ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

சிறிது நேரம் மௌனம் காத்த விஸ்வா, “அடுத்த கட்டத்திலும் இதே மாதிரி என்னையும் வனிதாவையும் தனித் தனியா சந்திச்சுப் பேசுவீங்களா?”

அமுதா, “ஏன் கேட்கறே?”

விஸ்வா, “அவ சொல்லும் காரணங்களை எப்படி நான் நம்பறது? அவளே எதாவுது நினைச்சுட்டு அதை காரணம்ன்னு சொன்னா? Now I don’t trust her”

அமுதா, “முதலில் ரெண்டு பேரோடும் தனி தனியாதான் பேசப் போறேன். அதிலும் அவகூடத்தான் முதலில் பேசுவேன். அவ செஞ்ச தவறுக்கு அவ மனசில் சில காரணங்கள் இருக்கலாம். அவ யோசிக்காத விஷயமும் காரணமா இருக்கலாம். அப்படிப் பட்ட விஷயங்களை அவளுக்கு தெளிவு வரும்படி சுட்டிக் காட்டுவேன். நீ நினைக்கற மாதிரி எதாவுது பொய்யான காரணத்தை அவ சொன்னா அது பொய்ன்னு என்னால சுலபமா தெரிஞ்சுக்க முடியும். அவளுக்கு அதை உணர்த்தவும் முடியும். Don’t worry. அவ இருக்கும் நிலையில அவள் என்னிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. Do you agree with me?”

விஸ்வா, “I guess so. அதுக்குப் பிறகு என்னோடு பேசுவீங்களா?”

அமுதா, “எஸ், அவ தவறுக்கான காரணங்களை உன்னிடம் பகிர்ந்து கொள்வேன். அதற்குப் பிறகு அதில் உன் தவறுகள் எதாவுது இருக்கான்னு உன்னையே அலசிப் பார்க்கச் சொல்வேன். உன் தவறுகள்ன்னு உன் மனசு ஏற்றுக் கொண்டால் மட்டும் அதன் காரணங்களை ஆராய்ந்து பார்ப்போம். அதற்குப் பிறகு உன்னிடம் வனிதாவின் தவறுகளையும் அதன் காரணங்களையும் பகிர்ந்துட்ட மாதிரி அவகிட்டே உன் தவறுகளையும் அதன் காரணங்களையும் பகிர்ந்து கொள்வேன். சரியா?”

விஸ்வா, “ஓ.கே. அதுக்கு அடுத்த கட்டம் மன்னிப்புன்னு சொன்னீங்க. தவறுகளையும் அதன் காரணங்களையும் கேட்ட உடனே மன்னிச்சுட முடியுமா?”

அமுதா, “என் வாயால் அதை நீ கேட்டா நிச்சயம் முடியாது. அதனால உங்க ரெண்டு பேரையும் நீங்க செஞ்ச தவறுகளையும் அதுக்கான காரணங்களையும் மனம் திரந்து பேச வைப்பேன். நடந்தது நடந்துடுச்சு. அதை மறைச்சு ஓடி ஒளியறதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. வெளிப்படையா உனக்குத் தெரியும் தவறு ஒண்ணுதான். ஆனா உனக்குத் தெரியாம அவ மனசுக்குள்ளே எத்தனை நடந்து இருக்கோ. அதை எல்லாம் வெளியில் கொண்டு வரணும். அதே மாதிரி வெளிப்படையா உனக்குத் தெரிந்ததைத் தவிற அந்தத் தவறைச் சார்ந்த விஷயங்களை உன் மனசில் நீ நிறைய அனுமானம் செஞ்சுட்டு இருப்பே. ஆனா உண்மையா நடந்தது என்னன்னு உனக்குத் தெரிய வைக்கணும். கசப்பான உண்மைகளாகத் தான் இருக்கும் ஒத்துக்கறேன். ஆனா, அதை ஜீரணிக்கலைன்னா மன்னிப்புக்கு இடமே இருக்காது”

விஸ்வா, “ஓ.கே”

அமுதா, “சோ, How was your life after you joined PML?”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.