ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

ராம், “சோ, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததுக்காக இந்த டைவர்ஸ்ஸா?”

அமுதா, “இல்லை. அதற்குப் பிறகு நாலு வருஷம் எதுவும் நடக்கலை. கடந்த ஏழரை மாசத்துக்கு முன்னாடி மறுபடியும் படி தாண்டி இருக்கா. மறுபடியும் முதல் முறை அப்படி நடந்ததுக்கு முக்கியக் காரணம் சந்திரசேகர்தான். அதற்குப் பிறகு சுயநலமான காரியம்ன்னு தெரிஞ்சும் அதனால் விஸ்வா எந்த விதத்திலும் பாதிக்கப் படலைன்னு நினைச்சுட்டு ஈடு பட்டு இருக்கா. அந்த விஷயம் விஸ்வாவுக்கு தெரியாமல் இருக்க ரொம்ப பிரயர்த்தனப் பட்டு இருக்கா. அவ அதில் ஈடு பட்டதுக்கு. ஐ மீன் மறுபடி நாலு வருஷத்துக்குப் பிறகு தொடர்ந்து ஈடு பட்டதுக்கு எதாவுது காரணம் இருக்கணும். என்னுடன் பேச விஸ்வா தயக்கப் பட்டதால நான் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டுடன் பேச ஏற்பாடு செய்யட்டுமான்னு கேட்டேன். அதுக்கு அவர் உங்ககூட பேசுவதை விரும்புவதா சொன்னார்”

ராம், “டாக்டர், இன்னமும் நீங்க சொல்வதை என்னால் நம்ப முடியல. நீங்க நினைக்கற மாதிரி விஸ்வா நிச்சயம் எதாவது ஒரு விதத்தில் காரணமா இருந்து இருக்கணும். அவன்கிட்டே இருக்கும் அளவுக்கு இல்லைன்னாலும் வனிதா கூடவும் நான் ரொம்ப பாசமா இருக்கேன். அவளும் என் கூட அப்படித்தான். அவன் குழந்தைங்க ரெண்டும் என் குழந்தைங்க மாதிரி நான் பாசமா இருக்கேன்”

அமுதா, “சோ, ராம், உங்களால் ஒரு மனோதத்துவ மருத்துவர் மாதிரி Non-judgemental ஆக அணுக முடியுமா”

ராம், “நிச்சயம் பாரபட்சம் இல்லாமல் என்னால் விஸ்வாகூட பேச முடியும்”

அமுதா, “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் ராம்”

ராம், “ஓ.கே டாக்டர். விஸ்வா கூட பேசற ஒவ்வொரு விஷயத்தையும் நான் உங்ககிட்டே சொல்லறேன்”மாலை ….

அமுதா, “வா விஸ்வா, சாரி ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வெச்சுட்டேனா?”

விஸ்வா, “இல்லை. வந்து பத்து நிமிஷம் கூட ஆகலை”

அமுதா, “வேறு ஒரு கப்பிள் அப்பாயிண்ட்மெண்ட் வாங்காம .. they just walked in. அஞ்சு நிமிஷம், போயிடுவோம்ன்னு சொல்லிட்டு வந்தாங்க. அவங்க கூட பேசி லேட் ஆயிடுச்சு”

விஸ்வா, “யாரு?”

அமுதா, “சாரி, நீ அவங்களை பார்த்து இருக்க மாட்டே. வெளியில் யாராவுது வெயிட் பண்ணிட்டு இருந்தா என்னுடன் பேசிட்டு இருப்பவங்களை இந்த வழியா அனுப்புவேன்” என்றபடி அந்த அறையில் இருந்த மற்ற ஒரு கதவைக் காட்டினார்

அமுதா, “Just to protect their privacy. அவங்களுதும் ஒரு டைவர்ஸ் கேஸ்தான். My recent victory in setting right a nearly broken marriage. இந்தப் பக்கம் வந்தோம் தேங்க் பண்ணிட்டுப் போலாம்ன்னு வந்தோம்ன்னு சொல்லிட்டு வந்தாங்க. அது இதுன்னு பேசி அவங்க போக அரை மணி நேரம் ஆயிடுச்சு”

சலனமற்ற முகத்துடன் விஸ்வா, “ம்ம்ம்”

அமுதா, “So, how do you feel today? நைட்டு நல்லா தூங்க முடிஞ்சுதா?”

விஸ்வா லேசாகச் சிரித்த படி, “ரெண்டு லார்ஜுக்கு மேல் தேவையா இருக்கலை”

அமுதா, “I suppose two larges for a healthy man like you is Ok. ஆனா, அதுக்குத் தகுந்த சாப்பாடும் தூக்கமும் வேணும். ஒழுங்கா சாப்பிடறையா?”

விஸ்வா, “Yes. In fact … வீட்டில் குழந்தைகளோட நைட்டு டின்னர் சாப்பிட்டேன் மறுபடி காலைலயும் அவங்களோட ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டேன்”

வனிதா அவன் வீட்டில் சாப்பிடுவது இல்லை என்றது நினைவுக்கு வந்தது …

அமுதா, “Vanitha didn’t join you?”

விஸ்வா, “எப்பவும் அவங்க ரெண்டு பேரையும் சாப்பிட வெச்சுட்டு அதுக்குப் பிறகுதான் நாங்க ரெண்டு பேரும் சாப்பிட உட்காருவோம்”

அமுதா, “வனிதா சாப்பிட்டாளா?”

விஸ்வா முகத்தில் சிறு குற்ற உணற்வு படற, “தெரியலை”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.