ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

விஸ்வா, “ம்ம்ம் … அதிகமா எதுவும் இல்லை. கடைசி ஒரு மாசம் ரொம்ப நேரம் நிற்பதற்கும் நடப்பதற்கும் சிரமப் பட்டா. அப்போ நடப்பதை நிறுத்திட்டு ஸ்விம்மிங்க் மட்டும் செஞ்சோம்”

அமுதா, “How was the child birth?”

விஸ்வா, “ம்ம்ம் … சுலபமாத்தான் இருந்ததது. பொதுவா இரட்டைக் குழந்தைகள்ன்னா சீக்கரமே பிரசவம் ஆயிடும்ன்னு டாக்டர் சொன்னாங்க. குறைப் பிரசவம் ஆனாலும் ஆகலாம்ன்னு சொல்லி இருந்தாங்க. இருந்தாலும் அவளுக்கு தானா வலி வரும் வரை வெய்ட் பண்ணலாம்ன்னு சொன்னாங்க. அந்த சமயம் அவளோட வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டு அங்கே தங்கி இருந்தோம். ஒன்பதாவது மாசத்தில் ஒரு நைட் ரெண்டு மணி வாக்கில் அவளுக்கு லேசா வலி வந்தது. By five my son came out after five minutes my daughter followed suite” என்று பெருமிதத்துடன் முடித்தான்.

அமுதா முகத்தில் சிறு வியப்புடன், “நீ பிரசவம் ஆன போது கூட இருந்தியா?”

விஸ்வா, “Of course! நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா ப்ளான் பண்ணி டாக்டர்கிட்டேயும் முன்னாடியே சொல்லி வெச்சு இருந்தோம்”

அமுதா, “வாவ்! How was your experience”

விஸ்வா, “என்னால விளக்க முடியாது”

மனைவிக்கு பிரசவம் ஆவது அதுவும் முதல் முறை ஒவ்வொரு கணவனுக்கும் மறக்க முடியாத, கணவன் மனைவிக்கு இடையே ஒரு இணை பிரியா பாலத்தை ஏற்படுத்தும் தருணம்.

இதை நன்கு உணர்ந்த அமுதா, “ஒவ்வொரு ஸ்டேஜா சொல்லு விஸ்வா”

விஸ்வாவின் மனத் திரையில் அந்த இரவு திரைப் படமாக ஓடத் தொடங்கியது …

அருகில் படுத்து இருந்தவள் அவனை விட்டு விலகி எழுந்து அமர்ந்து இருப்பதை உணர்ந்த விஸ்வா, “ஹனி, என்ன ஆச்சு? எதுக்கு எழுந்து உக்காந்துட்டு இருக்கே?” என்றபடி பின்புறம் இருந்து அவளை அணைத்தான்

அவன் மேல் சாய்ந்தபடி வனிதா, “ம்ம்ம் … வலிக்குது. But don’t worry. லேசாத்தான்”

விஸ்வா, “இது அந்த வலிதானா?”

வனிதா, “Yes I am sure. I think your kids want to get out. ஹாஸ்பிடலுக்குப் போலாம்”

விஸ்வா, “ஒரே நிமிஷம் டார்லிங்க். நான் ட்ரெஸ்ஸைப் போட்டுட்டு வந்துடறேன்”

வனிதா, “ம்ம்ம் ..” என்றபடி அவளும் எழ முயன்றாள்

விஸ்வா, “நீ உக்காந்துட்டு இரு நான் வந்துடறேன். ராமுக்கு மெஸ்ஸேஜ் பண்ணு” என்றவாறு அறைக் கதவைத் திறந்து உரக்க “அத்தை, மாமா வனிதா is having contractions” என்று கூவினான்

வனிதா, “அந்த பேக்”

விஸ்வா, “தெரியும்மா …”

விஸ்வா ஒரு டீ ஷர்ட் ஜீன்ஸை அணிந்து பிரசவத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டியவற்றை நிரப்பி தயாராக வைத்து இருந்த டஃப்ஃபல் பேக் ஒன்றை தோளில் மாட்டிக் கொண்டு அவளைக் கைத்தாங்கலாக எழுப்பி நிறுத்தினான்.

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.