ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

டாக்டர் மதுசூதன், “அது நம்பும் படியா இருந்ததா? இல்லை அவர் பொய் சொல்லற மாதிரி உனக்குத் தோணுச்சா?”

விஸ்வா, “இல்லை உண்மையைத் தான் சொன்னார்”

டாக்டர் மதுசூதன், “சோ, அந்தத் துறையில் அனுபவம் இல்லாத ஒருத்தனை அவர் வேலையில் சேர்த்துக்கறது அவர் நிலையில் இருந்து யோசிச்சா அது ஒரு ரிஸ்க்தான். இல்லையா?”

விஸ்வா, “ஆமா”

டாக்டர் மதுசூதன், “வேலை கொடுக்க அப்படி ஒரு நிபந்தனை போட்டார்ன்னு யாராவுது உனக்கு சொல்லி இருந்தா அதை நீ நம்பி இருப்பியா?”

விஸ்வா, “இல்லை”

டாக்டர் மதுசூதன், “எப்படி சொல்லறே?”

விஸ்வா, “அவர் அடிமட்டத்தில் இருந்து முன்னுக்கு வந்தவர். அதை அவர் எப்பவும் மறக்கலை. நானே அவர் லோ-லெவல் எம்ப்ளாயிஸ்க்கு உதவறதைப் பார்த்து இருக்கேன். தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார். அனாவிசியமா யாரையும் வேலையில் இருந்து விலக்க மாட்டார். எங்க கம்பெனியில் யூனியன் ப்ராப்ளமே வந்தது இல்லை. இதை எல்லாம் வெச்சுப் பார்க்கும் போது அவர் ரொம்ப நேர்மையானவர்ன்னு நினைசேன்”

டாக்டர் மதுசூதன், “நானும் விசாரிச்ச வரையில் வனிதா விஷயத்தில் மட்டும்தான் அவர் அப்படி நடந்துட்டு இருக்கார். He too was sexually frustrated. ”

விஸ்வா, “தெரியும். சுமதி மேடம் சொன்னாங்க”

டாக்டர் மதுசூதன், “வனிதாவின் அழகு வசீகரம் அந்த மன நிலையில் இருந்தவரை அப்படி நிபந்தனை போட வெச்சுது. உன் மேல் வனிதாவுக்கு இருந்த நம்பிக்கை வேறு யாருக்கும் இருந்து இருக்காது. அது வனிதாவுக்கும் தெரியும். உன் நன்மைக்காக சந்திரசேகரின் நிபந்தனைக்கு அவ சம்மதிச்சா. சந்திரசேகர் சபலத்தில் அப்படி நிபந்தனை போட்டார். அவர் செஞ்சது பெரிய தப்பு. ஆனா வனிதாவின் கோணத்தில் பார்த்தா அவ செஞ்சது சரிதான். ஆனா அதை ஒத்துக்க உன் மனம் இடம் கொடுக்கலை” என்று தன் குரலை உயர்த்தி அழுத்தமாக முடித்தார்.

சில நிமிடங்கள் அந்த அறையில் மௌனம் நிலவியது …

டாக்டர் மதுசூதன், “கடைசியா எப்போ நீ வனிதாவுடன் சேர்ந்து ஷாப்பிங்க் போனே?”

விஸ்வா, “போன தீபாவளிக்கு முன்னால் … ” என்று இழுத்த பிறகு, “சாரி, ஞாபகம் இல்லை”

டாக்டர் மதுசூதன், “பெண்களுக்கு ஷாப்பிங்க் போறது மனசுக்கு பிடிச்ச ஒரு விஷயம். கூட புருஷனும் வந்தா அவங்க சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. Did you realize that?”

விஸ்வா, “ஆமா, பத்து கடை ஏறி இறங்கி ஒவ்வொரு கடையிலும் இருக்கற சுடிதார் எல்லாத்தையும் எடுத்து காண்பிக்கச் சொல்லி கடைசியா ஒரு சுடிதார் வாங்குவா. எங்க ரெண்டு பேருக்கு இடையே நிறைய வாக்குவாதம் வரும். ஆனா அவ ரொம்ப சந்தோஷப் படுவா”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.