ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

அமுதா, “அவ மேல உனக்கு இருக்கும் கோவம் எனக்குப் புரியுது. ஆனா, அவ உன் குழந்தைகளில் அம்மா. அவ ஒழுங்கா சாப்பிட்டுத் தூங்கலைன்னா அது அவள் உடல்நலனைப் பாதிக்கும். இல்லையா?”

தலை குனிந்த விஸ்வா மேலும் மௌனம் காத்தான்.

அமுதா, “டைவர்ஸ்ஸுக்குப் பிறகு உன் மகன் சந்தோஷமா இருக்கணும்ன்னா வனிதா அவன் கூட இருக்கும் போதாவுது சந்தோஷமா, உற்சாகத்தோட இருக்கணும். இல்லையா?”

விஸ்வா, “எஸ்”

அமுதா, “அதுக்காகவாவுது அவ கூட நீ சகஜமா பேசலாம் இல்லையா?”

விஸ்வா, “ஆனா என்னால அவகூடப் பேச ஆரம்பிச்ச மறுகணம் அவ செஞ்ச காரியம் மனசில் வருது. கடைசியா நான் அவளை சந்திரசேகருடன் பார்த்தது, கேட்டது இது எல்லாம் ஞாபகம் வந்து ரொம்ப கோவம் வந்துடுது. குழந்தைகள் இருக்கும் போது வேண்டாம்ன்னுதான் நான் அவகூட பேசறது இல்லை”

அமுதா, “சரி. விடு. We will visit that topic later. இப்போ நாம் நீ PMLஇல் வேலைக்கு சேர்ந்த பிறகு நடந்தவைகளில் கவனம் செலுத்தலாம். ஓ.கே?”

விஸ்வா, “நீங்களே don’t jump the gun அப்படின்னு சொல்லிட்டு. நடுவில் இருந்த ஒரு மாசத்தைப் பத்தி பேசாமல் அதுக்குப் பிறகு நடந்ததைப் பத்தி பேசலாங்கறீங்களே?”

அமுதா, “எஸ். விஸ்வா, முந்தாநாள் நான் உனக்கு இந்த கவுன்ஸிலிங்கில் நாலு கட்டம் இருக்குன்னு சொன்னேன் இல்லையா? இப்போ முதல் கட்டத்தில் இருக்கோம். வனிதா முதலில் தவறிய அந்த ஒரு மாசத்தைப் பத்தியும் உனக்கு விஷயம் தெரிந்ததற்கு முன் கடந்த ஆறு மாசங்களைப் பத்தியும் அடுத்த கட்டத்தில் பேசலாம்”

விஸ்வா, “ஏன்?”

அமுதா, “நடந்தவைகளை நினைச்சுப் பார்த்த பிறகு, அப்படி நடந்ததுக்கு உங்க ரெண்டு பேர் தரப்பிலும் என்னென்ன காரணங்கள் இருந்ததுன்னு அலசுவது சுலபம். Don’t you agree”

விஸ்வா, “என் தரப்பில் என்ன காரணம் இருக்கு?”

அமுதா, “இருக்கலாம். எதுவும் இல்லாமலும் இருக்கலாம். விஸ்வா, ஒருத்தர் தவறு செய்வதற்கு அவங்களா கற்பிச்சுக்கற காரணங்களுடன் மற்றவங்கனால உருவாகும் காரணங்களும் இருக்கும். அதை நீங்க ரெண்டு பேருமே புரிஞ்சுக்காம இருக்கலாம். என்னை நம்பு. ப்ளீஸ்”

கண்களில் கோபம் கொப்பளிக்க விஸ்வா, “It sounds like witch hunt to me. இல்லாத காரணத்தைக் கண்டுபிடிச்சு என்னையும் கில்டியா ஃபீல் பண்ண வைக்கற மாதிரி இருக்கு”

அமுதா, “விஸ்வா, என் அனுபவத்தை நீ ரொம்ப கம்மியா எடை போடறே. பரவால்லை. உன் மேல் எந்தத் தவறும் இல்லைன்னா நிச்சயம் உன்னை எந்த விதத்திலும் கில்டியா ஃபீல் பண்ண வைக்க மாட்டேன். ப்ராமிஸ். ஓ.கே? இந்த கவுன்ஸிலிங்கின் வரை முறைகள் அப்படி. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.