ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

டாக்டர் மதுசூதன், “அப்பறம் ஏன் நீ அவகூட ஷாப்பிங்க் போறது ரொம்ப குறைஞ்சுது?”

விஸ்வா, “I used to be busy. அத்தை, அம்மா, சில சமயம் ராம் இப்படி யாராவுது இருப்பாங்க அவங்க கூட போறேன்னு சொல்லுவா. நானும் ஓ.கேன்னு போகச் சொல்லுவேன்”

டாக்டர் மதுசூதன், “உன் கூடத்தான் ஷாப்பிங்க் போகணும்ன்னு நீ சொல்லி இருந்தா வனிதா என்ன செஞ்சு இருப்பா?”

விஸ்வா, “வருத்தப் பட்டு இருப்பா. சண்டை போட்டு அவங்ககூட போக என்னை சம்மதிக்க வெச்சு இருப்பா”

டாக்டர் மதுசூதன், “ஸ்டில், உன் கூட போகும் சந்தோஷம் அவளுக்கு அவங்க கூட போகும் போது வந்து இருக்குமா?”

விஸ்வா, “நோ”

டாக்டர் மதுசூதன், “உனக்கு லைட் மியூசிக் ரொம்ப பிடிக்கும் இல்லை? வனிதாவுக்கு எந்த மாதிரி சங்கீதம் பிடிக்கும்?”

விஸ்வா, “மோஸ்ட்லி வெஸ்டர்ன். ராக் மியூசிக் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். லாஸ்ட் இயர் ப்ரையன் ஆடம்ஸ் கான்ஸர்ட் பெங்களூரில் வந்தது. எனக்கு இன்டரஸ்ட் இல்லை. அவளும் ராமும் போனாங்க”

டாக்டர் மதுசூதன், “உன் கூட போகாமல் ராமை அழைச்சுட்டு போறாளேன்னு நீ பொறாமைப் பட்டாயா?”

விஸ்வா, “நோ”

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, செக்ஸ்ஸுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்ன்னு தெரியுமா?”

விஸ்வா, “ம்ம்ம் … தெரியலை”

டாக்டர் மதுசூதன், “ஏன்னா procreation, புத்திரவிருத்தி அப்படிங்கற புனிதமானது செக்ஸ் மூலம்தான் சாத்தியம். நீ உன் குழந்தைகளை உறுவாக்க ஈடுபட்ட ஒரு காரியத்தில் வனிதா வேறு ஒருத்தனுடன் ஈடுபட்டா அப்படிங்கற கோணத்தில் பார்க்கறே. யோசிச்சுப் பாரு உனக்கே புரியும்”

விஸ்வா மௌனம் காக்க …

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.