ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

விஸ்வா, வனிதா இருவரின் கண்களையும் தவிர்த்த காயத்ரி, “எஸ் சார். சொல்லுங்க உங்க போர்டில் மற்றும் நிர்வாகத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யறதா இருக்கீங்க?”

சண்முகம், “முன்னே சந்துரு மேனேஜிங்க் டைரக்டரா இருந்தார். அவர் நிர்வாகப் பொறுப்புக்களை மட்டும் கவனிச்சுட்டு இருந்தார். ஆனா கம்பெனியின் வியாபாரம் மற்றும் முன்னேற்றம் எல்லாம் விஸ்வா கையில் இருந்தது. அவருக்குக் கொடுக்கப் பட்ட பதவிக்கும் அதிகமான பொறுப்புக்களை அவரே எடுத்து செஞ்சுட்டு வந்து இருக்கார். அவரை சீஃப் எக்ஸிக்யூடிவ் ஆஃபீஸரா நியக்க முடிவு செஞ்சு இருக்கோம். தவிற சந்திரசேகரிடம் இருந்த நிர்வாகப் பொறுப்புக்களை ஏத்துக்க வனிதாவை சீஃப் ஆபரேடிங்க் ஆஃபீஸரா நியமிக்க முடிவு செஞ்சு இருக்கோம்”

அங்கு இருந்த விஸ்வா மற்றும் வனிதாவின் முகத்தில் கலவரம் தோன்ற ..

காயத்ரி, “சார், ஒரு தாயா, மாமியாரா உங்க முடிவு எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது, ஆனா இந்த கம்பெனியின் ஆலோசகரா இதை நான் எதிர்க்கறேன்”

சண்முகம், “ஏன்?”

காயத்ரி, “அவங்களோட மண வாழ்க்கை நீடிக்குமா அப்படிங்கற நிலையில் இருக்கு. கம்பெனியில் C.E.Oவுக்கும் C.O.Oவுக்கும் நடுவே சுமுகமான பழக்கம் இருக்கணும். அடிக்கடி அவங்க ரெண்டு பேரும் வேவ்வேறு விஷயங்களைப் பத்தி பேசி முடிவு எடுக்க வேண்டி இருக்கும். இவங்களோட உறவில் இருக்கும் விரிசலினால் கம்பெனியின் எதிர்காலம் பாழாயிடும்”

சண்முகம், “இல்லை மேடம். ரெண்டு பேரும் கம்பெனிக்காக உண்மையா உழைச்சவங்க. உழைச்சுட்டு இருப்பவங்க. இவங்க ரெண்டு பேருக்கும் பதவி மட்டும் கொடுக்கப் போறது இல்லை. இவங்க ரெண்டு பேரையும் … இல்லை இவங்க குழந்தைகள் ரெண்டு பேரையும் பங்குதாரரா ஆக்க முடிவு செஞ்சு இருக்கோம். அந்தக் குழந்தைகள் பதினெட்டு வயசு ஆகும் வரை அவங்களுக்கு பதிலா விஸ்வாவும் வனிதாவும் போர்ட் மெம்பர்ஸா இருக்கணும். இந்தக் கம்பெனியின் எதிர்காலத்துக்கும் அவங்க குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் எந்தக் கெடுதலும் வராம செயல் படுவாங்க அப்படின்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”

காயத்ரியின் கண்கள் பனித்தன ..

விஸ்வா, “எனக்கு இதில் ஒப்புதல் இல்லை”

சண்முகம், “ஏன்? ஏற்கனவே நீ இந்தக் கம்பெனிக்கு ஒரு C.E.Oவாகத்தான் செயல் பட்டுட்டு இருந்தே. உன்னைப் பொறுத்த வரை இது ஒரு பதவி அவ்வளவுதான். பொறுப்புக்கள் எதுவும் புதுசா கொடுக்கப் போறது இல்லை. So I don’t think there is any reason for your objection. unless … வனிதாவல் அந்தப் பொறுப்பை எடுத்து நடத்த முடியாதுன்னு நினைக்கறையா?”

விஸ்வா, “Not at all .. இந்தக் கம்பெனியின் நிர்வாகத்தைப் பத்தி வனிதாவை விட நல்லா தெரிஞ்சவங்க யாரும் இல்லை”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.