ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

கதவை சற்றே திரந்த சந்திரசேகரின் முன்னாள் காரியதரிசி சந்தியா தலையை நீட்டுகிறாள், “மே ஐ கம் இன் சார்?”

விஸ்வா, “எஸ் வாங்க. என்ன விஷயம்?”

சந்தியா, “உங்க கூட தனியா பேசணும்”

விஸ்வா, “நீங்க ஃபோனில் அப்படி சொன்னதால்தான் நான் உங்களை இப்போ வரச் சொன்னேன். உக்காருங்க. என்ன விஷயம்?”

சந்தியா, “I want to apologise to you. உங்க கிட்டே மன்னிப்புக் கேட்க வந்தேன்”

விஸ்வா, “எதுக்கு?”

சந்தியா, “முன் அனுபவம் இல்லாத என்னை சந்திரசேகர் சார்தான் என் மேல் பரிதாபப் பட்டு வேலைக்கு எடுத்தார். இந்தக் கம்பெனி முன்னேறுவது உங்களால்தான் அப்படின்னு சேர்ந்த கொஞ்ச நாளிலேயே புரிஞ்சுட்டேன். நிர்வாகத்துக்கு அவர் முன்னேற்றத்துக்கு நீங்க அப்படின்னு அவரே எங்கிட்டே சொல்லி இருக்கார். நான் வேலைக்கு சேர்ந்து ஆறு மாசத்துக்குப் பிறகு தான் அவருக்கும் வனிதா மேடத்துக்கும் இருக்கும் தொடர்பு தெரிய வந்தது. முதலில் உங்க மேல் அவ்வளவு மதிப்பும் மரியாதையும் வெச்சு இருப்பவர் எப்படி இப்படி நடந்துக்க முடியும்ன்னு நினைச்சேன். இருந்தாலும் அவங்க ரெண்டு பேரையும் பத்தி உங்ககிட்டே எதுவும் சொல்ல மனசு வரலை.”

விஸ்வா, ‘பார்க்க இவ்வளவு அழகா இருக்கா ஒரு வேளை இவளையும் அந்த ஆள் வளைச்சுப் போட்டு இருப்பாரோ’ என்று எண்ணி பிறகு, “ஏன் சொல்ல மனசு வரலை? உன் வேலை போயிடும்ன்னா இல்லை உனக்கும் அவருக்கும் இருந்த உறவு முறிஞ்சுடும்ன்னா?”

அவன் ஒருமைக்குத் தாவியதைப் பொருட்படுத்தாமல் கண் கலங்கிய சந்தியா, “உங்களுக்கு நேர்ந்த அனுபவம் உங்களை அப்படி யோசிக்க வைக்குது. நீங்க நினைக்கற மாதிரி எந்த உறவும் எனக்கும் சந்திரசேகர் சாருக்கும் எப்பவும் இருந்தது இல்லை”

தன் தவறை உணர்ந்த விஸ்வா, “சாரி! என் மனசில் இருக்கும் கோபம் என்னை அப்படிப் பேச வெச்சுது. அதுக்காக நான் உன் கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கறேன். இதைச் சொல்லத் தான் தனியா பேசணும்ன்னு கேட்டியா?” என சகஜமாக ஒருமையில் தொடர்ந்தான்.

சந்தியா, “இல்லை. வனிதா மேடம் என்னை உங்களுக்கு P.Aவா நியமிச்சு இருக்காங்க. விஷயம் தெரிஞ்சும் உங்க கிட்டே மறைச்சு இருக்கேன். நான் உங்களுக்கு P.Aவா இருக்க உங்களுக்கு சம்மதமான்னு தெரிஞ்சுக்கலாம்ன்னுதான் கேட்டேன்”
சற்று நேர யோசனைக்குப் பிறகு

விஸ்வா, “எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை. உனக்கு விஷயம் தெரியும்ன்னு வனிதாவுக்குத் தெரியுமா?”

சந்தியா, “தெரியாதுன்னு நினைக்கறேன். சந்திரசேகர் சாருக்கும் தெரியாது”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.