வரை குழந்தைங்க வேண்டாம்ன்னு தள்ளிப் போட்டுட்டு இருந்தோம். வனிதாவுக்கு எப்ப வேணும்ன்னாலும் ஓ.கேன்னு சொல்லி இருந்தா. நான் தான் தள்ளிப் போட்டேன்”

அமுதா, “ம்ம்ம் … அவ கருத்தடை மாத்திரை எதுவும் எடுத்துக்கலைன்னு வனிதா சொன்னா”

விஸ்வா, “PMLஇல் வேலை கிடைச்சதுக்கு அப்பறம் நான் தள்ளிப் போட விரும்பலை. சோ, நான் எந்த பிரிகாஷனும் எடுத்துக்கலை”

அமுதா, “You mean using condoms?”

விஸ்வா, “ஆமா. நான் வேலையில் சேர்ந்து ஒன்றரை மாசத்தில் அவ கர்ப்பமா இருக்கான்னு தெரிஞ்சுது”

அமுதா, “Was that a happy moment?”

விஸ்வா, “It was definitely for me. எனக்கு அது நிச்சயம் ரொம்ப சந்தோஷமான தருணம். வனிதாதான் ஏனோ எல்லாம் நல்ல படியா முடியணும்ன்னு ரொம்ப பதட்டப் பட்டா”

அமுதா, “முதல் பிரசவம். அதை ஏத்துக்கற, ஃபேஸ் பண்ணும் விதம் ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடும். சில பெண்கள் ரொம்ப பதட்டத்தோட இருப்பாங்க. அதுவும் உங்க குடும்பத்தில் இரட்டைப் பிறப்புக்களுக்கு வாய்ப்பு ரொம்ப அதிகம். அந்த பயமா இருந்து இருக்கும்”

விஸ்வா, “May be. இரட்டைக் குழந்தைங்கன்னு தெரிஞ்சதுக்குப் பிறகுதான் அவளோட டென்ஷன் கொஞ்சம் கம்மி ஆச்சு. ரெண்டு சிசுவும் நல்லா வளர்ந்துட்டு இருக்குன்னு தெரிஞ்சதுக்குப் பிறகு அவ ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்ணினா”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.