ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

டாக்டர் மதுசூதன், “உன் மனசில் ஆழமா பதிஞ்சு இருக்கும் அந்த காட்சியை அகற்ற வேறு ஒரே ஒரு வழிதான். நீ செக்ஸில் கலந்துக்கணும். வனிதாவை விவாகரத்து செஞ்சா எப்படியும் மத்தவங்க கூடத்தானே உடலுறவு இருக்கப் போகுது? Why wait? உன் ட்ரீட்மெண்டுக்காக ஏன் நீ வேறு ஒரு பெண்ணோடு உடலுறவில் ஈடு படக் கூடாது?”

விஸ்வா, “அவ செஞ்ச தப்பை என்னை செய்யச் சொல்லறீங்களா?”

டாக்டர் மதுசூதன், “அதை தப்புன்னு எடுத்துக்காதே. ட்ரீட்மெண்ட் அப்படின்னு மட்டும் எடுத்துக்கோ”

விஸ்வா மௌனம் காக்க …

டாக்டர் மதுசூதன், “யோசிச்சுப் பாரு. அடுத்த ரெண்டு மாசம் நான் யூ.எஸ் போறேன். சீக்கிரம் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க முடியும்ன்னு நினைச்சேன். எப்படியோ சீக்கிரம் நீ ஒரு முடிவுக்கு வா”

இருவரும் விடை பெற்றனர்.

விஸ்வா அலுவலகத்துக்குள் நுழைந்த போது அன்று ஒரு போர்ட் மீட்டிங்க் இருப்பதாகவும் விஸ்வாவும் அதில் பங்கேற்க அழைக்கப் பட்டு இருப்பதாகவும் அவனுக்கு தகவல் வந்தது …

P.M.L.இன் கான்ஃபரென்ஸ் ரூம் …

விஸ்வா சொன்ன நேரத்திற்கு இரு நிமிடங்கள் முன்னால் சென்று அமர்ந்தான். சற்று நேரத்தில் சண்முகம், சுமதி மற்றும் வனிதா உள்ளே நுழைந்து மற்ற இருக்கைகளில் அமர்ந்தனர்.

விஸ்வா வனிதாவின் கண்களைத் தவிர்த்து, “என்ன சார்? எதுக்கு போர்ட் மீட்டிங்கில் என்னைக் கலந்துக்க சொல்லி இருக்கீங்க?”

சன்முகம், “விஸ்வா, இவ்வளவு நாளும் இந்தக் கம்பெனியில் போர்ட் மீட்டிங்க் அப்படின்னா நான், சுமதி, சந்துரு அப்பறம் உங்க அம்மா கம்பெனியில் இருந்து நியமிக்கப் பட்ட ஆடிட்டர் இந்த நாலு பேர் மட்டும்தான் இருப்போம். நிறைய சமயம் காயத்ரி மேடமே இதில் கலந்துக்க வருவாங்க” என்று அவனுடைய தாயைப் பற்றிய அவனுக்கு இதுவரை தெரியாத உண்மையைச் சொன்னார்.

தொடர்ந்த சண்முகம், “இன்னைக்கும் தானே கலந்துக்க வர்றதாத்தான் சொல்லி இருக்காங்க. அவங்க வந்ததுக்குப் பிறகு கம்பெனி மேட்டர்ஸைப் பேசலாம். சரியா?”

விஸ்வா விட்டுக் கொடுக்க விரும்பாமல், “அது ஓ.கே சார், என்னை எதுக்கு வரச் சொல்லி இருக்கீங்க?”

சண்முகம், “சந்துரு போனதுக்குப் பிறகு கம்பெனி நிர்வாகத்திலும் அதன் முன்னேற்றத்திலும் மாற்றங்கள் தேவைன்னு உனக்கே தெரியும் விஸ்வா. சந்துருவுக்குப் பிறகு அவர் ஏத்துட்டு இருந்த பொறுப்புகளை மத்தவங்க ஏத்து நடத்தணும். அந்த மாற்றங்களை முடிவு செய்யத்தான் இந்த மீட்டிங்க்”

சற்று நேரத்தில் விஸ்வாவின் தாய் காயத்ரி வந்து அமர்ந்தார்.

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.