ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

அமுதா, “ம்ம்ம் … என்ன?”

விஸ்வா, “வனிதாவுக்கு அது தெரிஞ்சா…”

அமுதா, “வனிதாவுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர் ராமும் அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்குவார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”

விஸ்வா, “சரி. நீங்க அவன் கிட்டே நேரா பேசி என்ன பேசினேன்னு கேட்டுக்குங்க”

அமுதா, “ஷ்யூர் .. ” என்ற பிறகு கைக் கடிகாரத்தைப் பார்த்தவர், “நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு ஃப்ரீயா?”

விஸ்வா, “I can make myself free”

அமுதா, “சரி. நாளைக்கு நாலு மணிக்குப் பார்க்கலாமா?”

விஸ்வா, “மேம், அதுக்கு மேல் நடந்ததை இன்னைக்குப் சொன்ன மாதிரி என்னால் சொல்ல முடியுமான்னு எனக்குத் தெரியலை”

அமுதா, “அதையும் பார்ப்போமே? டோண்ட் வொர்ரி” என்று அவனுக்கு விடை கொடுத்தார்

விஸ்வாவை அனுப்பிய பிறகு தொலைபேசியில் வனிதாவின் பெற்றோரின் இல்லத்தை அழைத்தார் ..

எதிர்முனையில் சுப்ரமணியன், “Vathsala and Subbu’s residence”

அவரது மனைவியின் பெயரை முதலில் சொல்லி பிறகு தன் பெயரை அவர் சொன்னது அமுதாவுக்கு மிகவும் பிடித்தது.

அமுதா, “மிஸ்டர் சுப்ரமணியன். நான் சைக்கியாட்ரிஸ்ட் அமுதா பேசறேன்”

சுப்பு, “ஓ! சொல்லுங்க டாக்டர்”

அமுதா, “நான் உங்க மனைவிகூட கொஞ்சம் பேசணும்”

சுப்பு, “இதோ. கூப்பிடறேன்”

சிறிது நேரத்துக்குப் பின்னர் .

வத்சலா, “ஹெல்லோ வத்சலா சுப்ரமணியன் ஹியர். சொல்லுங்க டாக்டர் அமுதா”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.