ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

வத்சலா, “ரெண்டு குழ்ந்தைகளையும் அவர்களின் வயது வித்தியாசத்தினால் தனித் தனியே சைக்கோ தெரபிக்கு கூட்டிட்டுப் போனோம். செக்ஸ் அப்படின்னா என்னன்னு விளக்கினாங்க. அப்போ அந்த சைக்கியாட்ரிஸ்ட்தான் வனிதாவுக்கு செக்ஸ் வேற லவ் வேறன்னு சொல்லிக் கொடுத்தாங்க” என்று முடித்தார்

அமுதா, “Was she taught about sexual abstinence? (sexual abstinence – முறையற்ற உடலுறவைத் தவிர்ப்பது – குறிப்பாக இளைய தலைமுறையினர் – இப்போதும் அமெரிக்காவில் இது ஒரு சர்ச்சைக்கு உரிய விஷயம் – விவரங்களுக்க் Sex education என்ற விக்கிப்பீடியா பகுதியை காண்க)”

வத்சலா, “I guess so”

அமுதா, “மறுபடி, ஐ மீன், வயசுக்கு வந்த பிறகு அவளை அந்தத் தெரபிக்குக் கூட்டிட்டுப் போனீங்களா?”

வத்சலாவின் முகத்தில் சிறு கலவரம் தோன்றி மறைந்த பின் இல்லை என்று தலையசைத்தார்

அமுதா, “அந்த சைக்கியாட்ரிஸ்ட் மறுபடி கூட்டிட்டு வரணும்ன்னு சொல்லலையா?”

வத்சலா, “சொன்னாங்க. ஆனா நாங்க அவ சரியாயிட்டான்னு நினைச்சுக் கூட்டிட்டு போகலை”

அமுதா, “நீங்க கூட்டிட்டு போகாதது ரொம்ப பெரிய தப்பு”

வத்சலா, “Did she?”

பெருமூச்செறிந்த அமுதா, “Yes மேற்கொண்டு எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ்”

வத்சலா, “Is there anything that I or Subbu can do?”

அமுதா, “Nothing directly. ஆனா, வனிதாவிம் தயவு செஞ்சு இந்தப் பேச்சை எடுக்காதீங்க. இனிமேல் தான் அவளுக்கு நீங்க ரொம்ப சப்போர்டிவ்வா இருக்கணும். இதைப் பத்தி உங்க கணவரிடம்கூட பேசாமல் இருப்பது நல்லது” என்று விடைகொடுத்தார்

அடுத்த நாள் அமுதாவின் அலோசனைக் கூடத்தில் …

இந்தியாவுக்குத் திரும்பும் ஆயத்தங்களில் மூழ்கி இருந்த நிலையிலும் ராம் தன்னை தொலைபேசியில் அழைத்ததை நினைவு கூர்ந்தார் …

ராம், “ஹெல்லோ டாக்டர். நான் ராம் ஸ்ரீவத்சன் பேசறேன்”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.