ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

விஸ்வா, “நடக்க முடியுமா. நான் தூக்கிக்கட்டுமா?”

வனிதா, “ஒண்ணும் வேண்டாம். I weigh like a hippo now. என்னால் நடக்க முடியும்”

அறையை விட்டு வெளியில் வருமுன் அரவம் கேட்டு வத்சலாவும் சுப்புவும் ஹாலுக்கு வந்து இருந்தனர்.

வத்சலா, “டேய், கண்ணம்மா. ரொம்ப வலிக்குதா?” என்று அவள் கேட்டு முடிக்கு முன் வாசலில் காலிங்க் பெல் ஒலித்தது.

விஸ்வா, “இதோ ராம் வந்துட்டான். அத்தை போலாம் வாங்க. மாமா நீங்க அப்பா அம்மாகூட வாங்க”

அரை மணி நேரக் கார் பயணம் …

விஸ்வா, “Are you ok? ரொம்ப வலிக்குதா? Do you feel any liquid discharge?”

வலியினால் நெற்றி சுருங்கி இருந்தாலும் அவன் கரிசனத்தில் மயங்கிய வனிதா முகத்தில் அவள் ட்ரேட் மார்க் குறும்பு படற, “இல்லை. உங்க குழந்தைங்க I think அவங்க அப்பாவை மாதிரி ரொம்ப ப்ளான் பண்ணி வார்னிங்க் கொடுத்து இருக்காங்க”

கார் ஓட்டிக் கொண்டு இருந்த ராம், “டேய், Looks like it is a very well planned invasion of the world”

நால்வரும் சிரிக்க குலுங்கியதில் வலி அதிகரிக்க வனிதா, “ஓ, ப்ளீஸ் ராம். சிரிக்க வைக்காதீங்க” என்று முனகினாள்

கார் மருத்துவமனைக்குள் நுழையுமுன் வாசலில் ஒரு ஸ்ட்ரெச்சர் தயாராக வைக்கப் பட்டு இருந்தது … நேராக பிரசவ அறைக்கு எடுத்துச் செல்லப் பட்டாள். அறை வாசலை அடைந்த விஸ்வாவை வரவேற்ற ஜூனியர் டாக்டர், “சீனியர் வந்துட்டு இருக்காங்க. பக்கத்து ரூமுக்குப் போய் உங்க கை கால் எல்லாம் நல்லா வாஷ் பண்ணிட்டு அங்கே இருக்கும் ஸ்டெரைல் ட்ரெஸ்ஸை போட்டுட்டு வாங்க”

சில நிமிடங்களில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அணியும் அங்கி, குல்லாய், சாக்ஸ் மற்றும் க்ளவுஸ் அணிந்த விஸ்வா பிரசவ அறைக்குள் நுழைந்தான். வனிதாவுக்கு ஜூனியர் டாக்டர் இன்ஜெக்ஷன் கொடுத்துக் கொண்டு இருந்தார்

விஸ்வா, “அது பிரசவ வலி தானா?”

ஜூனியர் டாக்டர், “யெஸ். ஸிம்டம்ஸ் எல்லாம் க்ளியரா இருக்கு. கான்ட்ராக்ஷன் (கருப்பை பிரசவத்தின் போது சுருங்கி சிசுவை வெளியில் தள்ளுவது) அதிகரிக்க இன்ஜெக்ஷன் கொடுத்து இருக்கேன்”

சில நிமிடங்களில் தொடங்கிய வலி அடுத்த இரண்டு மணி நேரத்தில் படிப் படியாக அதிகரிக்க, வனிதாவின் கைகளைப் பற்றியபடி அருகே நின்று இருந்தான். வனிதாவின் பார்வை விஸ்வாவை விட்டு அகலாமல் இருந்தது …

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.