ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

ராம், “No issues …”

விஸ்வா, “சரி .. அப்பறம் பேசறேன்” என்ற படி இணைப்பைத் துண்டித்தான் ..

வெளியில் ராம் அருகில் இருந்த நான்கு பெற்றோருக்கும் ஆறுதல் சொல்வதில் முனைந்தான் …

விஸ்வா, “ஹனி, நான் சொல்லிக் கொடுத்தேன் ஞாபகம் இருக்கா … டீப்பா ப்ரீதிங்க் எக்ஸர்ஸைஸ்? அதை இப்போ பண்ணணும்.. ஓ.கே?”

வனிதா, “ம்ம்ம் .. I will try”

அடுத்த அரை மணி நேரம் வனிதாவின் வலியும் விஸ்வாவின் இதயத் துடிப்பும் அதிகரிப்பதும் குறைவதுமாகக் கழிந்தது … அவ்வப்போது வனிதாவின் முனகல்கள் லேசான கதறல்களாக மாறின. விஸ்வா பதட்டம் இல்லாத முகத்துடன் வனிதாவுக்கு ஆறுதலாக அவ்வப்போது அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை வலியை எதிர்கொள்ளச் செய்து கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்தில் நர்ஸ் இன்டர்காமில் அழைத்ததும் சீனியர் டாக்டர் திரும்ப வந்து வனிதாவின் கால்களுக்கு இடையில் அமர்ந்தார்

சீனியர் டாக்டர், “வனிதா, புஷ் பண்ணும்மா. கம் ஆன்”

விஸ்வா நர்ஸுடன் சேர்ந்து வனிதாவின் வயிற்றை நீவியபடி, “ஹனி, புஷ் பண்ணு டார்லிங்க் … கம் ஆன் …”

வனிதாவின் கதறல் உச்ச ஸ்தாயிக்கு மாறி ஓரிரு நிமிடங்கள் நீடித்து அடங்கியது … சில கணங்களில் உலகில் காலடியெடுத்து வைத்த தன் மகனின் அழுகை கேட்டது ..

சீனியர் டாக்டர், “இங்கே வாங்க விஸ்வா”

கருப்பப் பை நீரும் லேசான இரத்தமும் படிந்த அந்தச் சிசுவை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தவனின் கையில் நர்ஸ் ஒரு கத்தரிக் கோலைத் திணித்தாள்.

சீனியர் டாக்டர், “பார்த்து அலுங்காம அம்பலிகல் கார்டை கட் பண்ணுங்க. நர்ஸ் காமிச்சுக் கொடுங்க”

நர்ஸ் காட்டிய படி தொப்புள் கொடியை துண்டித்தான் . நர்ஸ் அந்தக் குழந்தையை கையில் எடுத்துக் கொள்ள சீனியர் டாக்டர் அடுத்த வருகையில் கவனம் செலுத்தினார்.

சீனியர் டாக்டர், “ம்ம்ம் .. வனிதாவை மறுபடி புஷ் பண்ண வையுங்க .. .கம் ஆன் வனிதா, புஷ், let us welcome your daughter next”

மறுபடி முனகிக் கொண்டு இருந்த தன் இணையின் அருகே வந்த விஸ்வா, “Come on honey .. இப்போ அந்த அளவுக்கு இருக்காது … புஷ் பண்ணுட்டா … ”

அடுத்த இரு நிமிடங்களில் மறுபடி வனிதா கதறி அடங்க .. தன் மகளையும் அவள் தாயிடம் இருந்து பிரித்து விஸ்வா உலகுக்கு அறிமுகப் படித்தினான். வனிதா மயக்கமுற்று இருந்தாள்.

சீனியர் டாக்டர், “அவளுக்கு ரொம்ப ஸ்ட்ரெயினா இருக்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். குழந்தைங்க ரெண்டும் நான் எதிர்பார்த்ததை விட ஹெல்தியா இருக்கு. Congrats Viswa”நடந்தவற்றை சொன்ன விஸ்வா, “இப்போ நினைச்சுப் பாத்தாலும் உடம்பு சிலிர்க்குது. As though I am the one who brought them into this world”

அமுதா, “உண்மையாவே அது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமா இருந்து இருக்கும். அப்போ, அந்த நிமிஷத்தில் வனிதாவைப் பத்தி உன் மனசில் என்ன தோணிச்சு”

விஸ்வா கண்கள் பனிக்க, “வலின்னா என்னன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா, அதை நாமே வரவெச்சுக்கறது மகப்பேறில் மட்டும் தான் என்பதை உணர்ந்தேன். அவளுக்கு நன்றி சொல்லணும்ன்னு இருந்தது. I loved her a thousand times more that moment. எந்த அளவுக்கு கஷ்டப் பட்டான்னு நினைச்சு ரொம்ப க்ளோஸ்ஸா ஃபீல் பண்ணினேன்”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.