ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

விஸ்வா, “நிச்சயமா. ஒரு வேளை என்னைப் பத்தி நல்லா தெரிஞ்ச எங்க கம்பெனியின் போட்டிக் கம்பெனி என்னை வேலைக்கு எடுத்தா பழைய கம்பெனியின் ரெகமெண்டேஷனை பத்தி கவலைப் படாம இருக்கலாம். ஆனா கெரியர்ன்னு எடுத்துட்டா அது ஒரு ப்ளாக் மார்க்தான்”

அமுதா, “விஸ்வா, இந்தக் காலத்தில் உன்னை மாதிரி யோசிக்கறவங்க ரொம்ப கம்மி”

விஸ்வா, “May be …”

அமுதா, “ஆனா உன் அணுகுமுறை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. Go on”

விஸ்வா, “நான் ஹெஸிடேட் பண்ணறதை புரிஞ்சுட்ட வனிதா தான் எம்.டிகூட க்ளோஸா வேலை செய்யறதுனால நிச்சயம் என்னைப் பத்தி அவர்கிட்டேயும் தேவைப்பட்டா போர்ட் மெம்பர்ஸ்கிட்டேயும் அவளால என்னைப் பத்தின உண்மையை சொல்லி கன்வின்ஸ் பண்ண முடியும்ன்னு சொன்னா … besides … சந்திரசேகரையும் சுமதியையும் நான் முன்னாடியே மீட் பண்ணி இருக்கேன். என்னைப் பத்தி ஒரு அளவுக்கு அவங்களுக்குத் தெரியும்ன்னு சொன்னா. இருந்தாலும் என் இஷ்டம் எதுவானாலும் சரின்னு சொன்னா. ஆனா வற்புறுத்தலை”

அமுதா, “Then what did you decide?”

விஸ்வா, “I decided to give it a shot” என்றவன் முகம் மறுபடி இறுக .. “How I wish I hadn’t!”

அமுதா, “ப்ளீஸ் விஸ்வா! அந்த விஷயத்தை உன் மனசில் இருந்து கொஞ்சம் ஒதுக்கி வை. கஷ்டம்தான் ஒத்துக்கறேன். ப்ளீஸ்” என்ற கெஞ்சினார். தொடர்ந்து, “என்னை உன் அக்கா மாதிரி நினைச்சுக்கோ ப்ளீஸ்”

விஸ்வா, “ஓ.கே .. சில விஷயங்களை நினைச்சுப் பார்க்கும் போது அதுக்கான காரணம் இப்போ புரியுது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அதான் … ”

அமுதா, “நான் உன் கிட்டே பழசை நினைச்சுப் பார்க்கச் சொல்லும் காரணம் புரியுது இல்லையா? உன்னைப் பொறுத்த வரை ஒரு மாசத்துக்கு முன்னாடி வரை உனக்கு எதுவுமே தெரியாது. அந்த மன நிலையை எப்படியாவுது வரவெச்சுக்கோ. ப்ளீஸ்”

விஸ்வா, “ஓ.கே. முயற்சி செய்யறேன்”

அமுதா, “That’s the spirit. I know you can. தனி உணர்வுகளுக்கு எப்படி இடம் கொடுக்காம இருக்கணும்ன்னு உனக்குத் தெரியும். அதுக்காக ராணுவத்தில் பயிற்சி எடுத்துட்டு இருக்கே. நிச்சயம் உன்னால் முடியும். அதனால தான் உங்க கேஸில் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு … ம்ம்ம் … மேல PMLஇல் சேர்ந்ததைப் பத்தி சொல்லு”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.