ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

சண்முகம், “அப்பறம் ஏன் உன்னால் ஒத்துக்க முடியாது?”

விஸ்வா, “அம்மா, ஐ மீன் ஆடிட்டர் மேடம் சொன்ன அதே காரணம்தான்”

சண்முகம், “நாங்க உன் குடும்ப விஷயத்தை ஆஃபீஸில் பேசச் சொல்லலை. அப்படிப் பேசினா ஆஃபீஸ் வேலை கெடும்” என்று சிலாகித்த பிறகு தொடர்ந்து, “ஆஃபீஸ் விஷயங்களைப் பத்தி பேசறதில் என்ன இருக்கு? நீயே சொன்ன மாதிரி இந்தக் கம்பெனியின் நிர்வாகத்தைப் பத்தியும் ஃபைனான்ஸைப் பத்தியும் வனிதாவை விட யாருக்கும் நல்லா தெரிஞ்சு இருக்க முடியாது. மத்த எல்லா விஷயங்களையும் நீதான் பாத்துக்கறே. விஸ்வா, யோசிச்சுப் பார்த்தா நாங்க எடுத்து இருக்கும் முடிவு சரியானதுன்னு உனக்கே விளங்கும்”

விஸ்வா, “அப்பறம் எதுக்கு என் குழந்தைகள் பேரில் ஷேர்ஸ்?”

சண்முகம், “நானும் சுமதியும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் ரொம்ப கடமைப் பட்டு இருக்கோம். கூடவே எங்களை அறியாம ரொம்ப கஷ்டத்தையும் கொடுத்து இருக்கோம். நாங்க பட்ட கடனுக்கு பதிலா, நாங்க கொடுத்த கஷ்டத்துக்கு ஒரு சின்ன பரிகாரமா இந்த பங்குகளை கொடுக்க முடிவு எடுத்தோம்”

விஸ்வா மௌனம் காக்க ..

சண்முகம், “சரி, மத்த கம்பெனி விவகாரங்களைப் பத்தி பேசலாமா?” என்று பேச்சை மாற்ற அந்த போர்ட் மீட்டிங்க் தொடர்ந்தது.

விஸ்வா P.M.Lஇன் C.E.Oஆகவும் வனிதான் அதன் C.O.Oஆகவும் பதவி ஏற்றனர்.

வாரம் ஒரு முறை விஸ்வா நடத்தும் ரிவ்யூ மீட்டிங்கில் சந்திரசேகரின் இடத்தில் வனிதாவும் பங்கேற்கத் தொடங்கினாள் …

விஸ்வா கெஸ்ட் ஹவுஸிலும் வனிதா அவர்களது வீட்டில் குழந்தைகளுடன் வசிப்பது வழக்கமானது. வாரம் சில நாட்களில் விஸ்வா அவர்களது வீட்டு சென்று குழந்தைகளுடன் விளையாடுவான். வனிதாவிடம் அதிகம் பேசாமல் இருப்பினும் அந்த நாட்களில் குழந்தைகளுடன் இரவு உணவை வீட்டில் அருந்திய பிறகு கெஸ்ட் ஹவுஸுக்கு திரும்புவான்.

அவர்கள் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை குழந்தைகளைச் சுற்றி மட்டுமே இருந்தது. அவ்வப்போது வீட்டுப் பராமறிப்பிலும் ஈடுபடுவான்.

ஒரு நாள் …

விஸ்வா தன் அலுவலக அறைக் கதவு தட்டப் படுகிறது

விஸ்வா, “எஸ், கம் இன்”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.