ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

டாக்டர் மதுசூதன், “ஏன்?”

விஸ்வா, “இவ்வளவு நாளும் என் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்காமல் இருந்தேன். இப்பத்தான் I have started spending quality time with my children. Not only that, நான் இல்லைன்னாலும் வனிதா இல்லாமல் அவங்களால் இருக்க முடியாதுன்னு புரிஞ்சுட்டேன். அவங்களை பிரிஞ்சு இருக்கணும்ன்னு நினைச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”

டாக்டர் மதுசூதன், “விவாகரத்து. அதுவும் சின்னக் குழந்தைகள் இருக்கும் போது ரொம்ப யோசிச்சு முடிவு எடுக்க வேண்டிய விஷயம். விவாகரத்து செய்யறதா வேண்டாமா அப்படிங்கற முடிவு மட்டும் இல்லை. விவாகரத்துக்குப் பிறகு குழந்தைகளுடன் அவங்க உறவு எப்படி இருக்கும் அப்படிங்கறதையும் தீர யோசிச்சு முடிவு எடுக்கணும்”

விஸ்வா, “உங்க அனுபவத்தில் நிச்சயம் இந்த மாதிரி விவாகரத்துக்களை பார்த்து இருப்பீங்க. அந்தக் கேஸ்களில் எப்படி முடிவு எடுத்தாங்க?”

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, நான் ஹாண்டில் பண்ணின கேஸ்களில் விவாகரத்தில் முடிஞ்சவற்றை கை விட்டு எண்ணிடலாம். ஆனா ஒவ்வொரு கேஸுக்கும் வெவ்வேறு காரணங்களும் அடிப்படைகளும் இருந்துச்சு. அதே மாதிரி உன்னுடையதும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கேஸ். ஆனா நான் ஒண்ணு சொல்ல விருப்பப் படறேன். நீ எந்த முடிவுக்கும் இன்னும் தயார் ஆகலை”

விஸ்வா, “என்ன சொல்லறீங்க?”

டாக்டர் மதுசூதன், “சேர்ந்து வாழறது அல்லது விவாகரத்து செய்யறது. இந்த ரெண்டும் கணவன் மனைவி ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசி எடுக்க வேண்டிய முடிவுகள். நான் சொல்வதில் இருக்கும் நியாயம் உனக்குப் புரியுதா?”

விஸ்வா, “எஸ்”

டாக்டர் மதுசூதன், “சோ, நீ இப்போ வனிதாவுடன் பேசத் தயாரா?”

விஸ்வா, “எஸ் .. ”

சில நாட்களுக்குப் பிறகு பெங்களூர் ஆர்.எஸ்.ஐக்கு எதிரில் இருந்த கரியப்பா பூங்காவில் டாக்டர் மதுசூதனுடன் விஸ்வா அமர்ந்து இருக்க டாக்டர் அமுதாவுடன் வனிதா வந்தாள்.

டாக்டர் மதுசூதன், “வாங்க டாக்டர். எப்படி இருக்கு என் கன்ஸல்டேஷன் ரூம்?”

டாக்டர் அமுதா, “I like this setting. ரொம்ப இன்ஃபார்மலா இருக்கு”

டாக்டர் மதுசூதன், “வனிதா, விஸ்வா நீங்க ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசணும். நாங்க இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் இடையே நடக்கும் பரிமாற்றம் அனாவிசியமான சண்டையா வாக்கு வாதங்களா மாறிடக் கூடாது. நீங்க ரெண்டு பேரும் இங்கே உக்காந்து மனம் விட்டு பேசுங்க. நானும் டாக்டரும் கொஞ்சம் தள்ளி நீங்க பேசறது கேட்காத தூரத்தில் உக்காந்துட்டு இருப்போம். ஓ.கே?”

விஸ்வா, “எஸ் … ”

டாக்டர் மதுசூதன், “இன்னொரு விஷயம் கடந்த காலத்தைப் பத்தி பேசும் போது நடந்ததை நடந்த மாதிரி அந்த சமயத்தில் எப்படி யோசிச்சீங்களோ அதை அப்படியே சொல்லணும். Don’t try to justify yourself. நிதர்சனமான உண்மைகளைப் புரிஞ்சுக்க வேண்டிய சமயம் இது”

மனோதத்துவர்கள் இருவரும் விலகிச் சென்ற பின் தம்பதியினருக்கு இடையே மௌனம் நிலவியது …

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.