ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

வத்சலா, “ஹூம் … உன் கோவத்தைப் பார்த்தா விஸ்வாவும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணி இருப்பான்னு தெரியுது. Forget I said anything”
வத்சலா, “Well … நான் அவகிட்டே பேச ஆரம்பிச்சேன். அவ தனக்கு எல்லாம் தெரியும்ன்னு தடுத்துட்டா”

அமுதா, “ஓ.கே வத்சலா. உங்களுக்கு உங்கள் மகளின் எதிர்காலத்தில் அக்கறை இருக்கற மாதிரி தெரியலை. நீங்க போகலாம்”

வத்சலா, “How dare you? …. முதலிரவுக்கு முன்னால் அவ என் கிட்டே எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டா. அதுதான் நிஜம்”

அமுதா, “Of course அதுதான் நிஜம். ஆனா, எல்லாம் தெரிஞ்ச பெண்கள்கூட முதல் முதலா அம்மா அதைப் பத்தி பேசும்போது எதுவும் சொல்லாமல் கேட்டுப்பாங்க. நிச்சயம் அதற்கு முன்னாடி, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி அவளுடன் செக்ஸைப் பத்தி பேசி இருக்கீங்க” என்றவர் தன் யூகத்தை உறிதி செய்து கொள்ள தொடர்ந்து, “முக்கியமா செக்ஸுக்கும் லவ்வுக்கும் இருக்கும் வித்தியாசத்தை சொல்லிக் கொடுத்து இருக்கீங்க” என்று ஆணித்தரமாக முடித்தார்

மௌனம் நிலவியது …

வத்சலாவின் குனிந்த தலை நிமிர்வட்தற்கு சில நிமிடங்கள் ஆகின.

நிமிர்ந்த வத்சலாவின் கண்கள் சிவந்து இருந்தன …

வத்சலா, “She did something stupid. Didn’t she?”

அமுதா, “Much more than that!”

பெருமூச்செறிந்த வத்சலா, “அப்போ அவளுக்கு பத்து வயசு இருக்கும். சுப்புவோட சக ஊழியர், நெருங்கிய நண்பர், தவிற எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் கார்ல் ஸிம்ப்சனுக்கு கேன்ஸர் வந்தது. அவரும் அவர் மனைவி ஸில்வியா ஸிம்ப்சனும் எங்ககூட ரொம்ப க்ளோஸ். அவங்க மகளும் வத்சலாவும் க்ளாஸ்-மேட்ஸ். ஒரு வருஷம் தொடர்ந்து ட்ரீட்மெண்ட் நடந்தது இம்ப்ரூவ்மெண்ட் எதுவும் இல்லை. இன்னும் ஆறு மாசம் அதிக பட்சம் ஒரு வருஷம்ன்னு சொல்லி இருந்தாங்க. பாலியேடிவ் கேரில் (paliative care – அதற்கு மேல் குணமாக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் வலிகளை மட்டும் குறைக்க அளிக்கப் படும் மருத்துவ உதவி) இருந்தார் … சுப்புவும் நானும் ரொம்ப சப்போர்டிவா இருந்தோம் … சுப்புவும் ஸில்வியாவும் … எப்போ தொடங்குச்சுன்னு எனக்குத் தெரியலை … ஸில்வியாவுக்கு ஆறுதல் சொல்வதில் தொடங்கி இருக்கணும். ஒரு நாள் ஸ்கூலில் இருந்து தலை வலிக்குதுன்னு வனிதா சீக்கிரம் வீட்டுக்கு வந்து இருக்கா. வீட்டில் சுப்புவையும் ஸில்வியாவையும் ஒண்ணா படுக்கையில் பார்த்து இருக்கா”

இடைமறித்த அமுதா, “அவங்களோட நெருக்கம் உங்களுக்குத் தெரிஞ்சு இருந்ததா?”

வத்சலா, “எஸ். நேரடியா அதைப் பத்தி பேசலைன்னாலும். என்னால யூகிக்க முடிஞ்சது. ஒரு அளவுக்கு நானே சுப்புவை என்கரேஜ் பண்ணினேன்”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.